சூர்யா சொன்ன வார்த்தை,கண்கலங்கி நின்ற விஜி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி சுந்தரவல்லி இடம் விவேக் அண்ணா இது மாதிரி பண்ணி இருக்க மாட்டாரு என்று சொல்ல நீ எதுக்கு பேசிகிட்டு இருக்க நீ போய் அங்க நில்லு சொல்லி அனுப்பி விட்டு, சின்ன வயசுல இருந்து விவேக் இங்க வந்து போய்க்கிட்டு இருக்கான் அவனை நான் ஸ்டாஃபா பார்த்தது இல்ல ஆனா அவன் இப்படி பண்ணுவான் என்று நினைக்கல என்று சுந்தரவல்லி சொல்லுகிறார். இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவான் என்று சொல்ல விஜி நீங்க சூர்யா அண்ணா கிட்ட கேளுங்க அவரே சொல்லுவாரு என்று சொல்ல, அப்போ நாங்க சொல்றத நீ நம்ப மாட்டியா என்று சொல்லிவிட்டு விவேக் பணத்தை எடுத்து பேக்கில் வைக்கும் வீடியோவை காட்டுகிறார் எனக்கு இதை பார்க்கும்போது நம்ப முடியல இருந்தாலும் அவர் அப்படியே விடாமல் நீங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வர காப்பாத்துங்க என்று கேட்கிறார்.

உடனே மாதவி இவளை பாக்கும்போது பாவமா இருக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க என்று சொல்ல, சரி மேல போகலாம் என விஜய் அழைத்து மேலே செல்கின்றன. கல்யாணம் நந்தினியிடம் இது எதர்ச்சியா நடந்தது கிடையாது. இதுல ஏதோ பெரிய சதி திட்டம் இருக்கு என்று சொல்ல அவங்க என்ன பண்ணாங்க என்று கேட்க கோபம் அவங்க மேல இல்ல உன்ன பலியாடா ஆக தான் இந்த விஷயம் என்று சொல்லுகிறார். என்ன நடந்தாலும் பரவாயில்லை விவேக் அண்ணா வெளியில் வரணும் இப்போது அது மட்டும் தான் என்னோட மனசுல ஓடிக்கிட்டு இருக்கு என்று சொல்லுகிறார். சுந்தரவல்லி ரூமுக்கு வந்து உட்கார்ந்தவுடன் போலீஸ் ஃபோன் பண்ண ஸ்பீக்கரில் போட்ட சுந்தரவல்லி பேசுகிறார்.

கேஸ்ல பக்காவா இருக்கு ஜெயில்ல 10 வருஷம் போட்டாலாமா என்று கேட்க விஜி வேண்டாம் என்று சொல்லுகிறார் உடனே நான் கொஞ்ச நேரத்துல கூப்பிடுறேன் என சுந்தரவல்லி போனை வைக்கிறார். நான் என்ன சொன்னாலும் நீ செய்வீயா என்று கேட்க விஜி செய்கிறேன் என சொல்லுகிறார். நந்தினி முக்கியமா இல்ல உன் புருஷன் முக்கியமா என்று கேட்க விஜய் யோசித்து விட்டு புருஷன் தான் எனக்கு சொல்லுகிறார் உடனே சுந்தரவல்லி நேரா சூர்யா ரூமுக்கு போய் நந்தினி இந்த வீட்ல இல்ல அவ அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டா என்று சொல்லிட்டு வந்தேன்னா பத்திரமா உன் புருஷன் வீட்டுக்கு வந்துருவான் என்று சொல்லுகிறார். போய் நாங்க சொல்றத செய் என்று சொல்ல, விஜி அமைதியாகவே இருந்துவிட்டு நான் இப்படி ஒரு விஷயத்தை பண்ணிட்டு வீட்டுக்குள்ள போவதற்குள் என் புருஷன் வந்து நந்தினிக்கு இப்படி ஒரு துரோகத்தை பண்ணிட்டு என்னை செருப்பால அடிச்சா என்னால என்ன பண்ண முடியும் நீங்க எப்ப ஐ ஆர் போட சொல்லுங்க என் புருஷன் எப்படி காப்பாத்தணும்னு எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு வந்துவிடுகிறார்.

