moondru mudichu serial promo update 26-09-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் உனக்காக அண்ணன் கோவிலில் போய் பிச்சை எடுத்து இருக்காரு, உன் உடம்புல ரொம்ப அம்மை அதிகமாயிடுச்சு நீ பொழப்பியா இல்லையான்னு தெரியல, அப்போதான் சாமியார் வந்து அம்மன் கோபம் குறையணும்னா பிச்சை எடுத்து சன்னியாசிக்கு சாப்பாடு கொடுக்க சொன்னாரு இந்த மாதிரி ஒரு புருஷன் கிடைக்கறதுக்கு நீ கொடுத்து வச்சிருக்கணும் அவர் மேல எனக்கு இருந்த மரியாதை நூறு மடங்கு உயர்ந்திருக்கு என்று சொல்ல நந்தினி கண் கலங்குகிறார். மறுபக்கம் சூர்யா வெளியில் உட்கார்ந்து கொண்டிருக்க அருணாச்சலம் சூர்யாவை பாராட்டி பேசுகிறார். நீ குடிக்காம இருந்தது எவ்வளவு பெரிய விஷயம் சூர்யா உனக்கு நந்தினி மேல் அவ்வளவு பாசம் இருக்கு என்று சொல்லுகிறார். நீ என்ன நெனச்சு இதையெல்லாம் பண்ணனு தெரியாது ஆனால் என் நந்தினிக்கு மறுபிறவி கொடுத்திருக்க என்று சொல்ல, அப்படியெல்லாம் இல்ல டாடி எனக்காக இவன் இந்த வீட்டில சகிச்சிகிட்டு வாழ்ந்துகிட்டு இருக்கா, அதை எனக்காக பண்ண தியாகத்துக்கு முன்னாடி இதெல்லாம் ஒண்ணுமே இல்லை என்று சொன்ன இதே மாதிரி இந்த புரிதலோட நீங்க சந்தோஷமா வாழனும் என்று அருணாச்சலம் சொல்லுகிறார்.
மறுநாள் காலையில் விஜி தூங்கிய எழுந்திருக்க நந்தினி உட்கார்ந்து கொண்டிருக்கிறார். உடனே விஜி சந்தோஷப்பட்டு உன்னை இப்படி பார்க்க தான் காத்துக்கிட்டு இருந்தோம் நந்தினி இன்னைக்கு மூணு நாள் ஆயிடுச்சு உனக்கு இன்னைக்கி முதல் தண்ணி ஊத்திடலாம் என்று சொல்லிவிட்டு இந்த விஷயத்தை அருணாச்சலம் சார் கிட்ட சொல்லணும் என வருகிறார் மறுபக்கம் சூர்யா இப்ப கொஞ்சம் நந்தினி நல்லா தான் இருக்கு அவளுக்கு எப்ப சரியாகும் என்று கேட்டுக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து விஜி நந்தினிக்கு ஒரு அளவுக்கு சரியாயிடுச்சு அவளை எழுந்து உட்கார்ந்து இருக்கா இப்போ முதல் தண்ணி ஊத்திடலாம் என்று சொல்லுகிறார். உடனே அருணாச்சலம் சிங்காரத்திற்கு போன் போட்டு நந்தினி குணமான விஷயத்தை சொல்லி முதல் தண்ணீர் ஊத்திடனும் என்று சொல்ல நானும் வந்து விடுகிறேன் என சொல்ல விஜி அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்.சிங்காரம் வந்துவிட நந்தினியை வாசலில் உட்கார வைத்து நந்தினிக்கு முதல் தண்ணீர் ஊற்றுகிறார்.
