moondru mudichu serial promo update 10-10-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் எந்த உரிமையில சொல்றேன்னு கேக்குறீங்களே நான் உங்க பொண்டாட்டி என்று சொல்லுகிறார். அது அந்த தாய்க்குலத்துக்காக விளையாட்டா சொன்னது என்று சொல்ல ஆரம்பத்தில் அப்படி இருந்தாலும் அதுவே போக போக மனதில் பதிந்திடும் என்று சொல்ல இப்ப நீ முன்னாடி இல்ல இப்போ வெறுப்பேத்தாத அந்த சரக்க என் கிட்ட கொடுத்து விடு என் சுதந்திரத்தை கெடுத்து விடாத என்று சொல்ல நீங்க யாரைப் பற்றியாவது யோசித்து பார்த்திருக்கீங்களா உங்க அப்பாவ நெனச்சு நீங்க யோசிக்கவே மாட்டீங்களா அவர் மனசுல அவ்வளவு வேதனை ரணமா இருக்கு அவருக்கும் இந்த குடும்பத்துக்கும் நீங்க ரொம்ப முக்கியம். நான் அருணாச்சலம் ஐயா என்கிட்ட எதுவும் கேட்டதில்லை அவர் முதல் முறையா உங்க குடியை நிறுத்தணும்னு சத்தியம் வாங்கினார் ஆனா என்னால் அதைக் கூட அவருக்கு செய்ய முடியல இதுக்கு மேல குடிச்சீங்கன்னா எனக்கும் ஒரு டம்ளர் ஊத்துங்க நானும் குடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு சரக்கை எடுத்துக் கொண்டு வந்து வெளியில் போட்டு விடுகிறார்.
பிறகு நந்தினி வெளியில் தனியாக உட்கார்ந்து அருணாச்சலம் ஐயா நல்லவரா இருக்காரு சூர்யா சார் நல்லவரா இருக்காரு ஆனா சுந்தரவல்லி அம்மா மட்டும் ஏன் இப்படி இருக்காங்க சரி அதை விட்டுவிடலாம் இப்ப வேற சூர்யா சார் கிட்ட குடிக்க கூடாதுன்னு சொல்லி இருப்பேன் இப்ப என்ன பண்ணுவாரு உள்ள போன உடனே சண்டை போடுவார் ஆனாலும் இருந்தாலும் பரவாயில்லை அவரு எனக்காக எவ்வளவு செஞ்சு இருக்காரு இந்த கடனை என் வாழ்நாள் முழுக்க இருந்தாலும் தீர்க்க முடியுமா என்று சொல்லி தனக்குத்தானே பேசிக் கொண்டிருக்கிறார். மறுபக்கம் சூர்யாவும் எதுக்கு நந்தினி இப்படி புதுசா பண்ணிக்கிட்டு இருக்கா என்று அவரும் தனியாக யோசிக்க நந்தினி நான் இந்த வீட்டுக்கு ஒண்ணு பண்ணனும்னா அவர குடியிலிருந்து வெளியில் கொண்டு வரணும் அதுதான் அருணாச்சலம் ஐயாவுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் சூர்யா சார் ரொம்ப நல்லவரு அவரு ரொம்ப காலம் சந்தோசமா வாழனும் நான் எடுக்க போற இந்த முயற்சி கண்டிப்பா ஜெயிக்கணும் என்று சொல்ல, மறுபக்கம் சூர்யாவும் கொஞ்சம் கூட பயமும் தயக்கமும் இல்லாமல் பேசுறா ஒருவேளை டாடி குடிய நிறுத்திட்டு வீட்டுக்கு போன சொல்லிட்டார என்று யோசிக்கிறார். சரி இன்னைக்கு ஒரு நாள் தானே குடிக்காமல் விட்டுவிடுவோம் என்று சொல்லுகிறார்.
