moondru mudichu serial promo 10-12-2024
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியை பைக்கில் உட்கார வைத்து காய்கறி கடைக்கு அழைத்துச் செல்கிறார். நந்தினி காய்கறிகளை விலை பேசுவதை சூர்யா பார்த்துக் கொண்டு நிற்க நந்தினி கடைக்காரரிடம் சில காய்கறிகளை சொல்லி 1/2 கிலோ போடுமாறு சொல்ல சூர்யா நோ நோ எல்லாத்துலயும் அஞ்சு கிலோ போடுங்க என்று சொல்லுகிறார். அவ்வளவு எல்லாம் தேவைப்படாது சார் என்று நந்தினி சொல்ல இல்ல நீங்க 5 கிலோ தான் போடணும் என்று கடைக்காரரிடம் சொல்லி விடுகிறார். பிறகு நந்தினி வெண்டைக்காயை உடைத்து பார்த்தும் வாழைத்தண்டை கீரிப்பார்த்தோம் வாங்க எதுக்கு நந்தினி காய்கறி எல்லாம் டேமேஜ் பண்ணிக்கிட்டு இருக்க என்று சூர்யா கேட்கிறார் இப்படி பார்த்தா தான் நல்லா இருக்கான்னு தெரியும் என்று சொல்ல சூர்யா வியந்து பார்க்கிறார்.
பிறகு எல்லாத்துக்கும் பில் போட்டாச்சு என்று சொல்லுகின்றனர். நந்தினி கருவேப்பிலை கொத்தமல்லி கேட்க கடைகாரர்களும் கொடுக்கின்றனர் ஆனால் அதற்கு காசு வாங்காததால் சூர்யா இதையும் நீங்க காசு கொடுத்து தானே வாங்குறீங்க அப்புறம் எதுக்கு இதுக்கு காசு வாங்க மாட்டீங்க கருவேப்பிலை கொத்தமல்லியும் பாவம் தானே என்றெல்லாம் பேசுகிறார் உடனே நந்தினி கருவேப்பிலை மேல காட்டுற அக்கறை கூட என் மேல இல்லாம போயிடுச்சு என்று மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார். சூர்யா இதுக்கு மேல நீங்க யார்கிட்டயும் கருவேப்பிலை கொத்தமல்லி சும்மா கொடுக்கக் கூடாது என்றும் சொல்லுகிறார்.
கடையிலிருந்து வெளியே வந்த நந்தினி அங்கு மைக்கில் பேசிக் கொண்டிருப்பதை கவனிக்கிறார்.அவர்கள் குலுக்கள் முறையில் பெயர் வருபவர்களுக்கு போன் ஃப்ரீயாக தருவதாகவும் 500 ரூபாய்க்கு சிம்கார்டு மட்டும் வாங்க வேண்டும் என்றும் சொல்லுகின்றனர் நந்தினி அங்கு போய் விசாரிக்க அவர்கள் பேரை எழுதத் தொடங்க வேண்டாம் என்று நந்தினி சொல்லுகிறார் உடனே அங்கு சூர்யா வர என்ன ஆச்சு என்று கேட்க ஒன்னும் இல்ல சார் என்று சொல்லிக் கொண்டே இருக்க கல்யாணம் போன் பண்ணி நந்தினி அம்மா கிட்ட கொஞ்சம் போன் கொடுங்க,ஒரு சில பொருள் சொல்ல மறந்துட்டேன் என்று சொல்ல சூர்யா நந்தினி இடம் போனை கொடுக்கிறார். அவர் நெல்லிக்காய் இஞ்சி பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை வாங்கணும் என்று சொல்ல சரி நான் வாங்கிட்டு வந்துடறேன் என்று நந்தினி சொல்ல மீண்டும் அதே கடைக்கு வருகின்றனர் எதிரில் சூர்யாவின் நண்பரும் அவரது மனைவியும் வண்டியில் வர சூர்யாவை காய்கறி பையோட பாக்குறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று ரெண்டு பேரும் கிண்டல் பண்ணுகின்றனர்.
