moondru mudichu serial promo update 11-09-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினி இடம் மன்னிப்பு கேட்க, நந்தினி எனக்கு இந்த வீட்டில யாரால பிரச்சனை வந்தாலும் நீங்கதான கூட நிப்பீங்க, நீங்களே அடிச்சா நான் எங்க போவேன் என கேட்கிறார்.எங்க அப்பா கூட என்னை அடிச்சது இல்ல எனக்கு எவ்வளவு வலிச்சது தெரியுமா என் மனசுல வலியும் படபடப்போ அதிகமா இருக்கு என்று கண் கலங்கி அழ, சூர்யா கையெடுத்து மன்னிப்பு கேட்கிறார்.இந்த வீட்ல நீங்க சொன்ன எல்லா விஷயத்தையும் நான் செய்து கிட்டு இருக்கேன் நீங்களே இப்படி பண்ணா நான் என்ன பண்றது என்று சொல்ல நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்கிறேன்னு நம்ம ரூமுக்கு போகலாம் என்று சொல்ல நான் இங்கேயே தூங்குறேன் என சொல்லுகிறார். பிறகு எனக்கு ஒரு உதவி பண்றீங்களா என்று நந்தினி கேட்க செய்கிறேனா சூர்யா சொன்ன நாளைக்கு எங்க அப்பா வீட்ல என்ன கூட்டிட்டு போய் விடுங்க என்று சொல்ல சூர்யாவும் சரி கண்டிப்பா விடுறேன் வா என சொல்ல நந்தினியும் தூங்க வருகிறார்.
மறுநாள் காலையில் கல்யாணம் கிச்சனில் நந்தினி ஏன் இன்னும் வரவில்லை நமக்கு முன்னாடி வேலை பார்த்துக்கிட்டு இருக்குமே என பேசிக்கொண்டே காபி போடுகிறார். என்ன காரணமாக இருக்கும் உடம்புக்கு ஏதாவது முடியலையா என யோசித்துக் கொண்டே வேலையை செய்கிறார். பிறகு அருணாச்சலத்திற்கு காபி போட்டு எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க, காபியை குடித்த அருணாச்சலம் நீ போட்டியா நந்தினி எங்கே என்று கேட்க காலிலிருந்து ஆள் இல்ல என்ற சொல்லுகிறார். நான் வேணா போய் பாத்துட்டு வரவா என்று அருணாச்சலத்திடம் கேட்க அவரும் சரி போய் பாரு என்று சொல்லி அனுப்ப கல்யாணமும் காபி எடுத்துக்கொண்டு வந்து கதவை தட்ட இருவரும் தூங்கிக் கொண்டிருக்க சத்தம் கேட்டு சூர்யா எழுந்து வந்து கதவை திறக்கிறார். உடனே எதுக்காக இப்படி கதவை தட்டிக்கிட்டு இருக்க என்று கல்யாணத்திடம் கோபப்படுகிறார்.
உடனே நந்தினிக்கு தான் காபி என்று சொல்லி கல்யாணம் சொல்ல நந்தினி பக்கத்தில் வந்து உட்கார்ந்து காபி குடிக்க எழுப்ப நந்தினி எழுந்திருக்காமல் இருக்க தொட்டுப் பார்க்க உடம்பு கொதிக்கிறது என்று சொல்ல சூர்யாவும் வந்து தொட்டுப் பார்க்கிறார். உடனே நீங்க டாக்டருக்கு போன் பண்ணி சொல்லுங்க நான் பெரிய ஐயா கிட்ட சொல்றேன் என சொல்ல கல்யாணம் நந்தினியின் முகத்தை கவனிக்கிறார். உடனே ஆத்தா இறங்கி இருக்குமோ எந்த ஆத்தாவா இருந்தாலும் என்னோட தங்கச்சியை தண்டித்து விடாதே என்று நினைத்து விட்டு, அருணாச்சலத்திடம் வந்து நந்தினிக்கு உடம்பு நெருப்பா கொதிக்குது அம்மா இறங்கி இருக்கும் என்று நினைக்கிறேன் முகத்தில ரெண்டு முத்து இருக்கு என்று சொல்ல சரி டாக்டர் வரட்டும் அதுக்குள்ள நீ யார்கிட்டயும் எதுவும் சொல்ல வேண்டாம் என சொல்லி அனுப்புகிறார்.
அருணாச்சலமும் வந்து நந்தினியை பார்க்க கொஞ்ச நேரத்தில் டாக்டரும் வீட்டுக்கு வருகிறார் சுந்தரவல்லி என்ன விஷயம் என்று கேட்க உங்க பையன் சூர்யா வைஃப்க்கு உடம்பு சரியில்லன்னு கால் பண்ணி இருந்தாரு என்று சொல்ல சுந்தரவல்லி அனுப்பி வைக்கிறார். டாக்டர் ரூமுக்கு வந்து நந்தினியை எழுப்பி உட்கார வைத்து செக் பண்ணுகின்றனர். பிறகு சின்னம்மை நோய் வந்திருக்கு நான் டேப்லெட் கொடுக்கிறேன் அத கரெக்டா போடுங்க என்று சொல்ல அருணாச்சலம் நாங்க தெய்வமே வந்து இருக்கிறதா நம்புவோம் அதுக்கு என்ன பண்ணனும்னு எங்களுக்கு தெரியும் இன்னும் பத்து நாள்ல சரியா போயிடும் நாங்க பாத்துக்குறோம் என்று சொல்ல கேர்புல்லா பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார். பிறகு சூர்யாவிடம் அருணாச்சலம் கூட யாராவது ஒரு லேடீஸ் இருந்தா நல்லா இருக்கும் நான் சிங்காரத்து கிட்ட பேசி அவங்க பாட்டி வர சொல்றேன் நந்தினி இடம் பாட்டி வர சொல்ற நந்தினி என்று சொல்ல நந்தினியும் சரியென சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி இங்கதான் இருப்பா அவளுக்கு உடம்பு சரியாகும் வரைக்கும் எல்லோரும் சுத்த பத்தமா இருக்கனும் என சுந்தரவல்லி இருக்கும்போது சூர்யா சொல்லுகிறார். மறுபக்கம் சிங்காரம் பதறி அடித்துக் கொண்டு ஓடி வர சுந்தரவல்லி வந்து நிற்கிறார். நந்தினிக்கு அம்மா போட்டு இருக்குன்னு சொன்னாங்க என்று சொல்லிவிட்டு பார்த்துவிட்டு போலாம்னு வந்தேன்னு சொல்ல பார்த்துட்டு மட்டும் இல்ல கூட்டிட்டு போயிடு என சொல்லுகிறார். சூர்யா நந்தினியை பார்த்துக் கொள்ள நீங்க எதுக்கு சார் இதெல்லாம் பண்றீங்க என்று கேட்க எத்தனையோ வாட்டி எனக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்கு நீ என்ன பாத்துக்கலையா என்று கேட்கிறார். பிறகு நந்தினி படுக்க வைத்து வேப்பிலையை சுற்றி அடக்கி விசிறி விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…