பிறகு ஊற்றை முடித்துவிட்டு நம்ம டிரஸ் மாத்திக்கலாம் என்று அழைத்துச் சென்று பிறகு வெளியில் வந்து சரிங்க சார் முதல் தண்ணி ஊத்தி ஆச்சு இன்னும் ரெண்டு தண்ணி ஊத்தணும் அது என்னைக்கு ஊத்த வேண்டும் என்று நானே சொல்றேன் என்று சொல்லிவிட்டு கிளம்ப, சூர்யா விஜிக்கு நன்றி சொல்ல என்ன அண்ணா இதுக்கெல்லாம் நன்றி சொல்றீங்க நீங்க என்னோட புருஷனோட உயிரை காப்பாத்தி கொடுத்து இருக்கீங்க அதுக்கும் உங்க வாழ்நாள் முழுக்க நன்றி கடன் பட்டிருக்கிறேன் என்று சொல்லுகிறார். இது மட்டும் இல்லாம நந்தினிக்கு அக்காவா நான் என்னவெல்லாம் செய்யனுமோ அதை தான் இப்போ நான் செஞ்ச என்று சொல்ல, இருந்தாலும் நீ பண்ணது பெரிய விஷயம் தான் அம்மா நீ இல்லனா நந்தினி சிரமப்பட்டு இருப்பா என்று சொல்ல இப்ப மட்டும் இல்ல எப்பவுமே நான் அவளுக்காக இருப்பேன் எல்லாம் சரியாயிடுச்சு என்று சொல்லிவிட்டு கொஞ்ச நாளைக்கு அவளை எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று மட்டும் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு விஜி கிளம்பி விடுகிறார்.பிறகு நந்தினி பூஜை அறையில் கற்பூர தீபம் ஏற்றி சாமி கும்பிடுகிறார்.உடனே சிங்காரம் சூர்யாவிடம் உங்க அந்தஸ்துக்கு முன்னாடி நாங்க எல்லாம் சும்மா என்ன செய்ய சொல்லி இருந்தாலே நான் யோசித்து இருப்பேன். ஆனா நீங்க ஒரு நிமிஷம் கூட யோசிக்காமல் கோவிலில் போய் பிச்சை எடுத்து இருக்கீங்க என்று சிங்காரம் சொல்லி கண்கலங்குகிறார்.
நீங்க எங்களோட முதலாளி மட்டும் கிடையாது எங்களோட குலசாமி மனசு நிறைஞ்சு சொல்ற ஐயா என் புள்ளைக்கு நீங்க மறுபிறவி கொடுத்து இருக்கீங்க அவ வாழ போற ஒவ்வொரு நாளும் நீங்க போட்ட பிச்சை என சொல்லுகிறார். இப்படி எல்லாம் பேசாதீங்க என்று சூர்யா சொல்ல,அது உங்களோட பெருந்தன்மை உங்களுடைய வேண்டுதல்தான் என் புள்ளையை இப்படி நிறுத்தி இருக்கு என்று சொல்ல, அதெல்லாம் விடுங்க இப்பதான் நந்தினி சரியாயிட்டால அவளுக்கு ஆறுதலா பேசிட்டு போங்க என்று சொல்லுகிறார். உடனே சிங்காரம் நந்தினி இடம் உன் மேல இருக்கிற கவலை எனக்கு கொஞ்சம் கூட இல்லம்மா சின்னையா கருப்பசாமி மாதிரி உன் கூடவே இருக்காரு நீ தைரியமா இரு நான் கிளம்புறேன் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா விவேக்கிடம் அவளுடன் நிதானம் பொறுமை அன்பு கூட இருக்கிறவர்களை அப்படியே மாத்திடுது மச்சான் என்று சொல்லுகிறார். மறுபக்கம் மாதவி சுந்தரவல்லி இடம் கண்டிப்பா இது அவங்க ரெண்டு பேருக்குள்ள ஒரு எமோஷனல் பாண்டிங் உருவாக்கும் என்று சொல்லுகிறார்.
பிறகு விவேக்கிடம் நான் அவங்க வீட்ல விட்டுடலாம்னு இருக்கேன் என்று சொல்லுகிறார். பிறகு நந்தினி சூர்யாவிடம் அழுது கொண்டு நீங்க பண்ணிருக்கிற இந்த விஷயம் எங்க அம்மாவை விட ஒரு படி உசந்துட்டீங்க என்று சொல்லி கண்கலங்கி காலை தொட்டு மன்னிப்பு கேட்க சூர்யா ஆறுதல் சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஸ்டாண்ட்அப் காமெடியனாக பயணத்தை தொடங்கி வெள்ளி திரையில் முன்னணி நடிகர்களின் படங்களின் நடித்து தனக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றன. வார வாரம் இந்த…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து பிச்சைக்காரர்…
வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை…
வடசென்னை 2 படம் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.…