சூர்யா கேட்ட கேள்வி,நந்தினி சொன்ன பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா , அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் கல்யாணம் நந்தினிக்கு எதுவா இருந்தாலும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி ஆறுதல் சொல்லிவிட்டு வெளியே செல்கிறார். பிறகு சூர்யா நண்பன் மற்றும் விஜி மூவரும் ஒரு கடையில் வந்து இறங்கி நல்லா சுத்தி பார்த்து இதெல்ல நந்தினிக்கு பிடிச்ச ஒரு கிப்ட்டா வாங்குங்க என்று சொல்லி உள்ளே அனுப்புகின்றனர். உடனே விஜி நம்பலும் ஒன்னு வாங்கணும்ங்க என்று சொல்ல சரி வாங்கிடலாம் என்று மூவரும் வருகின்றன. உங்களுக்கு ஏதாவது ஐடியா கிடைச்சுதா என்று சொல்ல என்ன வாங்கறதுன்னு தெரியல என்று சொல்லுகிறார். விஜி நந்தினிக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்கு தெரியாதா என்று சொல்லுகிறார். எனக்கு எதுவுமே தெரியாது என்று சூர்யா சொல்ல,விஜி கஷ்டம் ரொம்ப கஷ்டம் என்று சொல்லுகிறார்.

உடனே சூர்யாவின் நண்பர் உடனே நந்தினிக்கு போன் போட்டு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு கேளு என்று சொல்ல சூர்யா நந்தினிக்கு போன் போடுகிறார். எங்க இருக்க நந்தினி என்கிட்ட வீட்லதான் இருக்கேன் என்று சொல்லுகிறார். உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்க, என்ன பிடிக்கும்னா ஒன்று கேட்க என்ன சாப்பாடு, எந்த கலர், ஏதாவது வாங்கணுமா ஏதாவது இருந்தா சொல்லு என்று சொல்லுகிறார். உடனே நந்தினி இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும் என்று கேட்க, உனக்கு புடிச்சதை சொல்லு நந்தினி என்று சொல்ல, புடிச்சத சொல்லவா பிடிக்காததை சொல்லவா என்று சொல்லி, புடிச்சது என்னோட குடும்பம் பிடிக்காதது நீங்கதான் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். உடனே விஜி நம்மலே ஏதாவது வாங்கிக் கொடுத்திடலாம் நான் பக்கத்துல இருக்குற துணி கடையில் போய் ஒரு சாரி வாங்கிட்டு வரேன் நீங்க பாத்துட்டு இருங்க என்று சொல்லிவிட்டு அவர் செல்ல சூர்யா கடையில் இருக்கும் பொருட்களை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

சூர்யா ரொம்ப நேரம் பார்த்து எதுவும் கிடைக்காததால் இது ரொம்ப பெரிய டாஸ்கா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்க, அவரது நண்பர் ஏற்கனவே பொண்ணுங்களுக்கு கிப்ட் கொடுக்கணும்னா கஷ்டம் அதுலயும் உன் விஷயம் ரொம்ப கஷ்டம் என்று சொல்ல நீ கொஞ்ச நேரம் வெளியே போ நான் வாங்கிட்டு வரேன் பாரு என்று சொல்லுகிறார். வெளியில் வந்ததும் விஜி புடவை வாங்கிக் கொண்டு வந்து விடுகிறார். உடனே சூர்யாவும் கிப்ட் பேக் பண்ணி வாங்கி கொண்டு வர என்ன வாங்கினீங்க என்று கேட்க அது சர்ப்ரைஸ் என்று சொல்லி மூவரும் காரில் கிளம்புகின்றனர். மறுபக்கம் லேடிஸ் கிளப் மூலமாக சுந்தரவல்லிக்கு ஒரு பங்க்ஷன் நடக்க அவர்களிடம் சுந்தரவல்லி பேசிக் கொண்டிருக்கிறார். சுரேகா மாதவியிடம் அம்மா என்ன பண்ணிட்டாங்கன்னு இந்த அவார்ட் கொடுக்கிறார்கள் என்று சொல்ல அமைதியா இரு அம்மாக்கு காதுல விழப்போகுது என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த இடத்தில் நந்தினி டீ எடுத்துக் கொண்டு வர இது என்ன கலரா இருக்கு என்ற சுரேகா கேட்க இது செம்பருத்தி இலை டீ என்று சொல்ல, சரி போய் நீ எல்லாருக்கும் கொடு என்று மாதவி சொல்லுகிறார். நந்தினி டீ கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தவர்கள் இது யார் தெரியுமா சுந்தரவல்லி அம்மாவோட மருமக, என்று பேசிக் கொண்டிருக்க சுந்தரவல்லி முகம் மாறுகிறது. இவ உங்க மருமகளா என்று கேட்க அவை என் மருமகளா இல்ல இப்ப எதுக்கு அத பத்தி பேசிக்கிட்டு என்று சொல்லி அது வேற ஒரு பிரச்சனை அத விடுங்க என்று சொல்லுகிறார். மீண்டும் நந்தினி கிட்சனில் டீ போட்டுக் கொண்டிருக்க அருணாச்சலம் நீ எதுக்குமா இதெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க என்று சொல்லி கல்யாணம் மற்றும் புஷ்பாவை கூப்பிடுகிறார்.

