அருணாச்சலம் சொன்ன அட்வைஸ், சூர்யாவின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி கருப்பனிடம் உத்தரவு கேட்க குங்குமம் வந்து விடுவதால் நந்தினி வேறு வழி இல்லாமல் சரக்கு பாட்டிலை எடுத்து குடித்து விடுகிறார். முதலில் நாற்றத்தால் குடிக்க முடியாமல் இருக்க பிறகு மூக்கை பிடித்து குடித்து விடுகிறார். மறுபக்கம் சூர்யா தள்ளாடி கொண்டு படியில் ஏறி வருகிறார். மறுபக்கம் நந்தினி சரக்கை குடித்து தயாராக இருக்கிறார். சூர்யா மேல ஏறி வர நந்தினி எக்ஸ்கியூஸ் மீ என சொல்லி நிற்க சொல்லுகிறார். குடிச்சு இருக்கீங்களா என்று கேட்க யாரைப் பார்த்து என்ன கேட்டுக்கிட்டு இருக்க என்று சூர்யா கேட்கிறார். என் மேல சந்தேக படுறியா நந்தினி என்று கேட்க நீங்க குடிச்சிருக்கீங்க குடிச்சி இருக்கீங்க என்று சொல்லி சோபாவை தூக்கி கவிழ்த்து விடுகிறார். உனக்கு என்ன ஆச்சு நந்தினி? நீ குடிச்சிருக்கியா என்று கேட்டுவிட்டு ரூமுக்கு இருக்க நான் வரமாட்டேன் என நந்தினி அலப்பறை செய்கிறார்

குடிகாரனுக்கு வாக்கப்பட்டு தானே என் வாழ்க்கை போயிடுச்சு என்று நந்தினி உட்கார்ந்த அழ சூர்யா ரூமுக்கு இழுத்து வருகிறார். அங்கு ரூமில் சரக்கு பாட்டில் பாதியாக இருக்க இததான் நீ குடிச்சியா என்று கேட்க நந்தினி ஆமாம் என்று சொல்லுகிறார். நீ எதுக்கு நந்தினி இப்படி பண்ண என்று கேட்க நான் தான் நீங்க குடிச்சா குடிப்பேன்னு சொன்னேன்ல என்று சொல்லுகிறார். மீண்டும் குடிக்க சரக்கு பாட்டிலை வாங்க சூர்யா கொடுக்க மறுக்கிறார். நீங்க பாதி குடிச்சிட்டு மீதி அளவுக்கு கொடுங்க நானும் கொடுக்கிறேன் என சொல்ல சூர்யா வேண்டாம் என சொல்லுகிறார். நீங்க குடிச்சா தப்பு இல்லன்னா நான் குடிச்சாலும் தப்பு இல்ல தானே என்று கேட்கிறார். உங்களுக்கெல்லாம் சொன்னா புரியாது செஞ்சா தான் புரியும் சூர்யா சார் என்று கத்தி பேச சத்தம் கேட்டு சுரேகா வெளியில் வருகிறார்.

நந்தினியை அமைதியாக இருக்க சொல்ல ஏய் சூர்யா அமைதியா உட்காரு என்று சொல்லிவிட்டு வாயில பிங்கர் வை ஐ கோ யூ சீ என்று சொல்லிவிட்டு வெளியில் வருகிறார். சுரேகாவை ஏய் இங்கவா என நந்தினி கூப்பிடுகிறார். உனக்கெல்லாம் என்னடி மரியாதை உனக்கென்ன குட்டி சுந்தரவல்லியா நெனப்பா என்று சொல்ல அப்படியே உன்னை போடுவேன் வாய பாரு என்று சொல்ல, உனக்கென்ன திமிரா என்று சுரேகா கேட்க திமிரு எனக்கு இல்ல உனக்கு தான் என சொல்லுகிறார். மீண்டும் சத்தம் கேட்டு மாதவி வர, வா சுருட்ட முடி சுந்தரவல்லி நீதான் இந்த கும்பலுக்கு தலைவியா என்று கேட்கிறார். நீ இந்த வீட்டோட மூத்த பொண்ணுதானே நீதானே திருத்தணும் ஒரு நாளாவது நீ அதை பண்ணி இருக்கியா. எப்ப பார்த்தாலும் இல்லாத பிரச்சனைய பெருசாக்குறது சொல்லு சுந்தரவல்லி என மாதவியை போட்டு உலுக்க சத்தம் கேட்டு அருணாச்சலம் வெளியில் வருகிறார்.

