moondru mudichu serial promo update 02-10-25
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் இந்த கம்பெனியோட இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு சுந்தரவல்லி மட்டும்தான் காரணம் என சொல்லுகிறார். தன்னைத்தானே சுந்தரவல்லி பெருமையாக பேசிக்கொண்டு இருக்க மறுப்பக்கம் கம்பெனியில் வேலை செய்யும் பெண் சூர்யாவிடம் நீங்க பேசலையா என்று கேட்கிறார் முதல்ல அவங்க பேசறது கேளுங்க என்று சொல்ல உடனே நந்தினி இதை கவனிக்கிறார். மேலும் சூர்யாவிடம் நீங்க ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுனீங்க நம்ம ஒரு செல்பி எடுத்துக்கலாமா என்று கேட்டு சூர்யாவின் கைகோர்த்து செல்ஃபி எடுக்க நந்தினி கோபப்படுகிறார். பிறகு அனைவரும் சென்றுவிட நந்தினி அந்தப் பெண்ணின் போனை வாங்கி சூர்யாவிடம் எடுத்த போட்டோக்களை டெலிட் பண்ணி விட்டு கொடுக்கிறார். எதுக்கு டெலிட் பண்ணீங்க என்று கேட்க ஒரு ஆம்பள கிட்ட எப்படி பேசணும்னு உனக்கு தெரியாதா எதுக்கு ஒட்டிக்கிட்டு நின்னு பேசுற என்று கேட்க அவர் இந்த கம்பெனியோட முதலாளி நான் போட்டோ எடுத்துக்குவேன் உங்களுக்கு என்ன பிரச்சனை போல நீங்க யாரு என்று கேட்கிறார். உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என்று கேட்க நந்தினி தாலியை எடுத்து கெத்தாக காட்டுகிறார் இந்த உரிமையில் தான் என எடுத்துக்காட்டுகிறார்.
இப்ப எதுக்கு கோவம் எனக்கு வந்ததுன்னு புரியுதா போ என்று துரத்தி விடுகிறார்.இனி சூர்யா சார் பக்கத்துல யாராவது வந்தீங்கன்னா அவ்வளவு தான் எனக்கு சொல்லிக் கொண்டிருக்க சூர்யா வந்து உள்ளே வராமல் இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க நான் எதுக்கு வரணும் உங்க பக்கத்துல தான் உரசி கேட்டு நிக்கிறதுக்கு ஆள் இருக்கே என்று சொல்லுங்கள். எது அந்த புதுசா வந்த பொண்ணா டான்ஸ் நல்லா இருக்குன்னு சொன்ன என்று சொல்ல டான்ஸ் நல்லா இருக்குன்னு சொன்னா கூட பேசிகிட்டு இருக்கீங்களா என்று கோபப்பட, திடீர்னு எதுக்கு உனக்கு இவ்வளவு பொசசிவ் ஆகற என்று கேட்கிறார் இவ்வளவு நாளா எதுவாக இருந்தாலும் எனக்கு கோவம் வந்தது என்று சொல்ல சரி அப்புறம் பேசிக்கலாம்வா என்று அழைத்துச் செல்கிறார். முதலில் சுந்தரவல்லி ஒரு மெஷினை ஆன் பண்ணி வைக்க பிறப்பே இரண்டாவது மிஷினை நந்தினியை ஆன் பண்ண சொல்லுகின்றனர்.
