சூர்யா சொன்ன வார்த்தை,கடுப்பான சுந்தரவல்லி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தும் லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி உன்ன பிராடு என்று சொல்லும் போதெல்லாம் ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்கிட்டு வந்து நின்னாரே அவருக்கு துரோகம் பண்ணி இருக்கியே உனக்கு அசிங்கமா இல்லையா என்று கேட்க சுரேகா மாதவி என அனைவரும் சேர்ந்து சுந்தரவல்லியை ஏத்தி விட, சுந்தரவல்லி இன்னும் கோபப்பட்டு பேசுகிறார். ஒழுங்கா உண்மைய ஒத்துக்கோ ஒழுங்கா உண்மையை ஒத்துக்கிட்டு என் புருஷன் காலையும் உன் புருஷன் காலையும் விழுந்து மன்னிப்பு கேட்டுட்டு ஊர பார்த்து ஓடிடு இல்லனா குடும்பத்தோட களி வேண்டியதாயிடும் என மிரட்டி விட்டுச் செல்ல நந்தினி, என்ன செய்வது என புரியாமல் கதறியழ கல்யாணம் கடைசியா அய்யா கூட உன்னை சந்தேகப்படற மாதிரி ஆயிடுச்சு அம்மா என்று சொல்ல, நந்தினி கதறி அழுகிறார்.

மறுபக்கம் அர்ச்சனா குடித்துக்கொண்டே டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க மினிஸ்டர் வந்தவுடன் அவரையும் சேர்த்து இருவரும் டான்ஸ் ஆடுகின்றனர். என்ன விஷயமா என்று கேட்க, அந்த நந்தினியை வீட்டை விட்டு துரத்த என்ன பண்ணனும் அதை தான் பண்ணிக்கிட்டு இருக்கேன் என்று சொல்ல, ஏற்கனவே அந்த வீட்டுல இருக்கிறவங்க எல்லாரும் நந்தினிக்கு எதிராகிட்டாங்க அதுல மெயின் பில்லர் இருந்தது அருணாச்சலம் தான் அவரையும் உடைச்சுட்டேன் இப்ப மொத்தமே காலி எனக்கு ரொம்ப ஜாலி என்று மீண்டும் சந்தோஷமாக டான்ஸ் ஆடி எல்லாத்துக்கும் காரணம் நீங்கதான் எல்லாத்தையும் சேர்த்து வச்சு ஒரு பிளான் பண்ணிட்டேன். இப்போ அவள விரட்டி அடிச்சா யாரும் கேட்க கூட ஆள் இல்ல என்று சொல்ல,சூப்பர்மா நான் போய் தூங்குறேன் நீ என்ஜாய் பண்ணு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். கிச்சனில் நந்தினி அழுது கொண்டிருக்க சூர்யா ஃபுல் போதையில் தடுமாறிக் கொண்டே வீட்டுக்கு வந்து நந்தினி என கூப்பிட்டுக் கொண்டே மேலே வந்து தேடுகிறார்.

