சூர்யா சொன்ன வார்த்தை,நந்தினி கொடுத்த பதில்,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் ஒரே ரூம்ல இருக்கோம் ஏதாவது பேசலாம் என்று நந்தினி இடம் பேச சரி நீங்க பேசுங்க என்று சொல்லிவிட்டு நந்தினி கிளம்பி விடுகிறார். சுரேகா நந்தினியிடம் சூர்யா நந்தினி கல்யாணத்துல ஒரு நல்ல விஷயமா அது நம்மளுக்கு தான் ஆனா அப்பாவுக்கு இதெல்லாம் ரொம்ப சந்தோஷம் அது ஏன் என்று கேட்கிறார். எனக்கென்னமோ நந்தினி பேர்ல அப்பா மொத்த சொத்தையும் எழுதி வச்சிடுவார்னு தோணுது என்று சொல்ல மாதவி அப்படி ஏதாவது நடந்தால் நம்ம வீட்டையே ரெண்டாக்கிடுவோம் என்று சொல்லுகிறார்.

அந்த நேரம் பார்த்து நந்தினி வர, சுரேகா நந்தினியை கூப்பிட்டு மதியம் எங்க போயிருந்த என்று கேட்கிறார். நான் விஜி அக்கா வீட்டுக்கு தான் போயிருந்தேன் என்று சொல்லுகிறார். அப்போ சூர்யா அண்ணா கூட நீ எங்கேயும் போகலையா என்று கேட்க நான் எங்கேயும் போகல என்று சொல்லுகிறார். பிறகு அவர்கள் கிளம்ப நந்தினி நம்போ விஜி அக்கா கூட சமையல் வேலை செஞ்சது இவங்களுக்கு தெரிந்திருக்குமோ என்று யோசிக்கிறார். உடனே நந்தினி விஜிக்கு போன் போட்டு இவங்களுக்கு நம்ம சமைக்கிற விஷயம் தெரியுமா? என்று கேட்க அதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை என்று சொல்லுகிறார். அப்படியே தெரிஞ்சாலும், நீ ஒன்றும் பொய் சொல்லல திருடல அதனால இதை தெரிஞ்சாலும் எந்த பிரச்சனையில்ல நீ போய் வேலையை பாரு என்று சொல்லி போனை வைக்கிறார்.

சுந்தரவல்லி பாத்ரூமில் இருக்கும் நேரம் பார்த்து அருணாச்சலம் சுந்தரவல்லி இந்த பத்திரிகையை பார்க்காமல் இருக்க வேண்டும் என்று மறைத்து வைக்கிறார். காலையில் சூர்யா தூங்கி எழுந்தவுடன் தலைவலியாக இருக்கிறது என்று எழுந்து உட்கார்கிறார். கொஞ்ச நேரம் சரக்கு பாட்டிலுடன் பேசி விட்டு நந்தினியை கூப்பிட்டு அதிகமாக தலை வலிப்பதாக சொல்லுகிறார். சரி நான் மருந்து எடுத்துட்டு வரேன் என்று சொல்ல, நானே மருந்து சொல்றேன் எடுத்துக்கிட்டு வா என்று சொல்லுகிறார். நான் குடிச்ச சரக்குல ஏதாவது பிரச்சனை இருக்கலாம் என்று சொல்ல ஆனால் நீங்க தூங்குற வரைக்கும் நான் பார்த்தேன் நீங்க குடிக்கவே இல்லையே என்று சொல்ல, அதுக்கு அப்புறம் தான் நான் நைட் எழுந்து குடிச்சிட்டேனே என்று சொல்லுகிறார்.

எனக்கு ஹேங்க் ஓவர் வர நீதான் காரணம் என்று சொல்லி எப்பவுமே குடிச்ச உடனே ஏதாவது சாப்பிட்டு இருப்பேன் ஆனா நீ தூங்கிட்டு இருந்த அதனால உன்னை எழுப்பல அதனாலதான் இந்த ஹாங்கோவர் என்று சொல்லுகிறார். உடனே நீ போய் லெமன் சோடா எடுத்துக்கிட்டு வா என்று சொல்லுகிறார். எனக்கு போடத் தெரியாது என்று சொல்ல, அங்கே கல்யாண இருப்பான் அவன் கிட்ட போயி கேட்டு போய் போட்டு எடுத்துட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

