moondru mudichu and singapenne serial today promo 25-06-26
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.இந்த நிலையில் தற்போது சிங்க பெண்ணே சீரியலும் மூன்று முடிச்சு சீரியலும் இணைந்து மகா சங்கமமாக ஒளிபரப்பாகி வருகிறது.
நேற்றைய எபிசோடில் முதல்ல நாங்க சாப்பிடுகிறோம் அப்புறம் மத்தவங்க சாப்பிடட்டும் என்று பார்வதி சொல்ல உடனே சுந்தரவல்லி கோபப்படுகிறார். உடனே சுந்தரவல்லி எங்க ரூமுக்கு சாப்பாடு அனுப்பிடுங்க என்று சொல்ல பார்வதியும் அப்படியே சொல்லிவிட்டு அனைவரும் அவரது ரூமுக்கு சென்று விடுகின்றனர். நந்தினி சுந்தரவல்லி பேசியதை யோசித்துக் கொண்டிருக்க ஆனந்தி வந்து பேசுகிறார். சுந்தரவல்லி அம்மா பேசுவதை பார்க்கும்போது ரொம்ப வித்தியாசமா இருக்கு என்று சொல்ல, பார்வதி அம்மாவும் இது மாதிரி இருக்க மாட்டாங்க என்று பேசிக்கொண்டிருக்க சூர்யா மற்றும் அன்பு இருவரும் வருகின்றனர். எதுக்கு இப்போ சாப்பிடாம வந்தீங்க என்று கேட்க ஆனந்தி நந்தினி சாப்பிடாம வந்துட்டாங்க அவங்கள கூப்பிட தான் வந்தேன் என்று சொல்ல சூர்யா வா சாப்பாடு போடுறேன்னு சொல்ல இன்னைக்கு நான் சாப்பிட முடியாது இன்னைக்கு ராத்திரி நான் கோவில் மண்டபத்தில் வேண்டிக்கொண்டு சிலை செய்யப் போறேன் அதுக்காக தான் விரதம் இருக்கேன் என்று சொல்லுகிறார். உடனே ஆனந்தியை இந்த கபடி போட்டி எல்லாம் நல்லபடியாக குடும்பம் இருக்கவும் விரதம் இருக்கப் போகிறேன் என்று சொல்லுகிறார்.
ஊர் பெரியவர்கள் நந்தினியிடம் வந்து சிலை செய்ய தீர்த்தம் கொடுக்க, அதை நந்தினி வாங்க போகும் நேரம் பார்த்து பார்வதி தடுத்து நிறுத்துகிறார். இத்தனை வருஷமா எப்படி நடந்ததோ அப்படி நடக்கட்டும் என்று சொல்ல வேண்டுமா அப்போ மித்ராவை செல செய்ய சொல்லுங்க என்று சுந்தரவல்லி சொல்ல நான் ஏன் சொல்லணும் நான் என்ன சிலை குடும்பத்துல இருந்தா மருமகள கூட்டிட்டு வந்திருக்கேன் என்று சொல்ல, உடனே சூர்யா அவங்களையெல்லாம் பேசுங்க இங்க எதுவும் பேசாதீங்க என்று சொல்ல பார்வதி வேற யாரையாவது செல செய்ய சொல்லுங்க இவ செல செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்ல சூர்யா இவ விரதம் இருந்து ரெடியா இருக்கா என்று சொல்கிறார். வேற யாராவது வந்து தான் செய்யணும் என்று பார்வதி உறுதியாக சொல்ல சூர்யா நந்தினி தான் செய்வா என்று வாக்குவாதம் செய்ய அன்பு சூர்யாவை சமாதானப்படுத்தி அழைத்து வருகிறார். ஆனாலும் சூர்யா அன்பு பேச்சை கேட்காமல் மீறி வந்து நந்தினி தான் செய்வா என்று சொல்லி, பூசாரியுடன் தீர்த்தத்தை கொடுக்கச் சொல்கிறார். நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் கொடுக்க சொன்ன என்ன அர்த்தம் என்று சொல்ல, உடனே ஊர் பெரியவர்கள் மண்ணு எடுத்து நந்தினி கையில கொடுத்தாச்சு தீர்த்தம் அவங்க கிட்ட தான் கொடுக்கணும் இல்லன்னா தெய்வ குத்தம் ஆகிடும் என்று சொல்லி சொன்னவுடன் மகேஷும் நம்மளால எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று சொல்ல நந்தினியும் தீர்த்தத்தை வாங்கிக் கொள்ள சூர்யா சிலை செய்ய அழைத்துச் செல்கிறார். இவர்களைப் பார்த்து ராஜாங்கம் குடும்பத்தினர் சந்தோஷப்படுகின்றனர்.