நந்தினி ஆன் பண்ணப் போகும் நேரத்தில் கரண்ட் ஆஃப் ஆகிவிடுகிறது. உடனே சுந்தரவல்லி என்ன ராசி இவளோடது இவர் தத்திரம் புடிச்சவ இவ கை வச்சா எப்படி விளங்கும் என்று சொல்லுகிறார். உடனே நந்தினி அங்கிருந்து வந்து விடுகிறார். சூர்யா நீ ஏன் நந்தினி வந்த கரண்ட் வந்துரும் என சொல்லிக்கொண்டு இருக்கும் போது கரண்ட் வந்துவிடுகிறது என்று சொல்ல வேணாம் சார் வேற யாராவது ஆன் பண்ணட்டும் என்று சொல்லிக் கொண்டு இருக்க மறுபக்கம் சுந்தரவல்லி மாதவி நீ போய் ஆன் பண்ணு என்று சொல்லுகிறார். மாதவி வேண்டாம் என சொல்ல அசோகன் ஷாக் அடிக்கும் என உளறி விடுகிறார். அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ போய் ஆன் பண்ணு ஏன்னா சொல்லிக் கொண்டே இருக்க மாதவி போகாமல் இருக்கிறார்.ஆனாலும் சூர்யா வலுக்கட்டாயமாக நந்தினியை அழைத்துப் போக அதற்குள் சுந்தரவல்லி வந்து ஆன் பண்ணி விட ஷாக் அடித்து மயங்கி விடுகிறார் அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்கின்றனர். எப்படி ஷாக் அடிச்சது என்று கேட்க, கம்பெனியில மெஷின் ஆன் பண்ணும்போது ஆயிடுச்சு என்று சொல்ல ஒன்னும் இல்ல ஈவினிங் வரைக்கும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்று விடுகிறார்.
சுரேகா அது எப்படி புது மெஷினில் ஷாக் அடிக்கும் என்று கேட்க அருணாச்சலமும் அதுவும் கரெக்ட் தான் என்று சொல்லுகிறார். உடனே அசோகனிடம் எப்படி நடந்தது என்று கேட்க எல்லாமே கரெக்டா தான் இருந்தது என்று சொல்லி சமாளிக்கிறார் உடனே சுந்தரவல்லியும் கண் முழிக்க உனக்கு ஒன்னும் இல்ல சுந்தரவல்லி பயப்படாத டாக்டர் கிட்ட பேசிட்டேன் என்று சொல்லுகிறார். உடனே சூர்யாவை பார்த்து நீ இந்த அளவுக்கு போவேன்னு நான் நினைக்கல எனக்கு கரண்ட் ஷாக் அடிச்சு எடுக்க காரணம் நீதானே என்று சொல்ல, அருணாச்சலம் என்ன பேசிக்கிட்டு இருக்க என்று கேட்கிறார். பெரிய பிளான் பண்ணி இருக்கான் என்று சொல்ல இவங்க எதுக்கு சம்பந்தமே இல்லாம பேசிக்கிட்டு இருக்காங்க நான் ஏன் அப்படி பண்ணனும் என்று சொல்ல போதும் சூர்யா என்று சொல்லுகிறார். எனக்கு ஷாக் அடிக்க வச்சது நீ தானே என்று சொல்ல ரொம்ப சூப்பரான கற்பனை ஆனா கேவலமா இருக்கு என்று சொல்லுகிறார்.
உன் பொண்டாட்டி தான் அந்த இரண்டாவது மெஷினை ஆன் பண்ணனும்னு குறியா இருந்த இல்ல என்று சொல்ல, அவதான மெஷினை ஆன் பண்ணப் போனா நீங்க எதுக்கு குறுக்க வந்தீங்க என்று கேட்கிறார். நீ ஆன் பண்ண மிஷினில் அது மாதிரி இருந்தா நீ சொல்றது பரவால்ல நீயா சொல்லணும்னு ஒன்னு சொல்லாத என்று சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் இதை யாரோ திட்டம் போட்டு பண்ணியிருக்காங்க என்று சொல்ல திட்டம் போட்டு தான் பண்ணி இருக்காங்க ஆனா அது தாய்குலத்துக்கு இல்ல உனக்கு என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுந்தரவல்லி ஹாஸ்பிடல் இல் இருந்து வந்த கையோடு வெளியில் நின்று ஒன்னு இந்த வேலைக்காரி இந்த வீட்ல இருக்கணும் இல்ல நான் இருக்கணும் என்று சொல்லுகிறார். அப்போ அவ இருக்கட்டும் நீங்க கிளம்புங்க என்று சொல்ல இந்த வேலைக்காரிக்காக நான் போகணுமா என்று சொல்ல அவ வேலைக்காரி கிடையாது என்னோட பொண்டாட்டி நான் ராஜா நான் அவ ராணி என்று சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
Thennaadu Lyric Video | Bison Kaalamaadan ,Dhruv, Anupama , Mari Selvaraj , Nivas K Prasanna…
Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | AR Rahman | Aanand L…
Aaryan Tamil Teaser | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…