Mithran Jawahar to direct Shanmuga Pandian
சண்முக பாண்டியனை இயக்குகிறார் மித்ரன் ஜவஹர்
விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் மதுரை வீரன், படைத் தலைவன் ஆகிய படங்களில் நடித்தார்.
இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள ‘கொம்பு சீவி’ படம் கடந்த 19-ந்தேதி வெளியானது. சரத்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதையடுத்து சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்குகிறார். இவர் ‘யாரடி நீ மோகினி’, ‘உத்தம புத்திரன்’, ‘திருச்சிற்றம்பலம்’ ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது மாதவன் நடிக்கும் ‘அதிர்ஷ்டசாலி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
மித்ரன் ஆர். ஜவஹர், சண்முக பாண்டியன் இணையும் படத்தை, ‘கொம்புசீவி’ படத்தைத் தயாரித்த ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…
மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…