moondru mudichu serial episode update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி இவ வேலைக்காரி தானே என்று சொல்ல இப்ப எதுக்கு பழைய கதையை பேசிக்கிட்டு இருக்க என்று சொல்ல, இன்னைக்கு இல்ல என்னைக்குமே அவ தேங்காய் பொறுக்கிக்கிட்டு மாட்டு வேலை செஞ்சிட்டு இருந்தவதா என்று சொல்லுகிறார். உடனே சூர்யா கோபப்பட்டு இந்த வீட்டுக்கு நந்தினியை மகாராணி ஆக்கி காற்றேன் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். பிறகு ரூமில் சூர்யா கோபமாக இருக்க நந்தினி வந்தவுடன் நான் உனக்கு போன் பண்ணி வீட்ல யாராவது வந்தாங்களான்னு கேட்டா எதுக்கு எதுவுமே சொல்லல உங்கிட்ட தான் கேட்கிறேன். வேலை மேல கெட்டு உனக்கு போன் பண்றதுக்கு நான் என்ன மென்டலா என்று கோபப்படுகிறார். உங்களுக்கு அம்மாவுக்கும் பிரச்சனை வரும் தான் சொல்லல என்று சொல்ல அப்போ என் பேச்சுக்கு மரியாதையா இல்லையா என்று கேட்க மன்னிச்சிடுங்க சார் என்று சொல்லுகிறார்.
இத்தனை இடத்துல கையெழுத்து போட்டு இருக்க எதுக்கு கையெழுத்து போட்டன்னு தெரியுமா சம்பள விவரம் என்று சொன்னாங்க என்று சொல்ல, மத்த நேரத்துல கையெழுத்து போட்டு இருக்க உனக்கு எதுவுமே தெரியாதா அது எப்படி இருந்ததாவது சொல்லு என்று கோபப்படுகிறார். பச்சை கலர் பேப்பர்ல பத்திரம் பேப்பர் மாதிரி இருந்தது என்று சொல்ல ஓ பாண்டு பேப்பர் என்று சொல்லிவிட்டு கல்யாணத்திடம் வந்த பேப்பர்ல வாங்கினார்கள் என்று கேட்க வெள்ள பேப்பர் என்று சொல்ல ஏதோ ஒன்னு இருக்குது என்று சொல்லிவிட்டு இதுக்கு மேல எந்த விஷயத்தையும் என்கிட்ட மறைக்கக்கூடாது எதுக்கு எடுத்தாலும் தலையை ஆட்டிகிட்டு இருக்காதா போய் படு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு சூர்யா எதுக்காக வாங்கி இருப்பாங்க என்று குழப்பத்தில் இருக்கிறார்.
மறுநாள் காலையில் ரெஜிஸ்டர் பண்ண நந்தினியும் சூர்யாவும் ரெடியாக பிறகு நந்தினி சூர்யாவிடம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு சார் என்று சொல்ல இந்த வாட்டி எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு தானே செய்றோம் அப்புறம் எதுக்கு பயப்படுற வா என்று அழைத்துச் செல்கிறார். யாராவது எதனா கேட்டா சூர்யா சார் கோவிலுக்கு கூட்டிட்டு போறான்னு சொல்லு மீதியை நான் பார்த்துக்கிறேன் என சொல்லி அழைத்து வருகிறார். பிறகு நீ முன்னாடி போய்க்கொண்டே இரு நான் பின்னாடி வரேன் என சொல்லிவிட்டு கருப்பன் போட்டோவையும் நந்தினி குலிக்கு போட்ட சீட்டையும் எடுத்துக்கொண்டு வருகிறார். பிறகு அருணாச்சலத்திடம் வந்து வாங்க டாடி நானும் ஆபீஸ்க்கு போறேன் என்று சொல்ல, நீங்க ரெண்டு பேரும் எங்கேயோ வெளிய போற மாதிரி இருக்கு என்று கேட்க நாங்க கோயிலுக்கு போறோம் போயிட்டு அப்படியே ஆபீஸ் போகலாம் என்று கூப்பிட சுந்தரவல்லி இடம் கேட்க நீங்க அவன் கூடவே போங்க நான் இன்னைக்கு ஆபிஸ்க்கு வரல என்று சொல்ல மூவரும் கிளம்புகின்றனர்.
என்ன டாடி தாய்க்குலம் ரெண்டு நாளா ஆஃபீஸ்க்கு வரல என்று கேட்க தெரியலையே என்று சொல்லுகிறார். நான் நேத்து சொல்லும்போது நம்பள என்று கேட்க அவர் பண்றதுல ஏதோ ஒரு உள்குத்து இருக்கு பயமா இருக்கு என்று சொல்ல சூர்யா பயப்படாதீங்க டாடி என்று சொல்லுகிறார். எனக்கும் பயமா இருக்கு இந்த விஷயத்தை வேற ஒரு நாள் வச்சுக்கலாம் என்று சொல்ல அவங்களால எதுவும் பண்ண முடியாது இப்ப நம்ப முடியாதுன்னு சொன்னா அவங்க தடுத்துக்கிட்டே இருப்பாங்க நீங்க பயந்த உடனே அவளும் பயந்துட்டா எதுவா இருந்தாலும் நான் பாத்துக்குறேன் என்று சொல்லி அழைத்து வர, ரெஜிஸ்டர் ஆபீஸில் விவேக் விஜி என அனைவரும் காத்துக் கொண்டிருக்க இவர்கள் வந்து விடுகின்றனர்.
விஜி இடம் வந்து நந்தினி நலம் விசாரிக்க எனக்கு தான் இதை நினைச்சு பயமா இருக்கு என்று சொல்ல, எதுக்கு இப்போ நீ பயப்படுற உனக்காக தான் சூர்யா அண்ணா இருக்காரே என்று சொல்ல, நல்லா சொல்லுமா என்று சொல்லுகிறார். பிறகு சூர்யா நந்தினியை கையைப் பிடித்து உள்ளே இழுத்துச் செல்கிறார். ப்ராசஸ் ஆரம்பிச்சிடலாமா என்று அருணாச்சலம் கேட்க நான் கேட்கிறேன் என்று தப்பா நினைச்சுக்காதீங்க இந்த கல்யாணம் முறைப்படி நடந்ததுதானே என்று கேட்க அருணாச்சலம் ஏன் சரி இப்படி கேக்குறீங்க என்று கேட்க ரெஜிஸ்டர் நந்தினியிடம் உங்களுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் தானே என்று கேட்க நந்தினி சம்மதம் தான் என சொல்லுகிறார். இந்த விஷயத்துல ஏன் குழப்பம் நடக்குதுன்னு எனக்கு தெரியல என்று சொல்ல அருணாச்சலம் யாரால குழப்பம் என்று கேட்கிறார். இந்தக் குழப்பம் நடக்காது இதில் சிக்கல் இருக்கு என்று ரிஜிஸ்டர் சொல்லி விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…