ரூமில் இல்லாததால் நேராக கிச்சனுக்கு வந்து தேட நந்தினி அழுது கொண்டு இருப்பதை கவனிக்கிறார். முதல்ல எழுந்திரு நந்தினி என்னாச்சு எதுக்கு அழுவுற என்று கேட்கிறார். உடனே கல்யாணம் வர நந்தினி எதுக்கு அழுது கிட்டு இருக்கு நீ ஏதாவது சொன்னியா என்று கேட்க கல்யாணம் அதான் சின்ன ஐயா கேக்குறாருல்ல நடந்ததை எல்லாம் சொல்லு என்று சொல்ல நந்தினி வேண்டாம் என்று சொல்லுகிறார். உடனே சூர்யா கல்யாணத்திடம் கட்டாயப்படுத்தி என்ன நடந்துச்சு என்று கேட்கிறார். வேறு வழி இல்லாமல் கல்யாணம் நடந்த உண்மைகளை சூர்யாவிடம் சொல்லி விடுகிறார். அம்மா பேசுனது கூட பெருசா எடுத்துக்கல பெரிய ஐயா கிட்ட நான் எந்த தப்பும் பண்ணல நம்புங்க என்று காலில் விழுந்து கெஞ்சிச்சு ஆனா பெரிய ஐயா நிக்காம போயிட்டாரு யாருமே கை கொடுக்க ஆள் இல்லை என்று கல்யாணம் அழுது கொண்டே சூர்யாவிடம் சொல்கிறார். நீங்களே சொல்லுங்க ஐயா தானே நந்தினிக்கு சப்போர்ட்டா இருந்தாரு அவரு எப்படி சொன்னதுனால தான் நந்தினி அழுது கிட்டு இருக்கு என்று சொல்ல சூர்யா டாடி உள்ள தானே இருக்காரு என்று கோபமாக சொல்லிவிட்டு ரூமின் கதவை தட்டுகிறார். சுந்தரவல்லி அருணாச்சலம் வெளியில் வருகின்றனர். நீங்களும் ஏன் இந்த கும்பலை சேர்ந்தீங்க என்று கேட்கிறார் பிறகு வீட்டில் இருக்கும் அனைவரும் வந்து விடுகின்றனர். என்னடா ஓவரா கத்துற ஒழுங்கா இருக்க சொல்லுங்க என்று சொல்ல இருக்கிறவங்க ஒழுங்கா இருந்தா நான் ஏன் கத்த போறேன் என்று கேட்கிறார்.

சூர்யா அருணாச்சலத்திடம் இவங்க எல்லாம் என்ன வேணும்னாலும் நினைக்கட்டும் என் கோபம் எல்லாம் உங்க மேல தான டாடி செக் எடுத்துட்டு போய் அவ தங்கச்சி படிப்புக்கு கொடுத்திருப்பா என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவ எப்படிப்பட்ட ஆள் என்று உங்களுக்கு தெரியாதா? நீங்க எப்படி டாடி அமைதியா போலாம் இவங்க எல்லாரும் சேர்ந்து செய்யாத தப்புக்கு நந்தினி மேல திருட்டுப் பழி சொன்னா நீங்க நந்தினி அப்படிப்பட்ட பொண்ணு இல்ல அவள அடுத்தவங்க காசுக்கு ஒரு ரூபா கூட ஆசைப்பட மாட்டா என்று நீங்க சொல்லி இருக்கலாம் இல்ல டாடி நீங்க சப்போர்ட் பண்ணி இருக்கலாம் இல்ல அப்ப நீங்களும் நந்தினியை தப்பா நினைச்சுட்டீங்க இல்ல சொல்லுங்க டாடி என்று கோபமாக கேட்கிறார்.என்ன டாடி நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் அமைதியா இருக்கீங்க அப்ப நீங்களும் நந்தினி திருடிணு நினைக்கிறீர்களா என்று சொல்ல அருணாச்சலம் எதுவும் பேசாமல் இருக்க உடனே சுந்தரவல்லி என்னடா நான் பார்த்துகிட்டு இருக்கேன் ஓவரா பேசிகிட்டு இருக்க அவ வந்த உடனே உன் காதுல ஓதிவிட்டுட்டாளா அவ என்ன இங்கிலாந்து ராணியா அவளுக்கு ஓடிவந்து சப்போர்ட்டுக்கு வர எல்லாம் எங்களுக்கு தெரியும் போய் படுடா என்று சொல்ல மரியாதை கெட்டுப் போடும் அவ்வளவுதான் சொல்லிட்டேன் என்று சூர்யா கோபப்பட மாதவி அம்மாவை எதுக்கு அப்படி பேசுற என்று கேட்க அமைதியா உள்ள போ என அதட்டுகிறார். நந்தினிக்காக நான் இருக்கேன் நான் கேட்டதுக்கு ஒன்னும் நீங்க பதில் சொல்லல நீங்க அப்படி நினைச்சீங்கன்னா ஒரே வார்த்தை சொல்லுங்க நானே கூட்டிட்டு போயி அவங்க வீட்டுல விட்டுட்டு வந்துவிடுகிறேன். நீங்க அமைதியா இருக்கறதுனால எதுவும் ஆகப்போறது இல்ல இங்க இருக்குறவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை அவங்க என்ன பேசினாலும் என்ன நினைச்சாலும் எனக்கு பிரச்சனை இல்லை என்று சொல்ல அருணாச்சலம் அமைதியாகவே இருக்கிறார்.

