நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைகளத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்தி லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சுதாகர் மிரட்டியதை குடும்பத்தினர் மறைக்க ரஞ்சிதா போனை வாங்கி இவங்க சொல்றது எல்லாமே பொய் சுதாகர் இங்க வந்தான் என்று சொல்லுகிறார். அப்போ மூணு பேரும் பொய் சொல்றாங்களா என்று கேட்க ஆமாக்கா நாங்க வரதுக்கு முன்னாடியே அவன் வீட்டுக்குள்ள வந்து சாப்பிட்டுகிட்டு இருந்தான் அம்மாச்சியை அடிக்கப் போயிட்டான் என்று சொல்ல, உடனே பதறிப் போன நந்தினி சத்தமாக பேச சூர்யாவும் அருணாச்சலமும் வந்து விடுகின்றனர் பிறகு ஸ்பீக்கரில் போட்டு ரஞ்சிதாவிடம் நடந்த விஷயங்களை சொல்லுமாறு சொல்லுகிறார். ரஞ்சிதா சொல்லிய பிறகு உடனே நந்தினி மூணு பேர் மீதும் கோபமாக பேசுகிறார். தயவுசெஞ்சு என்ன ஊருக்கு அனுப்பி விடுங்க என்னால அங்க என்ன நடக்குதுன்னு பயந்துகிட்டு இருக்க முடியாது என்று சொல்லுகிறார்.

அருணாச்சலம் நான் வேணும்னா சுதாகர் கிட்ட பேசுறேன் என்று சொல்ல, அவனுக்கு பிரச்சனை நடந்தால் உங்ககிட்ட சொல்லுவேன்னு எல்லாமே தெரியும் அப்படி இருந்தும் பிரச்சனை தான பண்றான். என்று சொல்லி முடிவெடுக்க சிங்காரம் அதெல்லாம் வேண்டாமா எங்க கஷ்டத்தை எங்களோட பாத்துக்குறோம் என்று சொல்ல அப்ப கல்யாணம் ஆயிட்டா என்ன மறந்துடுவீங்களா என்று சொல்ல ரஞ்சிதா தயவு செஞ்சு வாக்கா பயமா இருக்கு என்று ரஞ்சிதா சொல்ல சூர்யா நந்தினி கையைப் பிடித்து இழுத்துச் சென்று காரில் அழைத்துச் செல்கிறார். அருணாச்சலம் எங்க போற என்று கேட்டுக்கொண்டே இருந்தாலும் எதுவும் பேசாமல் சென்று விடுகிறார். உடனே அம்மாச்சி மற்றும் சிங்காரம் இருவரும் ரஞ்சிதாவை திட்ட அக்கா வந்தா தான் சரியா இருக்கும் என்று சொல்லுகிறார்.

நந்தினி சூர்யாவிடம் அங்க ஊர்ல அவ்ளோ பிரச்சனை போகுது என்னை எங்க கூட்டிகிட்டு போயிட்டு இருக்கீங்க தயவு செஞ்சு நிறுத்துங்க நான் ஊருக்கு போகணும் என்று சொல்ல ஊருக்கு போய் நீ என்ன பண்ண போற அந்த சுதாகர உன்னால என்ன பண்ண முடியும் என்று கேட்கிறார். நாலு பேர் கூட உன்னையும் சேர்த்து அஞ்சு பேரா டார்ச்சர் பண்ணுமா உன்னால என்ன பண்ண முடியும் என்று சொல்ல, எதையாவது பண்ணி நான் சமாளிச்சுப்பேன் என்னை இறக்கி விடுங்க என்று சொல்ல இந்த கார் உங்க ஊருக்கு தான் போகுது என்று சொல்ல நீங்க எதுக்கு வரிங்க நீங்க வந்தா இந்த வீட்டில பிரச்சனை ஆகும் என்று சொல்ல நீ தனியா போய் சுதாகர சமாளிக்க முடியாது அவனை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தான் தெரியும். நீ கவலைப் படாத எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் டென்ஷன் ஆகாமல் இரு போயிடலாம் என்று சொல்லுகிறார்.

மறுபக்கம் ரேணுகா அர்ச்சனாவிற்கு ஃபோன் போட்டு நந்தினியை சூர்யா சார் கையைப் பிடித்து இழுத்து கூட்டிட்டு போனாரு அதுக்கு முன்னாடி என்னமோ நடந்திருக்கு அதனாலதான் இப்படி பண்ணி இருக்காரு சீக்கிரமா அதை கண்டுபிடித்து சொல்கிறேன் என சொல்லி போனை வைக்க அர்ச்சனா எங்க போயிருப்பாங்க என்று யோசிக்கிறார். சிங்காரம் அறிவாளுடன் வாசலில் நின்று என்னை மீறி எவனாவது வந்துருவானா ஒன்னு அவன் உசுரோட இருக்கணும் இல்ல நா உசுரோட இருக்கணும் என்று சொல்லி முடிப்பதற்குள் சுதாகர் வந்து இறங்குகிறார். உடனே சிங்காரம் ஆம்பளை இல்லாத வீட்டில் வந்து வம்பு இழுத்து வச்சிருக்கீங்க என்று கேட்க என்ன ஜெயிலுக்கு அனுப்பிட்டு இந்த ஊர்ல நீங்க நிம்மதியா இருந்துருவீங்களா என்று கேட்கிறார்.

