moondru mudichu serial promo update 11-01-26
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா எனக்கு குளிரு நான் நந்தினி என்று சொல்லுவேன் என சொல்லிவிட்டு போக நந்தினி வெட்கப்படுகிறார். பிறகு சூர்யா குளித்துவிட்டு வந்தவுடன் அவருக்கு டிரஸ் போட்டு தலை துடைத்து விடுவது போல இருக்க பிறகு சூர்யா குளித்துவிட்டு வருகிறார் அப்போதுதான் தனியாக நந்தினி வெட்கத்தில் பேசிக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. பிறகு இருவரும் கீழே இறங்கி வருகின்றனர். அருணாச்சலம் சூர்யாவை பார்த்து உன்ன பாக்க ரொம்ப ஷாந்தமா அமைதியா இருக்க என்று பாராட்ட நீங்க என்ன சொல்றதை விட இதுக்கு காரணம் என் பொண்டாட்டி தான் என்று சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகிறார். ஒழுங்கா வாய மூடிட்டு இங்க இருந்து கிளம்ப சொல்லுங்க என்று சொல்ல சூர்யா சிரிக்கிறார். இதுக்கெல்லாம் காரணம் நீங்கதான் அவன பேசுறப்ப எல்லாம் நீங்க அமைதியா இருந்துட்டீங்க என்று சொல்ல என்ன உடைப்ப என்ன உடைப்ப என்று இருவருக்கிடையே வாக்குவாதம் அதிகரிக்க அருணாச்சலம் தடுக்கிறார்.
நான் அமைதியாக இருக்கிறேன் என்னோட ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க என்று கேட்டுவிட்டு இந்த வீட்டுக்கு மருமகளா நந்தினி வரத்துக்கு நீங்க கொடுத்து வச்சிருக்கணும்னு சொன்னேன்ல அதுக்கு உங்களோட விருப்பம் என்ன சரிதான் என்று சொல்ல சுந்தரவல்லி கடுப்பாகி போக சூர்யா சந்தோஷமாக செல்கிறார். பிறகு நந்தினி மற்றும் கல்யாணம் இருவரும் ஒட்டடை அடிக்கின்றனர். இப்ப எல்லாம் முன்ன மாதிரி யாரும் பொங்கல் கொண்டாடுவது கிடையாது என்று இருவரும் பேசி கொண்டு இருக்க அருணாச்சலம் வருகிறார். இந்த வருஷம் நம்ம இங்க பொங்கல் வச்சிடலாம் என்று சொல்ல அதெல்லாம் பண்ணிடலாமா என்று அருணாச்சலம் சொல்லி தேவையானதெல்லாம் வாங்கிட்டு வந்துடுங்க என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி சுரேகா மாதவியன நால்வரும் உட்கார்ந்து சந்தோஷமாக சிரித்து பேசிக்கொண்டு இருக்க அருணாச்சலம் நாளைக்கு என்ன கிழமை இப்படி உக்காந்துகிட்டு இருக்கீங்க என்று கேட்கிறார்.
நாளைக்கு பொங்கல் என்று சொல்ல நானே மறந்துட்டேன் என சுந்தரவல்லி சொல்லுகிறார். அங்க ஒத்த ஆளா நந்தினி வேலை பார்த்துக்கிட்டு இருக்கா என்று சொல்ல வழக்கம்போல செய்ற பொங்கல் சாப்பிட போறோம் அவ்வளவுதானே என்று அசோகன் சொல்லுகிறார். பிறகு வீட்டில் பொங்கல் வைக்கிறதுக்காக மண்பானை மஞ்சள் குங்குமம் வாங்க போயிருக்கா என்று சொல்ல உடனே சுந்தரவல்லி மண்பானையா நம்ம வீட்ல என்ன ஸ்டீல் வெண்கலம் பாத்திரம் இல்லையா என்று கோபப்படுகிறார். உடனே அருணாச்சலம் பாரம்பரியம்னு ஒன்னு இருக்கு நீங்க எதிலயும் கலந்துக்கலனாலும் பொங்கல் சாப்பிடறதுக்காவது கீழே இறங்கி வாங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட மாதவி கோபப்பட்டு திட்டி விட்டு ஏதாவது அவளை பண்ணனும் என்று முடிவு எடுக்கிறார்.
நந்தினியும் கல்யாணமும் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பூஜை ரூமில் வைக்கின்றனர். பிறகு ரூமில் சூர்யா நந்தினி இடம் ஏதாவது தீபாவளி பொங்கல் வந்தால் நீ ரொம்ப பரபரப்பா வேலை செய்ய ஆரம்பிச்சிடுற என்று சொல்ல, அதெல்லாம் பழகிடுச்சு சார் எங்க அம்மா எல்லாம் விடிய விடிய வேலை செஞ்சிட்டு தான் இருப்பாங்க என்று சொல்ல அதனாலதான் எல்லா வேலையும் சீக்கிரமா பண்ற என்று சொல்லுகிறார். இந்த ஊர்ல வேலை செய்றவங்க முதலாளி எல்லாம் ஒன்றாக சேர்ந்து பொங்கல் வைக்க மாட்டாங்களா என்று சொல்ல அப்படி எல்லாம் எதுவும் பண்ண மாட்டாங்க என்று சொல்லுகிறார். நிறைய பழக்கவழக்கங்கள் கிராமத்திலேயே இல்லாமல் போயிடுச்சு என்று சொல்ல உன்னாலே நான் ரொம்ப நல்ல விஷயம் தெரிஞ்சிக்கிறேன் என்று சொல்லுகிறார். தொழிலாளிகளை கூப்பிட்டு அவங்க கூட பொங்கல் வைக்கிற பழக்கம் இல்லையா என்று கேட்க சூர்யா யோசிக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி வீட்டில் கோலாகலமாக பொங்கல் விழா நடைபெறுகிறது. கம்பெனியில் உள்ளவர்களும் வீட்டில் நடக்கும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கின்றனர். அப்போது நடக்கும் கேமில் சுந்தரவல்லி பரதநாட்டியம் ஆட வேண்டும் என்று வர சுந்தரவள்ளியும் பரதநாட்டியம் ஆடியசத்துகிறார். சுந்தரவல்லி டான்ஸ் ஆடுவதை பார்த்து அனைவரும் வியப்பாக பார்க்கின்றனர். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…
சினிமா வாழ்க்கை நிரந்தரமில்லை - மனம் திறந்த ராஷி கன்னா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, திருச்சிற்றம்பலம், அரண்மனை…
விரைவில் தொடங்க இருக்கும் விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி..! விஜய் டிவியின் பிரபல நடன நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…