நீங்க என்னோட டாடி, நான் நம்பற டாடி, நீங்க என்ன சொன்னாலும் பரவால்ல நீங்க பதில் சொல்லுங்க என்று சொல்ல சுந்தரவல்லி ஹீரோ சார் தான் கேட்கிறார் இல்ல சொல்லுங்க என்று சொல்ல, சூர்யா என்னோட டாடி என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரிஞ்சே ஆக வேண்டும் என்று சொல்ல, நந்தினி இத செஞ்சிருக்க மாட்டான்னு நான் நம்புகிறேன் என அருணாச்சலம் சொல்ல சூர்யா நிம்மதி அடைகிறார் நந்தினி இல்லன்னா அப்போ நம்ம வீட்ல இருக்கிற செக் எப்படி ஸ்கூலுக்கு போச்சுன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன் நந்தினி தவிர இந்த வீட்டில இருக்கிற எல்லார் மேலயும் எனக்கு சந்தேகம் இருந்தது அதனாலதான் அமைதியா போயிட்டேன், ஆனா நான் அப்படி போயிருக்க கூடாது அவ அப்படி செஞ்சிருக்க மாட்டான்னு நான் சொல்லி இருக்கணும் எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு நந்தினி ஓட மனசு எப்படி கஷ்டப்பட்டு இருக்குனு எனக்கு புரியுது சாரிடா சூர்யா, சாரிமா நந்தினி என்று சொல்ல சுந்தரவல்லி கோபமாக உள்ளே சென்று விடுகிறார். உடனே நந்தினி நீங்க என்ன தப்பா நினைச்சுட்டீங்களோனு நான் நிலை குலைந்து போயிட்டேன் ரொம்ப நன்றி ஐயா என்று சொல்லி காலில் விழப் போக இன்னைக்கு மட்டும் இல்லமா என்னைக்குமே நான் உன்னை சந்தேகப்பட மாட்டேன் என சொல்லுகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் இதுக்கு மேல அவ இந்த வீட்ல இருக்கக்கூடாது கண் காணாத இடத்துக்கு போய்ட சொல்லுங்க என்று சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் சொல்லுகிறார். மறுபக்கம் சூர்யா தடுமாறி நந்தினி மேல் விழ நந்தினி முடி சூர்யாவின் சட்டையில் மாட்டி விடுகிறது.

நந்தினி அய்யோ வலிக்குது பார்த்து என்று சொல்ல சுந்தரவல்லி இந்த சத்தத்தை கேட்டு உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா என்று கத்த உடனே சூர்யா அப்படியே கீழே வந்து இந்த முடி தான் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு என்று சொல்லுகிறார். உன்கிட்ட பிடிச்சதே இந்த முடிதான் என்று சொல்ல சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று பல்வேறு…

2 days ago

லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட தமன்னா..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தமன்னா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர்…

2 days ago

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

இட்லி கடை படத்தின் 2 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

2 days ago

காந்தாரா சாப்டர் 1 திரைவிமர்சனம்

காந்தாரா படத்தின் கதை நிகழ்காலத்தில் நடந்த நிலையில், அதற்கு முந்தைய காலகட்டங்களில் நடக்கும் நிகழ்வுகளை கூறும் கதை தான் காந்தாரா…

2 days ago

காந்தாரா 2 : ருக்மணி வசந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…

2 days ago

சூர்யா பேசிய பேச்சு, கடுப்பான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

2 days ago