இப்போ உன் கண்ணு முன்னாடியே உன் வீட்டுக்குள்ள படுக்கையை போட்டு படுக்கப் போற உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என்று சொல்ல, சிங்காரம் அறிவாலுடன் மிரட்ட சுதாகர் அவரை அறைந்து கையில் இருக்கும் அரிவாளை தூக்கி வீச, அக்கம் பக்கத்தினர் சுதாகரை கண்டிக்க, அதையும் கேட்காமல் சுதாகர் சிங்காரத்தை அடித்து உள்ளே தள்ளி கட்டிப் போட்டு அடிக்கின்றனர். அம்மாச்சி அவர் அடிக்காதீங்க அவருக்கு உடம்பு முடியல என்ற சொல்ல சுதாகரின் அடியால் கறி குழம்பு வாசம் வரவில்லை என்று சொல்ல இவ செய்ய மாட்டானு தெரியும் அதனால தான் செட்டப்போட வந்து இருக்கேன் என சொல்லி சாப்பாடு சரக்கு பாட்டில் எடுத்துக்கொண்டு வந்து குடிக்க, புனிதாவிடம் கரியை சமைத்து கொடுக்க சொல்லுகிறார். சிங்காரம் குடும்பம் வாழற வீட்ல இதெல்லாம் பண்ணாதடா என்று கத்த சுதாகர் சிரித்துக் கொண்டே குடிக்கிறார்.

அம்மாச்சி பொம்பள புள்ளைங்கள அழ வச்சா அழிஞ்சு போயிடுவீங்க அநியாயம் பண்ணாதீங்க என்று சொல்ல எதுடி அநியாயம் என்று சுதாகர் மரியாதை இல்லாமல் பேசுகிறார். மறுபக்கம் சூர்யாவும் நந்தினியும் வந்து கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்திற்கு மேல் சுதாகருக்கு போதை அதிகமாக தள்ளாடி எழுந்து நிற்க சூரியா வந்த வேகத்தில் எட்டி உதைத்து அவனின் ஆட்களை அடிக்கிறார் பிறகு நந்தினி வந்து சிங்காரத்தின் கையை அவிழ்த்துவிட்டு அம்மாச்சியை கட்டிப்பிடித்து அழுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் நந்தினி குடும்பத்திற்கு புதியதாக வீடு பார்த்து அங்கு தங்க வைக்கிறார். நந்தினி அருணாச்சலம் காலில் விழுந்து நன்றி சொல்ல அதற்கு சூர்யா இது நடிப்பு டாடி அவன் நடிக்கிறா சூர்யா சார் நீங்களும் சொன்னானா என் காலில் விழவே இல்லை என்று கிண்டல் அடிக்கிறார். உடனே சிங்காரம் நீங்க செஞ்ச உதவிக்கு காலம் போற உங்க காலடியிலே இருப்போம் என்று சொல்ல அதற்கு சூர்யா நான் சும்மா விளையாட்டுக்காக சொன்னேன் என்று சொல்லுகிறார் அதற்கு அருணாச்சலம் நீ உன் பொண்ண கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்க நீ என்னோட சம்பந்தி சிங்காரம் என்று சொல்ல ஐயா அந்த வார்த்தை சொன்னா எனக்கு ஒரு மாதிரியாகுது ஐயா என்று சொல்லுகிறார்.

நாங்க எப்பவுமே உங்க வீட்டு வேலையாளி தான் ஐயா என்று சொல்கிறார் உடனே நந்தினி சூர்யா சார் மட்டும் வரலனா அந்த சுதாகர் எங்களுக்கு குடும்பத்தோட கொன்னுருப்பா இங்க வந்து பார்த்தா நீங்க இவ்ளோ பெரிய வீடு பார்த்து வச்சிருக்கீங்க ரொம்ப நன்றி ஐயா என்று சொல்ல ரெண்டு பேரும் மாத்தி மாத்தி நன்றி சொல்லிக்கிட்டு இருக்காதீங்க என்று அருணாச்சலம் சொல்ல இந்த விஷயம் மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சா பிரச்சனையாகும் என்று நந்தினி சொல்லுகிறார் சூர்யா தாய்க்குலம் தானே நான் பாத்துக்குறேன் அத பத்தி நீ கவலைப்படாதே என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

Moondru Mudichu Serial Promo Update 17-04-25
jothika lakshu

Recent Posts

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

8 minutes ago

Bloody Politics Official Teaser

Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…

13 minutes ago

PAAVAI Official Trailer

PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh

19 minutes ago

DHEIVAA Taster

DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan

23 minutes ago

Centimeter Lyric Video

Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…

39 minutes ago

Kalla Nikkiriye Lyric Video

Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…

43 minutes ago