சுந்தரவல்லியிடம் போட்டு கொடுத்த மாதவி சுரேகா, திதியை தடுப்பாரா சுந்தரவல்லி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது .இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி காய்கறி கூடைகளை அடுக்கிக் கொண்டிருக்க எதுக்குமா இவ்வளவு வாங்குன என்று கல்யாணம் கேட்கிறார். அவரு காய்கறி கடையை பார்த்து ஜாலியா ஆயிட்டாரு அவர்தான் எல்லாத்தையும் வாங்கிட்டாரு நான் சொன்னா கேட்கல என்று சொல்லி பேசிக் கொண்டிருக்கிறார். சுந்தரவல்லி காரில் வந்து இறங்கியவுடன் புஷ்பா நந்தினி சூர்யாவை கூட்டிக்கொண்டு கடைக்குப் போனதாக சொல்லி பற்ற வைத்து விடுகிறார். காய்கறி கூடையை சூர்யா சார் தூக்கிட்டு வந்தாரு என்றெல்லாம் எக்ஸ்ட்ராவாக போட்டுக் கொடுக்க உச்சகட்ட கோபத்தில் சுந்தரவல்லி உள்ளே வந்து, காய்கறிகளை தூக்கி வீசுகிறார்.

இவை யாரு என் பையன் இந்த வேலை வாங்கறதுக்கு என்று திட்டுகிறார். என் பையன் யாரு தெரியுமா இந்த வீட்டோட இளவரசன் வேலை வாங்குறதுக்கு நீ யாரு? நான் எதுவுமே பண்ணல சார் தான் அவரே வந்து ஹெல்ப் பண்ணாரு. என்று சொல்ல அவளை பேச வேணாம்னு சொல்லு என்று சொல்லிவிட்டு இந்த காய்கறிகளை தூக்கி குப்பை தொட்டியில் போடுங்க.. வேற காய்கறி வாங்கிட்டு வர சொல்லுங்க என்று சொல்லி திட்டிவிட்டு சென்றுவிடுகிறார்.

மாதவி எதுக்கு இப்படி பண்ணிக்கிட்டு இருக்க நந்தினி என்று கேட்க வெளியில போனா நிம்மதியா இருக்கும்னு நான் வெளியே போன ஆனா சூர்யா சார் தான் பைக்ல வந்து வற்புறுத்தி காய்கறி கடைக்கு கூட்டிட்டு போனாரு நான் வேண்டான்னு தான் சொன்னேன் என்று சொல்லுகிறார். ஆனால் சுரேகா இது இன்னும் அம்மாக்கு தெரிஞ்சி இருந்தா நீ இன்னும் திட்டு தான் வாங்கி இருப்பேன் இதெல்லாம் வேண்டாம் சார்னு சொல்லிட்டு நீ விட்டு இருக்க வேண்டியதுதானே என்று பேசுகிறார். உடனே மாதவி சரி விடு வா போகலாம் என்று சென்று விடுகிறார். பிறகு கல்யாணம் புஷ்பாவை கூப்பிட்டு திட்டுகிறார். நந்தினிக்கு ஆறுதல் சொல்லி உள்ளே அழைத்து சென்று விடுகிறார்.

நந்தினி சூர்யாவின் நண்பன் மனைவிக்கு போன் போட்டு பேசுகிறார். உங்ககிட்ட ஒரு உதவி என்று கேட்கிறார். என்ன வேணும்னு கேளு என்று சொல்ல, நாளைக்கு எங்க அம்மாவோட திதிகா நா வருஷா வருஷம் ஊர்ல பண்ணிக்கிட்டு இருந்தேன் ஆனா இந்த வீட்ல இருக்குற நிலைமையில இங்க பண்ண முடியாது. அதனால நான் உங்க வீட்ல பண்ணிக்கலாமா என்று கேட்க தாராளமா பண்ணிக்கோ ஏதாவது நான் வாங்கி வைக்கணுமா என்று கேட்க அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா நானே வாங்கிட்டு வந்துருவேன் நீங்க ஒரு மூன்று சுமங்கலி பெண்களை மட்டும் கூப்பிடுங்க போதும் என்று சொல்லிவிட்டு போனை வைக்கிறார். அருணாச்சலம் போலீஸ் இடம் நகை குறித்து விசாரித்துக் கொண்டிருக்க நந்தினி வருகிறார்.

நாளைக்கு அம்மாவோட திதி அதுக்காக சூர்யா சார் ஓட ஃப்ரண்ட் வீட்டுல பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் என்று சொல்ல இவ்வளவு பெரிய வீடு இருக்கும்போது நீ எதுக்கு மத்தவங்க வீட்டுல பண்ணனும். கடல் மாதிரி வீடு இருக்கு அதுவும் இல்லாம அவங்க உனக்கு அம்மா என்றால் எங்களுக்கு சம்மந்தி அம்மா நீ என்ன பண்ணனுமோ இங்கேயே பண்ணு என்று சொல்லுகிறார். அம்மா ஏதாவது சொல்லுவாங்க ஐயா என்று சொல்ல இந்த விஷயத்துல எதுவும் சொல்ல மாட்டா அந்த அளவுக்கு அவ மோசமானவை இல்ல நீ என்ன பூஜை வேணும்னாலும் பண்ணிக்கோ என்று சொல்லிவிடுகிறார். பிறகு நந்தினி சூர்யாவின் நண்பன் மனைவிக்கு போன் போட்டு நடந்த விஷயங்களை சொல்ல சரி நான் நாளைக்கு அங்க வந்துறேன் நந்தினி என்று சொல்லுகிறார்.