பிறகு அசோகனின் சட்டையை இழுத்து இந்த பூனையும் பால் குடிக்குமானு உங்கள பார்த்தா தான் தெரியுது என்று சொல்ல மாதவி நந்தினி என்று கத்த எதுக்கு இப்போ கத்துற நான் என்ன உன் புருஷனா என்று கேட்கிறார். முதல்ல உனக்கு யாரு சார்புன்னு பேர் வெச்சது முனங்கிப்போன கத்தி மாதிரி இருக்க என்று கேட்கிறார். நீங்க எல்லாம் எப்பதான் மனுஷியா மாற போறீங்க எல்லாரும் முன்னாடியும் புடவையை வேணாம்னு சொல்லிட்டு ரூமுக்கு வந்து கமக்கமா வாங்கிட்டு போறீங்களே சூப்பரான பொண்டாட்டியான அசோகன் இடம் சொல்லுகிறார். உடனே சூர்யா வர உங்க அக்கா தங்கச்சி கிட்ட எல்லாம் பேச்சுவார்த்தை சூப்பரா போகுது என்று சொல்லுகிறார். சூர்யா ரூமுக்கு போகலாம் என இழுக்க டேபிள் மீது உட்கார்ந்து விடுகிறார். நான் தான் அப்பவே உங்க கிட்ட சொல்லல நீங்க குடிச்சீங்கன்னா நான் குடிப்பேன்னு என் பேச்சை கேட்டீங்களா என நந்தினி சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் சூர்யாவிடம் ஒரு பொண்டாட்டியாக என்ன செய்யணுமோ அதை செஞ்சு காமிச்சுட்டா எங்களை ஏமாத்துன மாதிரி அவளை ஏமாத்தணும்னு நினைக்காத என்று சொல்லிவிட்டு சென்று விட மறுப்பக்கம் சிங்காரம் நந்தினிக்கு போன் போட்டு தீபாவளிக்கு சீர் எடுத்துட்டு வரலாம்னு பாத்தா உங்க தங்கச்சி அம்மாச்சி எல்லாரும் வரணும்னு ஒத்த கால்ல நிக்கிறாங்க என்று சொல்ல கூட்டிட்டு வாங்கப்பா பாத்துக்கலாம் என நந்தினி சந்தோஷமாக சொல்லுகிறார். பிறகு நந்தினி சூர்யாவிடம் தீபாவளிக்கு சீர்வரிசை எடுத்துட்டு வராங்களாம் என்று சொல்ல ஓ நம்ப விஜி வீட்டுக்கு கொடுத்த மாதிரியா என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu serial promo update 24-10-25
jothika lakshu

Recent Posts

Unna Naan Paatha – Video Song

Unna Naan Paatha - Video Song Kombuseevi Shanmuga Pandiyan Ponram Yuvan Shankar Raja   https://youtu.be/HCjGl-K_KFE?si=kUTW1Yz3evj5nnzT

48 minutes ago

முத்துக்கு வந்த சந்தேகம், விஜயாவுக்கு மீனா கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா…

2 hours ago

வினோத் மற்றும் வாட்டர் மெலன் ஸ்டார் இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான முதல் ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

2 hours ago

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

20 hours ago

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் மீண்டும் ரீ ரிலீஸ்.??

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது…

23 hours ago

ஸ்ருதிக்கு வந்த ஐடியா, பிரச்சனையில் சிக்கிய சீதா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திராவை மீனா…

23 hours ago