சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, சூர்யாவிடம் நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் கம்பெனிக்கு வரப்போற அர்ச்சனாவுக்கு ஒரு முடிவு கட்டணும், அவ ஆபீஸ்க்குள்ள வந்தா ஏன்டா வந்தமோ என்று யோசிக்கணும் அந்த அளவுக்கு சம்பவம் பண்ணனும் என விவேக்கிடம் ஒரு ஐடியாவை சொல்லுகிறார். விவேக் சூப்பர் என சொல்லி பண்ணி விடலாம் என சொல்லுகிறார். பிறகு இருவரும் குடித்துக் கொண்டிருக்கின்றனர்.மறுபக்கம் அருணாச்சலம் சுந்தரவல்லி இடம் அர்ச்சனாவிடம் சைனிங் அத்தாரிட்டி கொடுத்ததற்காக கோபமாக பேசுகிறார். இதில் எனக்கு துளி கூட விருப்பம் இல்லை என சொல்ல அதெல்லாம் நல்லபடியா நடக்கும் என சுந்தரவல்லி சொல்கிறார். உங்க பையன நந்தினி கிட்ட இருந்து சைனிங் அத்தாரிட்டியை மாத்த சொல்லுங்க நானும் அர்ச்சனாவ அனுப்பி விடுகிறேன் என சொல்லுகிறார்.

அந்த நேரம் பார்த்து சூர்யா வந்து இருவரையும் தடுத்து நிறுத்துகிறார். என்ன வெறுப்பு ஏத்துறதுக்காக அந்த வீணா போன அர்ச்சனாவை கூட்டிக்கிட்டு வந்து அவதா சைன் போடுவானு சொல்றாங்க. அர்ச்சனாவை கம்பெனியில் விட்டால் நான் பயந்துடுவேனா. உங்க பொண்டாட்டி ஒரு தப்பான வேலையை தப்பான ஆள வச்சு பண்றாங்க நாளைல இருந்து என்னோட ஆட்டம் எப்படி இருக்க போகுதுன்னு மட்டும் பாருங்கள் என்று சொல்ல அதுக்கெல்லாம் நான் அசர மாட்டேன்.

நீ என்ன வேணா பண்ணு இந்த ஆட்டத்துல சுந்தரவல்லி தான் ஜெயிப்பா என்று சொல்லுகிறார். அந்த அர்ச்சனாவ ஓட விட்டுடுவேன் என சொல்லிவிட்டு போக சுந்தரவள்ளி சென்று விடுகிறார். சூர்யா ரூமுக்கு வந்து நந்தினி இடம் சாப்டியா என்று கேட்க சாப்பிட்டேன் என சொல்ல நான் ஒன்னு சொல்றது என்ன தப்பா நினைச்சுக்காதீங்க உங்க அம்மா கிட்ட கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகலாமே என்று சொல்ல சூர்யா ஈகோ என்றது மிகப்பெரிய மிருகம் அது கிட்ட அடங்கி போக முடியாது என்று சொல்ல நந்தினி அப்போ இதுக்கு முடிவே இல்லையா என கேட்கிறார். சூர்யா நந்தினி இடம் எனக்காக நீ சாமிகிட்ட சீட்டு போட்டு கொடுக்கிறியா என்று கேட்கிறார். நிஜமாவா என்று கேட்க ஆமா தான் என்று சொல்லுகிறார் நான் என் மனசுக்குள்ள ஒரு விஷயம் நினைக்கிறேன் அது நடக்குமா நடக்காதா தெரிஞ்சுக்கணும் அதுக்கு தான் என்று சொல்ல நந்தினியும் விபூதி ஒரு பேப்பர் குங்குமம் ஒரு பேப்பர் என்ன மடித்து சேர்த்து சீட்டு குலுக்கி போட்டு சூர்யாவை எடுக்க சொல்ல எனக்காக வேண்டி நீயே எடு என்று சொல்லுகிறார்.