பிறகு நந்தினி அம்மாச்சிக்கு போன் போட்டு பேசுகிறார். அவர்கள் நலம் விசாரிக்க பிறகு ரஞ்சிதாவிடம் பேசுகிறார். நம்மள மாதிரி ஏழைகளுக்கு படிப்பு மட்டும்தான் ரொம்ப முக்கியம். நீ நல்லா படிக்கணும் என்று சொல்லுகிறார். அம்மாச்சி கிட்ட போன் கொடு என்று சொல்ல, நாளைக்கு என்ன நாள் என்று தெரியும் இல்ல நந்தினி என்று சொல்ல அதை எப்படி அம்மாச்சி நான் மறப்பேன் அம்மாவோட திதி தானே. என்று சொல்ல நான் இங்கே பூஜை பண்ண தான் போறேன் எல்லாம் வாங்கிட்டேன் என்று சொல்லுகிறார். நானும் இங்க பண்ண தான் போறேன் அம்மாச்சி என்று சொல்ல அந்த அம்மா ஏதாவது சொல்ல போறாங்கம்மா என்று சொல்லுகிறார். ஐயா அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்கன்னு சொல்லியிருக்காங்க என்று அம்மாச்சியிடம் நந்தினி சொல்லுகிறார்.

சரி அவர நம்பி நீ பண்ணு உங்க அம்மா எங்க இருந்தாலும் ஆசீர்வாதம் பண்ணுவா நீ சந்தோஷமா இருப்ப நான் வச்சுட்டுமா என்று சொல்லி ஃபோனை வைக்கிறார். சூர்யா மாடியில் தனியாக குடித்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்க அருணாச்சலம் அவரை கூப்பிடுகிறார்.

என்னாச்சு டாடி என்று கேட்க நீ நாளைக்கு ஒரு நாளைக்கு குடிக்க கூடாது என்று சொல்ல எதுக்கு டாடி என்று சூர்யா ஷாக் ஆகிறார். எதுக்கு என்று கேட்க நாளைக்கு நந்தினி ஓட அம்மாவிற்கு நினைவு நாள் அதனால நீ நந்தினி சாமி கும்பிட்டு முடிக்கிற வரைக்கும் குடிக்காம சுத்த பத்தமா இருக்கணும் என்று சொல்ல சூர்யா டென்ஷன் ஆகி என்னால சுத்தமா முடியாது அவங்க அம்மாவுக்காக அவங்க இருக்கட்டும். நான் எதுக்கு இருக்கணும் என்னால முடியாது என்று உறுதியாக சொல்ல, அருணாச்சலம் டென்ஷன் ஆகி சூர்யாவை திட்டுகிறார். ஒரு நாள் ரொம்ப பெருசு டாடி காலைல மதியம் நைட்டு ரொம்ப கஷ்டம். பிறகு அருணாச்சலம் சூர்யாவை அதட்டி, ஏற்கனவே நந்தினியை உங்க அம்மா திட்டி கிட்டு இருக்கா, ஆனா இந்த விஷயத்துல எதுவும் பண்ண மாட்டான்னு நான் நினைக்கிறேன் ஆனா அதையும் மீறி ஏதாவது அவ சொல்ல வாய்ப்பு இருக்கு ஆனா நீ அந்த இடத்திலிருந்து நான் அவ ஒதுங்கிப் போயிடுவா அதனால தான் சொல்றேன் என்று சொல்ல இந்த பாயிண்ட் ஓகே டாடி நான் இதுக்காக கண்டிப்பா இருப்பேன் என்று சொல்லுகிறார். மறுநாள் காலையில் நந்தினி குளித்துவிட்டு கிச்சனில் சமையல் வேலையை பார்த்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி வருகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் கல்யாணம் ஆவதற்கு முன்னாடி தான் ஐயா என்று கூப்பிட்டு இருந்த இப்ப என் மருமகமா நீ என்று சொல்ல மருமக இல்லையா மருமக மாதிரி என்று சொல்லுகிறார் நந்தினி.

நந்தினி வேலை பார்த்துக் கொண்டிருக்க சுரேகா தென்ன மட்டை என்ன பண்ணிக்கிட்டு இருக்க என்று கேட்க அருணாச்சலம் சுரேகா நந்தினி இந்த வீட்டோட மருமக என்று திட்டுகிறார். அவர்கள் சுந்தரவல்லி இடம் சொல்ல அவங்க அம்மாக்கு திதி கொடுக்கிராலாம்மா என்று கோபமாக அங்கே செல்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

jothika lakshu

Recent Posts

இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

11 hours ago

அஜித் 64 படத்திற்கு சம்பளத்தை உயர்த்திய அஜித்..!

சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…

13 hours ago

குஷி படத்தை தொடர்ந்து ரீ ரிலீஸ் செய்யப்போகும் விஜயின் ஹிட் திரைப்படம்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…

13 hours ago

ஜனநாயகன் படம் எப்படி இருக்கும்..H.வினோத் கொடுத்த தரமான தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…

17 hours ago

வருத்தப்பட்ட கிரிஷ் பாட்டி, ரோகினி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…

20 hours ago

சூர்யாவை பார்த்த சுந்தரவல்லி, வலியில் துடிக்கும் நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

20 hours ago