பிறகு சூர்யா நீங்க நினைக்கிற மாதிரி நாங்க ஆசைப்பட்ட எல்லாம் வரல ஏற்கனவே நந்தினிக்கு கிட்நாப் நடந்திருக்கு அதனால ஒரு சேப்டிக்காக வந்தேன் என்று சொல்ல நந்தினி எனக்கு இன்னும் கொஞ்சம் காய்கறி வாங்க வேண்டி இருக்கு அவங்க பேசிகிட்டு இருக்கட்டும் நீங்க வாங்க நம்ம போய் வாங்கிட்டு வந்துரலாம் என்று சொல்ல இருவரும் காய்கறி கடை உள்ளே செல்லுகின்றனர். நந்தினியின் பெயர் மற்றும் அட்ரஸ் பற்றி விசாரித்து சூர்யாவிடம் வாங்கிக் கொள்ளுகின்றனர் அவளோட அதிர்ஷ்டத்துக்கு வந்தா வரட்டுமே நான் வாங்கி கொடுத்தா வாங்க மாட்டா என்று சொல்லி விடுகிறார் உடனே நந்தினி பெயர் குலுக்களில் விழ நந்தினி பெயரை சொன்னவுடன் நான் தான் எதுவுமே கொடுக்கலையே எப்படி வந்தது என்று நந்தினி கேட்கிறார் எல்லா டீடெயிலும் சார் கிட்ட வாங்கணும் என்று அந்த நபர் சொல்ல உங்க வேலை தானா என்று கேட்கிறார் நந்தினி சத்தியமாக நான் எதுவுமே பண்ணல உன்னோட லக்கு கிடைத்தது தான் நான் அட்ரஸ் மட்டும் தான் சொன்னேன் என்று சூர்யா சொல்ல பிறகு நந்தினி வாங்கிக் கொள்கிறார் ஆதார் கார்டு நம்பர் வேணும் மேடம் என்று சொல்ல ஊர்ல தான் இருக்கு என்று நந்தினி சொல்லுகிறார் உடனே சூர்யா நண்பன் மனைவி ஊருக்கு போன் போட்டு கேளு என்று சொல்லுகிறார் உடனே சூர்யாவின் போனில் ஊருக்கு நந்தினி போன் போடுகிறார்.
பிறகு ஆதார் கார்டு நம்பரை சூர்யா வாங்கிய அனுப்பிவிட்டு அங்கிருந்து எல்லோரும் கிளம்புகின்றனர். நந்தினி காய்கறிகளை ஆட்டோவில் ஏற்றிவிட்டு ஆட்டோவில் வர நீங்க போங்க சார் என்று அனுப்பி வைக்கிறார். பிறகு இருவரும் வீட்டுக்கு வர சூர்யா நான் வந்து எடுத்து வைக்கிற நந்தினி என்று சொல்லி ஆட்டோவில் இருந்து இறக்க மாதவியும் சுரேகாவும் மேலே இருந்து பார்த்து கடுப்பாகின்றனர்.ஜோடியா வந்து இறங்குதுங்க கடைசியா இது என்னோட வீடு நானும் என் பொண்டாட்டிய நான் இருப்பேன்னு சொன்னா நம்ப எங்க போறது என்று சுரேகா சொல்ல ரொம்ப யோசிக்காத அப்படி இருக்க விட்ருவோமா என்று மாதவி சொல்லுகிறார். எல்லா பொருளையும் இறக்கி வீட்டுக்குள் வைத்த உடன் டைனிங் டேபிளில் அடுக்கி வைத்துக் கொண்டிருக்க கல்யாணம் என்னமா இவ்வளவு வாங்கி இருக்கீங்க என்று சொல்ல அவர் முதல் முறையாக காய்கறி மார்க்கெட் பார்த்தது இவ்வளவு வாங்கிவிட்டார் என நான் என்ன பண்றது என்று சொல்லிக் கொண்டிருக்க சுரேகா மாதவியின் கத்திக்கொண்டே வீட்டுக்குள் வந்த சுந்தரவல்லி காய்கறிகளை விசிறி அடிக்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினி உடன் சென்று காய்கறி வாங்கியதால் கடுப்பான சுந்தரவல்லி அவன் எவ்வளவு பெரிய கோடீஸ்வரன் தெரியுமா அவன போய் என்று சொல்லி நந்தினியை அறைய கை ஓங்குகிறார்.
சுந்தரவல்லி கோபப்பட்டு வழக்கம் போல ஏதாவது பண்ணா அந்த இடத்தில் நீ இருந்தால் அவ விலகி போய்டுவா என்று சூர்யாவிடம் அருணாச்சலம் சொல்லுகிறார். மறுபக்கம் நந்தினி அம்மாச்சிக்கு போன் போட அம்மாச்சி ஏதாவது ஒரு பிரச்சினையை இழுத்து விட்டு கிட்டே இருக்காங்க என்று சொல்ல எனக்கு அப்படித்தான் தோணுது ஆனா என்று நந்தினி பேசுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்த தெரிந்து கொள்வோம்.
Thalaivar Thambi Thalaimaiyil Teaser | Jiiva | Nithish Sahadev | Kannan Ravi | Deepak Ravi
Happy Birthday Lyric Video | Revolver Rita | Keerthy Suresh | Sean Roldan | JK…
Aan Paavam Pollathathu Official Trailer | Rio Raj, Malavika | Kalai | Siddhu Kumar |…
OTHERS Teaser | Aditya Madhavan, Gouri | Anju Kurian | Abin Hariharan | Ghibran |…
முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…