moondru mudichu serial promo update 04-11-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் மாதவி சொல் பேச்சு கேட்டு ரஞ்சிதா வந்து கம்பி மத்தாப்பு எடுக்க வர ஏற்கனவே இருந்த கம்பி மத்தாப்பு பட்டு கை சுட்டு விடுகிறது. உடனே சத்தம் கேட்டு அனைவரும் வந்துவிட ரஞ்சிதா வலியில் துடிக்கிறார். பிறகு சூர்யா ஆயின்மென்ட் வைத்து விட, மறுபக்கம் சுரேகா மாதவி என மூவரும் சந்தோஷப்பட்டு சிரித்து பேசி இதை அம்மாகிட்ட முதல்ல சொல்லணும் என சுந்தரவல்லி இடம் வந்து ரஞ்சிதாவிற்கு நடந்த விஷயத்தை சொல்லி சந்தோஷப்பட, உடனே எனக்கு இந்த விஷயம் மட்டும்தான் ஆறுதலா இருக்கு என்று சொல்ல, இதுக்கப்புறம் எல்லாமே மாறிவிடும் என்கிட்ட இன்னொரு பிளான் இருக்கு சூர்யா அவளுக்காக வாங்கி கொடுத்த புடவையை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று சொல்லுகிறார். பிறகு ரூமில் அனைவரும் உட்கார்ந்திருக்க உனக்கு எது வெடிச்சது வெடிக்காதுன்னு தெரியலையா என்று கேட்க இருட்டுல தெரியல அக்கா என்று சொல்லி அழுகிறார்.
மாதவி அசோகன் தூங்கிக் கொண்டிருக்க திடீரென எழுந்த மாதவி அசோகனை எழுப்பி பூஜை ரூமுக்குள் அழைத்து வருகிறார். அங்கு வந்து சூர்யா நந்தினிக்காக எடுத்த புடவையை மாதவி எடுத்துப் பார்த்துவிட்டு பூஜை ரூமில் இருக்கும் என்னையை அசோகனை எடுக்கச் சொல்லி புடவையின் ஊற்ற சொல்லுகிறார். அவரும் புடவை முழுக்க ஊத்தி விடுகிறார் பிறகு அந்த பாட்டிலை போட்டுவிட்டு இத நம்ம ஊத்தல எலி ஊத்திருக்கு அவங்க நாளைக்கு வந்து பார்க்கும்போது அவங்களுக்கு இப்படி தான் தோணும் என்று சொல்லிவிட்டு போக அசோகன் தெரியாமல் எண்ணெயில் காலை வைத்து விடுகிறார் பிறகு இருவரும் அங்கிருந்து சென்று விடுகின்றனர். மறுநாள் காலையில் நந்தினி சூர்யாவை குளிக்க எழுப்பி பாத்ரூமுக்குள் அழைத்துப் போக நானே குளிக்கிறேன் என்று சொல்ல எண்ணெய் தேய்த்து குளிக்கணும் நான் தேச்சு விடுகிறேன் என்று சொல்லி நந்தினி சூர்யாவிற்கு எண்ணெய் தேய்த்து விடுகிறார்.
பிறகு சூர்யாவை நந்தினி குளிக்க வைத்து விட்டு ரெடியாகி கீழே இருவரும் வர குடும்பத்தினர் கீழே காத்துக்கொண்டிருக்கின்றனர். அனைவரும் பூஜை ரூமுக்கு வந்து புடவையை எடுத்துக் கொடுக்க வர சிங்காரம் புடவையை கையில் எடுத்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார். புது புடவை ஃபுல்லா எண்ணெயாக இருக்கே என்று சிங்காரம் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். கீழயும் என்ன கொட்டி இருக்கு எலி தட்டி விட்டு இருக்குமோ என்று சொல்ல, அருணாச்சலம் சரி நீ வாங்கின டிரஸ் இருக்கு இல்ல அதை எடுத்துக்கிட்டு வந்து கொடு என்று சொல்ல நந்தினி வேண்டாம் சார் யாருக்கும் எந்த ட்ரெஸ்ஸும் வேண்டாம் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் இந்த வருஷம் தீபாவளிக்கு தான் நாங்க ரெண்டு பேரும் புது டிரஸ் போட்டு கொண்டாடலாம்னு ஆசையா இருந்தோம் அதுக்குள்ள இது மாதிரி ஆயிடுச்சு என்று நந்தினி கண்கலங்கி அம்மாச்சியிடம் அழுது கொண்டிருக்கிற மறுபக்கம் மாதவி சுந்தரவல்லி இடம் அவங்க தீபாவளி இந்த வருஷம் கொண்டாடாத மாதிரி நான் பண்ணிட்டேன் என்று சொல்லுகிறார். சூர்யா மாதவி சுரேகா அசோகன் மூவரையும் சந்தேகமாக பார்க்க அசோகன் இவர் சும்மா இருந்தாலே நோண்டி நுங்கு எடுத்திடுவான் இப்ப என்ன பண்ண காத்திருக்கானோ தெரியலையே என்று பயப்பட இப்போ எனக்கு இதை யார் பண்ணாங்கன்னு தெரிஞ்சாகணும் என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மகேஸ்வரி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…