பிறகு சூர்யாவும் நந்தினியும் சிலை செய்யும் இடத்திற்கு வந்து வேலையை ஆரம்பிக்கின்றனர். இருவரும் சேர்ந்து மண்ணை சேர்ந்து பிசைந்து கொண்டு பாடியும் பேசியும் செய்கின்றன. இந்த சிலையை நீ ஒரு நைட்டுக்குள் செஞ்சுட்டு வா ஆனா ஒரு சிலர் ரொம்ப நாளா செஞ்சுகிட்டு இருக்கேன்னு சொல்றாங்களே அது ஏன் என்று கேட்க ஒரு குழந்தையை குறைப்பிறசவத்தில் பெற்றெடுத்தால் எப்படி பத்து மாசம் வரை இருந்தால்தானே நல்லா இருக்கும் அது மாதிரி தான் என்று சொல்லுகிறார். பிறகு இருவரும் வேலையை செய்கின்றனர். மறுபக்கம் ரூமில் மாதவி நகைகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, பரமு வந்து பேச்சு கொடுக்கிறார். உடனே சூர்யா தம்பி கல்யாணத்தைப் பற்றி கேள்விப்பட்டேன் நந்தினி அம்மா மீது உங்க அம்மா கோவமா இருக்காங்கன்னு கேள்விப்பட்டேன் என்று சொல்லுகிறார். அந்த நந்தினி சீக்கிரமாகவே என் அம்மா வெளியே அனுப்பிவிடுவார்கள் என்று சொல்ல, சுந்தரவல்லி அம்மா முடிவுதான் எப்பவும் சரியா இருக்கும் என்று சொல்லுகிறார். ஆனா இப்போ பார்வதி அம்மா தான் ஜெயிக்கப் போறாங்க என்று தோணுது என்று சொல்லுகிறார்.
ஆகாத சுந்தரவல்லி அம்மா மருமகளை சிலை செய்ய வச்சா ஏத்துக்கிட்ட மாதிரி ஆகிடும். அடுத்த வருஷம் திருவிழாவுக்கு உங்க அம்மாவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவளுக்கும் கொடுக்க ஆரம்பிச்சிடுவாங்க என்று சொல்ல, இதுக்கு என்னதான் பண்றது என்று மாதவி கேட்க இந்த இடத்தில் நான் இருந்தேன் என்றால் நேரா அந்த சிலை செய்ய இடத்தில போய் அடிச்சு ஒடச்சுருப்பேன் என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் ரூமில் ஆனந்தி மற்றும் அன்பு இருவரும் குடும்பத்தில் ஏற்பட்ட விரிசல் குறித்து மனம் வருத்தப்பட்டு பேசுகிறார். ரெண்டு குடும்பமும் சேர்ந்து தான் என் தாலி பிரிச்சி கோர்க்கிற பங்க்ஷன் நடக்கும் என்று சொல்லுகிறார்.ஆனந்தி வாந்தி எடுத்துக் கொண்டு இருக்க நான் போயிட்டு வைத்தியர் கிட்ட மருந்து வாங்கிட்டு வரேன் நீ படு என்று சொல்லி விட்டு சென்று விடுகிறார். சூர்யாவும் நந்தினியும் சிலையை செய்து கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சூர்யா இதே மாதிரி ரெண்டு சிலையை நம்ம வீட்டு முன்னாடி வைக்கலாம் என்று சொல்ல அதெல்லாம் வேண்டாம் அமைதியா இருங்க என்று சொல்லுகிறார்.
அன்பு வைத்தியரை சந்தித்து மருந்து வாங்க இந்த மருந்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறாரோ அவ்வளவு சீக்கிரம் சரியாகிவிடும் என்று சொல்லி அன்புடன் கொடுத்துவிட அவர் மருந்து வாங்கிக் கொண்டு வரும்போது அவரது பின்னால் இரண்டு பேர் வந்து நிற்கின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி செய்த சிலை சுக்குநூறாக உடைந்து இருக்க ஊர் பெரியவர்கள் வந்து சொன்னவுடன் பார்வதி உங்க வீட்டு வேலைக்கார மருமகள செல செய்ய சொன்னது தான் தப்பு என்று சொல்ல சூர்யா கோபப்படுகிறார். உடனே அந்த சிலையை நாங்க தான் உடைச்சதா சொல்றாங்க அதுக்கு என்ன ஆதாரம் இருக்கு என்று மகேஷ் கேட்க சுந்தரவல்லி வந்து டீ சர்ட்டை காட்டுகிறார். அது என்னோடது என்று அன்பு சொல்ல நந்தினி இதை யாரோ உடைத்தது என்று நான் கண்டுபிடிக்கிறேன் என நினைக்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…
'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…