உடனே கல்யாணம் வர ஒன்னுக்கு ரெண்டு பேர் இருக்கீங்க நந்தினி தான் டீ போடணுமா என்று திட்டிவிட பின்னாடி கொஞ்சம் வேலை இருந்தது ஐயா அதை தான் பாத்துட்டு இருந்தேன் என்று சொல்ல, புஷ்பா எங்கே என்று கேட்கிறார். அது ஏதோ புது படம் பாக்க தியேட்டருக்கு போய் இருப்பதாக சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் புஷ்பாவை அப்படியே போக சொல்லு இனிமேல் வரவேண்டாம் என்று சொல்லு என்று சொல்லிவிட்டு இனிமேல் நந்தினி வேலை பார்த்தா உன்னையும் வேலையிலிருந்து தூக்கிடுவேன் என்று சொல்லுகிறார். உடனே கல்யாணம் தயவு செய்து நீ போமா நான் பாத்துக்குறேன் இவ்வளவு நாள் ஐயா என்ன திட்டினதே கிடையாது இதுக்கப்புறம் நீ இந்த வேலை செய்ய வேண்டாம் என்று சொல்ல பரவால்ல அண்ணா ஐயா தானே ஒண்ணும் கண்டுக்காதீங்க என்று சொல்லிவிட நான் போய் வெளியே பாத்திரம் இருக்கு அதை கழுவுறேன் என்று செல்லுகிறார் உன்ன திருத்தவே முடியாதுமா என்று சொல்லிவிட்டு கல்யாணம் டீ போட நந்தினி பாத்திரம் கழுவுகிறார்.

பிறகு லேடிஸ் கிளப் தலைவி வர,சுந்தரவல்லி அவரை வரவேற்க, நிகழ்ச்சியை ஆரம்பிக்கின்றனர். பிறகு சுந்தரவல்லி குறித்து பெருமையாக பேசிவிட்டு அவார்டை கையில் கொடுக்கிறார். அந்த நேரம் பார்த்து பட்டாசு வெடிக்க சூர்யா சிலருடன் வந்து டான்ஸ் ஆடிக்கொண்டே வருகிறார். பிறகு அங்கு இருப்பவர்கள் இதுதான் சுந்தரவல்லி ஓட ஒரே ஒரு பையன் என்று அறிமுகம் செய்ய ஓ அப்படியா என்று லேடிஸ் கிளப் தலைவி சொல்லுகிறார்.

உடனே மைக்கை எடுத்து சூர்யாவை இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்கிறோம் என்று சொல்லி அம்மாவின் அவார்டை எப்படி மகன் கொண்டாடுகிறார் என்று சொல்லி மகன் என்றால் இப்படித்தான் இருக்கணும் என்று பாராட்டிப் பேச சூர்யா மேடைக்கு வருகிறார். நீங்க ஆடுனத பாத்து உங்க அம்மா ரொம்ப சர்ப்ரைஸ் ஆனாங்க என்று சொல்லுகிறார். இது என்ன சர்ப்ரைஸ் இதைவிட ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இருக்கு இப்ப வரும் என்று சூர்யா சொல்லுகிறார். சூர்யா மைக்கை வாங்கி இந்த அவார்ட் ஃபங்ஷன் முடிச்சிட்டு போறுத்துக்குள்ள நீங்க எல்லாரும் ஒரு வாழ்த்து சொல்லணும் என்று சொல்லுகிறார். யாருக்கு என்று கேட்க, அதெல்லாம் அப்புறம் சொல்றேன் இப்போ நீங்க விஷ் பண்ணுங்க என்று சொல்ல லேடிஸ் கிளப் தலைவியும் விஷ் பண்ணுகிறார். உடனே அருணாச்சலத்திடம் மைக்கை நீட்டி நீங்களும் விஷ் பண்ணுங்க என்று கேட்க யாருக்கு என்று அருணாச்சலம் கேட்கிறார் விஷ் மட்டும் பண்ணுங்க டாடி என்று சொல்ல, அருணாச்சலம் விஷ் பண்ணுகிறார். பிறர் அனைவரும் யார்? இங்க இருக்காங்களா?என்று கேட்க அவங்க இங்க இருக்க மாட்டாங்க எப்பயாவது யாருக்காவது ஒரு வேலை பண்ணிக்கிட்டு தான் இருப்பாங்க நான் போய் கூட்டிட்டு வரேன் என்று சொல்லி சூர்யா நந்தினியை வந்து கூப்பிடுகிறார். எனக்கு வேலை இருக்கு நான் வரல என்று சொல்ல, நான் சொல்றத மட்டும் கேளு எழுந்து வா என்று கையைப் பிடித்து நந்தினியை அழைத்து வந்து நிற்க வைக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் இதுவரைக்கும் உனக்கு பிறந்தநாள் கொண்டாடினது கிடையாதா என்று சூர்யா கேட்க இல்ல சார் என்று நந்தினி சொல்லுகிறார். நந்தினி விஜி இடம் நானும் எங்க வீட்டுக்கு போயிடுவேன்னு மனசார நினைக்கிறேன் ஆனா அது நடந்துடுமா என்று கேட்கிறார்.

மறுபக்கம் சூர்யா நந்தினிக்கு இந்த வீட்டோட இளவரசி என்று சொல்லி அதுக்கு தான் இந்த கிரீடம் என்று நந்தினி தலையில் வைக்கிறார் இதனைப் பார்த்து சுந்தரவல்லி முறைக்க என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


moondru mudichu serial promo update 30-01-2025
jothika lakshu

Recent Posts

காந்தி கண்ணாடி : 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.

காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…

5 hours ago

சூர்யா 46 படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

5 hours ago

மதராசி : 11 நாளில் தமிழ்நாட்டில் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

5 hours ago

முத்துவை நம்பாமல் போகும் விஜயா,மனோஜ் போட்ட திட்டம்,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…

7 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

7 hours ago

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…

23 hours ago