சூர்யா சொன்ன வார்த்தை, கடுப்பான மாதவி, சுந்தரவல்லி.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்ன திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி விஜி சூர்யா பற்றி சொன்னதெல்லாம் யோசித்துக் கொண்டு உட்காருகிறார். சூர்யா வீட்டுக்கு வர அருணாச்சலம் இன்னைக்கு தெளிவா தான் இருக்கியா என்று கேட்க ஆமாம் என்று சொல்லுகிறார் எப்பவுமே குடிச்சிக்கிட்டே இருப்ப என்று சொல்ல இன்னைக்கு பிடிக்கல டாடி என்று சொல்லுகிறார். உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சூர்யா ஆனா உன்கிட்ட பிடிக்காத விஷயம் இந்த குடிமட்டும் தான். இதே மாதிரி நீ குடிக்காமல் இருக்கணும் என்று நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் என சொல்ல சரிங்க டாடி குட் நைட் என்ன சொல்லிவிட்டு சூர்யா வந்துவிடுகிறார். நந்தினி வந்து உங்களுக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு வரவா என்று கேட்க சரி என்று சொல்லுகிறார். நந்தினியை மீண்டும் கூப்பிட்டு உன்னை அடிச்சதுக்கு மன்னிச்சிடு நந்தினி, அன்னைக்கு ஏதோ ஒரு கோபம், ஆத்திரம் அதனால தான் இப்படி மிருகத்தனமாக நடந்து கொண்ட என்று சொல்லி மீண்டும் மன்னிப்பு கேட்கிறார்.

நான் அதை அப்பவே மறந்துட்டேன் நீங்க ஏன் பேசிக்கிட்டு இருக்கீங்க என்று சொல்ல அது உன்னோட பெருந்தன்மை இருந்தாலும் அது தப்பு தானே என்று சூர்யா சொல்லுகிறார். அன்னைக்கு நீ பேசும்போது நீங்க எப்படியாவது எங்க வீட்ல விட்டுடுங்கன்னு சொன்ன ஆனா நான் கண்டுக்காம தட்டி கழிச்சுக்கிட்டே இருந்த, உனக்கு இப்பவும் வீட்டுக்கு போற என்ன இருந்தாலும் கண்டிப்பா போகலாம். நான் தடுக்க மாட்டேன் நீ பட்ட கஷ்டம் அவமானம் எல்லாமே போதும் நீ உன்னோட குடும்பத்தோட சந்தோஷமா இரு. நீ ஆசைப்பட்டபடி தாராளமா உன்னோட வீட்டுக்கு போ ஆனா இன்னும் ஒரு கடமை இருக்கு இன்னும் ரெண்டு தண்ணி ஊத்தணும் பூரண உடம்பு சரியான உடனே மன நிம்மதியோடு சந்தோஷத்தோட உங்க வீட்ல எடுத்துக் கொண்டு போய் விட்டு விடுவேன் என்று சொல்லிவிட்டு சூர்யா சென்று விடுகிறார்.

மறுநாள் காலையில் சூர்யா தூங்கிக் கொண்டிருக்க நந்தினி நமக்காக இவ்வளவு பெரிய விஷயம் பண்ணி இருக்காரு என்று காலை தொட்டு கும்பிட்டுவிட்டு விஜிக்கு ஃபோன் போடுகிறார். எப்படி இருக்க நந்தினி என்று கேட்க, நல்லா இருக்கேன் அக்கா என்று சொல்ல அப்போ இரண்டாவது தண்ணி ஊத்திடலாமா என்று கேட்பேன் நானே இன்னைக்கு ஊத்திக்கிட்டேன் என்று சொல்ல பிறகு நான் சமைக்கலாமா என்று கேட்க சமைக்கலாம் நந்தினி அது எல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல ரொம்ப கஷ்டப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இதுக்கு மேலயாவது சூர்யா அண்ணா கிட்ட கொஞ்சம் அன்பா பாசமா நடந்துகோ என்று சொல்லுகிறார். அவர் வாய்விட்டு சொல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் உன் மேல உயிரையே வச்சிருக்காரு நீ தான் புரிஞ்சு நடந்துக்கணும் என்று சொல்லி போனை வைக்கிறார். கிச்சனுக்கு வந்த நந்தினி நாலு நாள் கிச்சன் பக்கம் வரவில்லை என்றால் எல்லாம் மாத்தி மாத்தி இருக்கு கல்யாணம் அண்ணன் வேற திடீர்னு ஊருக்கு போயிட்டாரு என்று சொல்லி காபி போடுகிறார். உடனே சுந்தரவல்லி கூப்பிட்டு எதுக்கு கிச்சனில் வேலை பார்த்துகிட்டு வேலை இருக்க, மூணு தண்ணி ஊத்தாம எதுக்கு கிச்சனுக்கு வர என்று கோபப்படுகிறார்.

