moondru mudichu serial promo update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சொந்தத் தம்பி என்று கூட பார்க்காமல் இப்படி பண்ணாங்க ஆனா சுந்தரவல்லி அம்மா அவங்க கிட்ட எதுவுமே கேட்கல என்று சொல்லிவிட்டு மேலே ஸ்லைடு கட்டி விட்டது என்னாச்சு என்று சொல்ல அதை இன்னும் யாரும் பாக்கலாமா பார்த்திருந்தாலும் பூகம்பம் வெடிச்சு இருக்கோம் என்று சொல்லி விட்டு நாம போய் மேல பார்க்கலாம் என்று வர, ஒரு பக்கம் சூர்யா நந்தினி என கத்துகிறார். மாதவியும் அசோகனும் ரூமுக்குள் வர சூர்யா கடுப்பாகி திட்டுகிறார். முதல்ல என் போன் எங்க என்று கேட்க டாக்டர் உன்கிட்ட போன் குடுக்க கூடாதுன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லி பொய் சொல்லுகின்றனர்.
அப்பா உன் போனை லாக் பண்ணி வச்சிருக்கார் என்று சொல்ல சரி உன் போனை கொடு நான் டாடி கிட்ட போன் பேசணும் என்று சொல்ல அசோகன் மாதவி போனை புடுங்கி கொடுக்க சூர்யா அருணாச்சலத்திற்கு போன் போட ஸ்விட்ச் ஆஃப் என வருவதை பார்த்து சூர்யா கடுப்பாகிறார். இந்த ரூமை விட்டு எல்லாரும் வெளியே போங்க என்று சொல்லித் திட்டி அனுப்ப மாதவி என் போனை எடுக்க அவன்கிட்ட கொடுத்தீங்க என்று கேட்க இதில் தான் அசோகனோட புத்திசாலித்தனம் இருக்கு நான் தான் என் நம்பரை உன்னோட போன்ல அப்பான்னு என்னோடு நம்பர் சேவ் பண்ணி ஏன் போன்ல பிளைட் மூடில் போட்டுட்டேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார்.
மறுபக்கம் சூர்யா தொங்க விட்டிருக்கும் பலகையைப் பார்த்து அதை படிக்க முயற்சி செய்து கட்டிலில் இருந்து உருண்டு வந்து கீழே விழுந்து விடுகிறார் ஆனால் நந்தினி அந்தப் பலகையை மேலே இழுத்து விடுகிறார். சூர்யா கொஞ்சம் கொஞ்சமாக முயன்று வர அதற்குள் மாதவி அசோகன் அனைவரும் வந்து விடுகின்றனர் அங்கு ஏதோ தொங்க விட்டிருந்தாங்க என்று சொல்ல அங்கு எதுவும் இல்லை என அனைவரும் சொல்லியும் சூர்யா நம்ப மறுக்கிறார். மீண்டும் நந்தினி நம்ப சூர்யா சார் எப்படியாவது பார்ப்பார்கள் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்று இருவரும் இறக்க இவர்கள் அங்க எந்த பலகையும் இல்லை என்று சொல்லுகின்றன. ஒரு வழியாக சூர்யாவை சமாதானப்படுத்தி அவர்கள் மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விடுகின்றனர்.
மாதவி சூர்யா எதையோ பார்த்து இருக்கான் அவன் போதையிலேயே தெளிவா இருக்கிற ஆளு ஏதாவது ஒன்னு இருக்கும் என்று சொல்லி பால்கனியில் வந்து பார்க்க பலகையில் எழுதி இருக்கும் விஷயத்தை மூவரும் பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். உடனே அந்த பலகையை கழட்டி விட்டு அசோகன் ஒரு கல்லை தொங்க விட்டு விடுகிறார். உடனே அதை சுந்தரவல்லி இடம் எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கின்றனர் இதை பார்த்து கடுப்பாக இவர் அதை அவன் பாத்துட்டானா என்று கேட்ட இல்லை என்று சொல்லுகின்றனர். இதுக்கு மேல அவளை இங்க விடக்கூடாது வீட்டை விட்டு துரத்தி ஆகணும் முதல்ல நீங்க விஜி இடம் சொல்லி முதல்ல நந்தினி இங்கே இல்லைன்றத சொல்லி சூர்யாவா நம்ப வைங்க என்று சொல்ல சுந்தரவல்லி அசோகனிடம் சில விஷயங்களை சொல்லி நான் சொல்லுவது போல செய்ங்க என்று பிளான் போடுகிறார். இதில் எதுவுமே மாறக்கூடாது என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி சூர்யாவிடம் இருந்து நந்தினியை மொத்தமாக பிரிக்க பெரிய திட்டத்தை போட்டுள்ளார். அசோகணை வைத்து ஒரு கவரில் பணத்தை வைக்க விக்ரம் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு போகும் போது வழியில் போலீஸ் அவரை மடக்கி பிடித்து விடுகின்றனர்.விஜியுடனே நந்தினி இடம் வந்து உங்க அண்ணனை போலீஸ் புடிச்சிட்டு போய்ட்டாங்க என்று சொல்ல சுந்தரவல்லி அம்மா கிட்ட சொன்னா விட சொல்லுவாங்க என்று சொல்ல சொன்னதே அவங்க தான் என்று சொல்ல நந்தினி அதிர்ச்சி அடைகிறார்.
உடனே சுந்தரவல்லி விஜி இடம் நேரா சூர்யா ரூமுக்கு போயிட்டு நந்தினி இந்த வீட்டை விட்டு ஒரே போயிட்டான்னு நீ சூர்யா கிட்ட சொல்லணும் என்று சொல்லிவிட்டு உனக்கு நந்தினி முக்கியமா இல்ல உன் புருஷன் முக்கியமா என்று கேட்கிறார் நந்தினி விஜி அக்கா சொல்ல போற வார்த்தைல தான் முடிவு இருக்கு என்று சொல்லி நினைக்கிறார் விஜி என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
மாஸ்க் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலம்…
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…