சரி நாளைக்கு எப்படி குடிக்கிறதுன்னு நாளைக்கு முடிவு பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டு சூர்யா சென்று விட நந்தினி உட்கார்ந்திருப்பதை பார்த்து அருணாச்சலம் வருகிறார். அவன் சொன்னதைக் கேட்டு நீ வேற வீட்டை விட்டு போகலாம்னு பாத்தியாமா என்று சொல்லுகிறார். உன்னை மாடியில் பார்த்த உன்ன தான் எனக்கு நிம்மதியா இருந்தது. அவன் சொன்னான் என்றெல்லாம் நீ கிளம்பி விடக்கூடாது இது உன்னோட வீடு என்று சொல்ல, நீங்க கவலைப்படாதீங்க ஐயா சூர்யா சார் சொல்லி போகலைன்னா நான் வேற யார் சொன்னாலும் போகமாட்டேன் என்று சொல்ல ரொம்ப நன்றிமா என்று சொல்லுகிறார். நீ இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து என்ன வீட்ல எடுத்துனு போய் விட்டு விடுங்கள் தான் நீ சொல்லி இருக்க, ஆனா இப்போ இந்த வீட்ல இருந்து நீ போமாட்டேன்னு சொல்றதுக்கு நான் கேட்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குமா என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் ரூமில் சூர்யா சரக்கு பாட்டில்களை வைத்து எதையோ கணக்கு பண்ணி எழுதிக் கொண்டு இருக்க நந்தினி வந்து பார்த்து என்ன பண்றீங்க என்று கேட்கிறார். எதுக்கு சாராயம் பேர் எழுதிக்கிட்டு இருக்கீங்க என்று கேட்க அந்த அளவுக்கு ஞாபகம் இருக்கா என்று கேட்க, நீங்கதான் சாப்பிடவிடாமல் தூங்க விடாம சொல்லிக் கொடுத்தீங்களே தெரியுது என சொல்லுகிறார்.
நான்தான் உங்கள குடிக்க வேணாம்னு சொன்னேனே இப்ப நீங்க குடிக்க போறீங்களா என்று கேட்க அதைப்பற்றி இன்னும் முடிவு பண்ணல என்று சூர்யா சொல்லுகிறார். நீங்க குடிச்சீங்கன்னா நான் சொன்னதை செஞ்சிருவேன் அப்புறம் நானும் குடிப்பேன்னு சொல்ல உனக்கு எந்த பாட்டில் வேணும் சொல்லு என்று சொல்லி ஒரு பாட்டிலை எடுத்து ஓபன் பண்ணி நந்தினி பக்கத்தில் கொடுக்க நாத்தம் அடிக்குது என்று சொல்லுகிறார். எனது நாத்தமா தேவாமிர்தம் மாதிரி இருக்கு என்று சூர்யா சொல்லுகிறார். இது பிடிக்கலன்னா லேடிஸ் ஸ்பெஷல் ஒன்னு இருக்கு என்று சொல்லி இன்னொரு சரக்கை எடுத்துக்காட்ட நந்தினி அதையும் பார்த்து முகம் சுழிக்க எப்படி குடிப்ப என்று கேட்க நீங்க குடிச்சீங்கன்னா நான் மூக்க பிடித்துவிட்டது குடிச்சிடுவேன் என்று சொல்லுகிறார். அதனாலதான் இப்போ நான் அளவு எழுதிக்கிட்டு இருக்கேன் ஒரு குடிகாரன் மட்டும் இருந்தா போதாது ரூம்ல இன்னொரு குடிகார இருந்தா நீ என்னோட சரக்க எடுத்து குடிச்சிட்டா என்ன பண்றது அதுக்காக தான் நான் அளவை எழுதிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார். நான் என்னமோ சரக்கு சரக்குன்னு அலஞ்சிக்கிட்டா இருக்கேன் என்று கேட்கிறார். எல்லாத்தையும் நான் நோட் பண்ணிட்டேன் என்று சொல்லிவிட்டு, நீ என்கிட்ட குடிப்பேன்னு சும்மாதான சொன்ன என்று சொல்ல இல்ல நான் கண்டிப்பா குடிப்பேன் என்று உறுதியாக சொல்லுகிறார். நீ வக்கீல் மாதிரி கிராஸ் கொஸ்டின் பண்ணாத நந்தினி என்று சொல்ல நான் வக்கீல் மாதிரியும் கேட்பேன் ஜட்ஜ் மாதிரியும் கேட்பேன் உங்க உடம்புக்கு ஒத்துக்கொண்டால் என் உடம்புக்கும் ஒத்துக்கோ என்று நந்தினி சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சுரேகாவுக்கு மஞ்சள் துணியில் காசு வைத்து கட்டி கையில் கட்டி விட்டு பிறகு சரியான உடல் கோவில் உண்டியலில் போட வேண்டும் என்று சொல்ல சுரேகா தூக்கி விசிறி அடித்து விடுகிறார். சுரேகாவுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு நந்தினி விட்டால் வேறு யாராலும் இல்லை என்றது உனக்கு தெரியுதா என்று கேட்கிறார். நந்தினி வந்து சுரேகாவிடம் உடம்பில் அம்மா குறைஞ்சிருக்கு முதல் தண்ணி ஊத்திடலாம் என்று சொல்ல நீ முதல்ல எங்க அம்மா வர சொல்லு என்று சொல்ல என்ன தான் செய்ய சொல்லி இருக்காங்க என்று நந்தினி சொல்ல சுரேகா அதிர்ச்சி அடைகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
காந்தாரா 2 படத்தின் 7 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…