கோபமாக வெளியில் வந்த விஜி நந்தினி இடம் பேசாமல் அமைதியாக வேகமாக செல்லுகிறார் உடனே பின்னாலே வந்த நந்தினி என்னாச்சு அக்கா சம்மதிச்சுட்டாங்களா என்று கேட்க ஒத்துக்கிட்டாங்க ஆனா கண்டிஷன் போட்டு இருக்காங்க என் புருஷன காப்பாத்தணும்னா உன் வாழ்க்கையை பணயம் வைக்கணுமாம் என்று சொல்லுகிறார். இப்போ நான் சூர்யா அண்ணன் கிட்ட போய் நீங்க இப்படி இருக்கிற நிலைமையும் அவளுக்கு அவ குடும்பமும் தங்கச்சி கூட தான் முக்கியம்னு போயிட்டான்னு சொல்ல சொல்றாங்க இவங்க எல்லாம் என்ன மனுஷன் என்று எனக்கு தெரியல, நான் எப்படி நந்தினி அப்படி சொல்ல முடியும் என்று கேட்க நீங்க சொல்ல வேண்டியதுதானகா என்று சொல்லுகிறார். ஏற்கனவே இவங்க எல்லாரும் சொல்லியும் அவர் நம்பல அதனாலதான் என்ன வச்சு சொல்ல சொல்றாங்க நான் சொன்னா சூர்யா அண்ணன் நம்பிடுவாரு என்று சொல்லுகிறார்.

அவர அரெஸ்ட் பண்ணி உள்ள வச்சுட்டு என்கிட்ட வந்து யாரும் பேசிக்கிட்டு இருக்காங்க பிறகு மேலே மூவரும் இவர்கள் பேசுவதை கவனித்துக்கொண்டு இருக்கின்றனர். நந்தினி நீங்க போய் அவர்கிட்ட அவங்க சொன்னதை சொல்லிடுங்க என்று சொல்ல என்னால பச்சை பொய் சொல்ல முடியாது நான் என்ன நடந்தாலும் பார்த்துக்கிறேன் என்று சொல்ல, அவளையே கதறி அடிச்சுகிட்டு வந்து நான் சொல்றேன்னு சொல்ல வைக்கிறேன் என சொல்லிவிட்டு போலீஸ்காரருக்கு போன் போட்டு சில விஷயங்களை சொல்லுகிறார். உடனே அவர்கள் விவேக் கட்டிப்போட்டு படுக்க வைக்க அவர் நான் எந்த பணத்தையும் திருடல என்று சொல்லுகிறார் உடனே அவர்கள் இவன் போன எடுத்து அவன் பொண்டாட்டிக்கு போன் போட்டு ஸ்பீக்கரில் போடு அடிக்கிற அடியில இவ கத்துறது அவன் பொண்டாட்டிக்கு கேட்கணும் என்று சொல்ல என்னால் அடி தாங்க முடியாது சார் வேண்டாம் என்று சொல்ல மறுப்பக்கம் நந்தினி விஜியிடம் என்னால் அப்படி சொல்ல முடியாது என்று உறுதியாக இருக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

இன்று வெளியான ப்ரோமோவில் நாங்க எத்தனை தடவை சொன்னாலும் நீ நம்ப மாட்டியா என்று கேட்க நந்தினி இங்கதான் இருக்கா என்று சூர்யா உறுதியாக சொல்லுகிறார் மறுபக்கம் நந்தினி விஜி காலில் விழுந்து தயவுசெய்து போய் சொல்லுங்க என்று சொல்லி அனுப்புகிறார். சூர்யாவிடம் வந்து விஜி நின்றவுடன் அவ இங்கதான் இருக்கா எனக்கு பீல் ஆகுது நீ போய் அவளை கூட்டிட்டு வா என்று சொல்ல விஜி என்ன சொல்வதெல்லாம் புரியாமல் கண் கலங்கி நிற்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் புதிய அப்டேட்

விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…

13 hours ago

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu!

சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…

13 hours ago

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘SIGMA’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு!

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்​யின் கடைசிப்படமாக…

13 hours ago

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…

13 hours ago

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…

14 hours ago

பராசக்தி படம் குறித்து வெளியான தரமான தகவல்..!

பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…

16 hours ago