மீண்டும் சூர்யா சரக்கு பாட்டில எடுத்து குடிக்க ஆரம்பிக்கிறார். புஷ்பா கிச்சனில் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருக்க, கல்யாணம் வர நீங்க நந்தினிக்கு மட்டும் பாசத்தை கொட்டி பேசுறீங்க. ஆனா என்கிட்ட மட்டும் கோபப்படுறீங்க என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினி வர கிச்சன் சின்னதா இருக்கு சின்னையா கிட்ட சொல்லி புஷ்பாவ வேலையை விட்டு நிறுத்திடு என்று சொல்லுகிறார். உடனே டென்ஷன் ஆகி புஷ்பா சென்று விட சரி அதை விடுமா என்னாச்சு என்று கேட்க அவரு தலைவலின்னு சொன்னாரு அதுக்காக லெமன் சோடா கேட்டார் எனக்கு போட தெரியாது நீங்க எப்படி போடணும்னு சொல்லுங்க என்று சொல்லுகிறார். பிறகு கல்யாணமும் லெமன் சோடா இப்படி தான் போடணும் என்று சொல்லிக் கொடுக்கிறார்.

பிறகு விஜி வீட்ல போய் வேலை கேட்கணும்னு நினைச்ச என்னம்மா ஆச்சு என்று கேட்கிறார்.பிறகு அங்கு சமைத்த விஷயத்தையும் என்ன சமைத்தார்கள் என்பதையும், ரொம்ப நேரமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். மறுபக்கம் மாதவி, சுரேகா மற்றும் அசோகன் மூவரும் பத்திரிக்கையை வைத்து யோசித்துக் கொண்டிருக்கின்றனர். உடனே அசோகன் இது மாப்பிள்ளையோட வேலையாக தான் இருக்கும் உங்க அம்மாவை வெறுப்பேத்த என்னலாம் பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருக்கான் என்று சொல்லுகிறார். உடனே சுரேகா அவன் பண்ணி இருந்தா இந்நேரத்துக்கு சைலன்ட்டா இருக்க மாட்டான் ஏதாவது மாஸா பண்ணி இருப்பான் என்று சொல்லுகிறார். உடனே அசோகன் உங்க அக்கா பண்ணியிருப்பாளோ என்று கேட்கிறார். நான் எதுக்கு இந்த பத்திரிக்கை அடிச்சு இருக்க போற அப்படி நான் அடிச்சனா நான்தான் அடிச்சேன்னு சொல்ல போறேன் என்று மாதவி சொல்கிறார். அந்த நேரம் பார்த்து அருணாச்சலம் அங்கு போன் பேசிக் கொண்டிருப்பதை மாதவி கவனிக்கிறார்.

உடனே சுரேகாவை கூப்பிட்டு எனக்கென்னமோ அப்பா மேல தான் டவுட்டா இருக்கு என்று சொல்லுகிறார். கரெக்டு தான் கா இவர்தான் வந்து தென்னை மட்டை மேல ஓவரா அக்கரையா இருப்பாரு என்று சொல்லி இங்கே என்ன நடக்குதுன்னு நம்ம தெரிஞ்சுக்கலாம் என்று முடிவு பண்ணுகின்றனர். நந்தினி கிச்சனில் சூர்யாவிற்காக லெமன் சோடா போட்டுவிட்டு எடுத்துக் கொண்டு வர அந்த நேரம் பார்த்து சுந்தரவல்லி எதிரில் வர எவ்வளவு தாட்டி சொல்றேன் இந்த மூஞ்ச வச்சிக்கிட்டு வராதன்னு என்று திட்ட சூர்யா மேலிருந்து கீழே வருகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் மாதவி சுந்தரவல்லிக்கு போன் போட்டு பேச அவர் முக்கியமான விஷயமா நான் வெளியே போயிட்டு இருக்கேன் போனவை வீட்டுக்கு வந்த உடனே எல்லாம் பேசிக்கலாம் என்று சொல்கிறார்.

மறுபக்கம் சூர்யா நந்தினி இடம் கவலைப்படாதே என்று சொல்ல,நான் ஏன் கவலைப்பட வேண்டும், ஏன் சார் இப்படி பண்றீங்க என்று கேட்கிறார். உடனே சுந்தரவல்லி அப்படி என்ன முக்கியமான விஷயம் என்ன போன் பண்ணி வர சொல்ற அளவுக்கு என்று திட்டுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 25-12-24
jothika lakshu

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

16 hours ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

16 hours ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

16 hours ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

16 hours ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

18 hours ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

19 hours ago