நந்தினியும் எடுத்து பார்க்க குங்குமம் வந்ததால் சந்தோஷப்பட்டு சொல்ல அப்போ நான் நினைச்சது நடத்திடும் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். உடனே கடவுளுக்கு நன்றி சொல்லி விட்டு படுத்து விடுகிறார். சுந்தரவல்லி அர்ச்சனாவிற்கு ஃபோன் போட்டு நாளைக்கு நீ கம்பெனிக்கு போயிட்டு என்னோட சீட்டில் உக்காரு என்று சொல்ல, நான் எப்படி என்று தயங்க மேனேஜர் கிட்ட நான் பேசிக்கிறேன் நீ பயப்படாம போகலாம் என்று சொல்லுகிறார். நீ எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னா அதுக்கு முதல் ஸ்டேப் இது தான். நீ போய் அந்த வேலைய பாரு எனக்கு கிடைக்கிற எல்லாம் மரியாதையும் உனக்கு கிடைக்கும். உனக்காக ராஜ மரியாதை கிடைக்கும் நீ போயிட்டு வந்துட்டு என்ன நடந்துச்சுன்னு எனக்கு போன் பண்ணு என்று சொல்லுகிறார். போனை வைத்துவிட்டு அர்ச்சனா கம்பெனிக்குள்ள வர மாதிரி கூடிய சீக்கிரம் உன் வீட்டுக்குள்ளேயும் வந்துருவேன் சூர்யா என்று நினைக்கிறார்.

மறுநாள் காலையில் சுந்தரவல்லி அர்ச்சனாவிற்கு போன் போட்டு எங்க போயிட்டு இருக்க என்று கேட்க ஆபீஸ்க்கு தான் போகிறேன் என்று சொல்ல சரி எதுவா இருந்தாலும் கால் பண்ணு என போனை வைக்க மாதவி, அசோகன், சுரேகா மூவரும் வந்து இந்த வீட்டுக்கு அர்ச்சனா வந்தது எங்களுக்கு புடிக்கல, அவ உங்களை எவ்வளவு அவமானப்படுத்தி பேசி இருக்கா என்ற கேள்வி ஒரு கேள்வி கேட்க நீங்களே இவ்வளவு யோசிக்கும்போது நான் யோசிக்க மாட்டேனா என்று சொல்லிக் கொண்டிருக்க அருணாச்சலம் வந்து உக்காருகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யாவும் நந்தினியும் ஆபீசுக்கு வர அவர்களுக்கு மாலை போட்டு மரியாதை செய்கின்றனர். இதனை அர்ச்சனா உள்ளே இருந்து பார்த்து கடுப்பாக என்னடா இது புதுசா என்று சூர்யா கேட்க நீதான் கம்பெனியை அப்ஜக்ட் பண்ணிட்டியே டா என்று சொல்லுகிறார். இதுக்கு மேல எல்லாமே புதுசு மச்சான் புதுசு என்று சொல்லுகிறார்.

உள்ளே வந்தவுடன் நந்தினியை சீட்டில் உட்காரச் சொல்ல நீங்களே உட்காருங்கள் என்று சொல்ல நான் வரும்போது உன்கிட்ட என்ன சொல்லி கூட்டிட்டு வந்தேன் என்று கேட்கிறார்.அர்ச்சனா சுந்தரவல்லிக்கு போன் போட்டு சூர்யா மற்றும் நந்தினிக்கு மாலை மரியாதை கிடைக்கும் விஷயத்தை சொல்ல நான் அதெல்லாம் உனக்காக ஏற்பாடு செய்தது என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 22-07-25
jothika lakshu

Recent Posts

Oru Paarvai Paarthavanae video song

Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…

10 hours ago

பெர்சிமன் பழத்தில் இருக்கும் நன்மைகள்..!

பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…

15 hours ago

Indian Penal Law (IPL) Official Teaser

Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…

15 hours ago

பைசன்: 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…

15 hours ago

டியூட்: 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா.??

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…

15 hours ago