உடனே அருணாச்சலம் வந்து என்ன பிரச்சனை என்று கேட்க அவளுக்கு தான் அம்மா போட்டிருக்குல்ல அவ எதுக்கு சமைக்கிறா அவ சமச்சி எல்லாருக்கும் நோய் வருவதற்காக என்று கேட்டு கோபப்படுகிறார் உடனே அருணாச்சலம் நீதான் ரெஸ்ட் எடுக்கலாம் இல்ல எதுக்குமா இதெல்லாம் செய்ற என்று கேட்க விஜி அக்காவிடம் கேட்டேன் அவங்க தான் செய்யலாம்னு சொன்னாங்க என்று சொல்ல முதல்ல அவளை சொல்லணும் ஏத்தி விடறது அவதான் அவளுக்கு ஒரு நாளைக்கு இருக்கு என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி திட்டி விட்டு சென்று விடுகிறார். உடனே அருணாச்சலம் அவ பேசுனதை எல்லாம் நீ மனசுல வச்சுக்காதம்மா நீ போய் வேலையை பாரு என்று சொல்லி அனுப்புகிறார்.

சூர்யா கன்னியப்பன் இடம் போனில் பேசிக் கொண்டிருக்க நந்தினி காபி எடுத்துக்கொண்டு வந்து கொடுக்கிறார்.உன்ன தான் எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று சொன்னேன்ல என்று சொல்ல பரவால்ல சார் இருக்கட்டும் என்று குடிக்க கொடுக்க சூர்யா காபி கொடுப்பதை நந்தினி பார்த்துக்கொண்டே இருக்கிறார். என்ன குறுகுறுன்னு பாக்குற என்று கெட்ட நேர தானே பாக்குறேன் என நந்தினி சொல்லுகிறார் சரி பார்க்கிற இல்ல என்ன விஷயம் சொல்லு என்று சொல்ல எனக்கு அம்மை போட்டதும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று சொல்ல என்ன நான்சென்ஸ் மாதிரி பேசுற என்று கேட்கிறார். நல்லது எனக்கு இல்ல உங்களுக்கு தான் இந்த நாலு நாள் குடிக்காம இருந்ததுகே நீங்க உங்க முகம் அழகா இருக்கு எப்ப பாத்தாலும் குடிச்சிட்டு உங்க கண்ணு சிவந்து முகமே பார்க்க நல்லா இருக்காது இதே மாதிரி குடிக்காமயே விட்டுடீங்கன்னா ரொம்ப நல்லா இருக்கும் என்று நந்தினி சொல்ல சூர்யா யோசிக்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவள்ளியின் கம்பெனியில் இருப்பவர்கள் வந்த இந்த ஆயுத பூஜைக்கு உங்க கையாள இரண்டு மிஷினையும் ஆன் பண்ணிவிட்டால் நல்லா இருக்கும் என்று சொல்லுகின்றனர். உடனே சுந்தரவல்லி ஒரு மிஷின் நான் ஆன் பண்ற ஆனா இன்னொரு மிஷின் என் பொண்ணு மாதவி ஆன் பண்ணுவா என்று சொல்ல சூர்யா நந்தினியை அழைத்து வந்து இன்னொரு மிஷினை என் பொண்டாட்டி நந்தினி தான் ஆன் பண்ணுவா என்று சொல்ல மாதவி கடுப்பாகிறார். உடனே அசோகனிடம் அந்த மிஷின ஆன் பண்ணும் போது அவளுக்கு ஷாக் அடிச்சு அவ செத்தாலும் பரவாயில்லை என்று கோபமாக பேச அசோகனும் அதேபோல் கனெக்சன் கொடுக்கிறார். சூர்யா மற்றும் நந்தினி இருவரும் மெஷின் ஆன் பண்ண செல்கின்றனர். என்ன நடக்கப் போகிறது? சூர்யா நந்தினி காப்பாற்றுவாரா? என்பதை இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

5 hours ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

5 hours ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

6 hours ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

6 hours ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

8 hours ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

9 hours ago