மெரி கிறிஸ்துமஸ் திரை விமர்சனம்

கதைக்களம்நீண்ட நாட்களுக்கு பிறகு துபாயில் இருந்து மும்பைக்கு விஜய் சேதுபதி வருகிறார். அன்று இரவு வெளியே ஓட்டல் ஒன்றுக்கு செல்கிறார். அப்போது ஒருவர் விஜய் சேதுபதியிடம் நான் அவசர வேலையாக வெளியே செல்கிறேன் அதை கத்ரீனாவிடம் சொல்லிவிடுங்கள் என்று கூறுகிறார். விஜய் சேதுபதியும் அவரிடம் இந்த விஷயத்தை சொல்கிறார்.முதல் சந்திப்பிலேயே விஜய்சேதுபதிக்கு கத்ரீனாவை பிடித்துபோய் விடுகிறது. இதையடுத்து விஜய் சேதுபதி அவரை பின் தொடர்கிறார். இருவரும் அந்த ஒரு இரவில் நண்பர்களாகி நெருக்கமாக பழகுகின்றனர். அப்போது கத்ரீனா தன் குழந்தையை தூங்க வைத்துவிட்டு விஜய்சேதுபதியுடன் வெளியே செல்கிறார். இருவரும் சந்தோஷமாக அன்றிரவு கழித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்க்கும் பொழுது கத்ரீனாவின் கணவர் இறந்த நிலையில் கிடக்கிறார்.

இறுதியில் கத்ரீனாவின் கணவரை கொன்றது யார்? இந்த கொலை எதற்காக நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்விஜய் சேதுபதி எப்போதும் போல் தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிக்க வைத்துள்ளார். கதாநாயகியான கத்ரீனா கைஃப் தாயாகவும் காதலியாகவும் கவர்கிறார். திரையில் அழகாக தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார். கத்ரீனாவின் வாய் அசைவிற்கு ஏற்ற தமிழ் டப்பிங் செய்து ஒரு முழுமையான தமிழ் படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்தியுள்ளனர்.போலீஸ் அதிகாரிகளாக வரும் ராதிகா சரத்குமார், சண்முக ராஜன் இருவரும் படத்தை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.இயக்கம்’மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தை கிரைம் த்ரில்லர் பாணியில் இயக்கியுள்ளார் இயக்குனர் ஸ்ரீராம் ராகவன்.

யார் கொலை செய்தார்கள் என யூகிக்க முடியாதவாறு காட்சிகளை இயக்கியுள்ளார். முதல் பாதி சற்று மொதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதியில் மிரட்டியுள்ளார். கிளைமேக்ஸ் காட்சியை மிகவும் அழகாக காட்சிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார்.இசைகிரைம் த்ரில்லர் படத்திற்கு ஏற்றார் போல் இசையமைத்துள்ளார் ப்ரீதம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்துள்ளார்.ஒளிப்பதிவுமது நீலகண்டன் ஒளிப்பதிவு கதையுடன் நம்மையும் பயணிக்க வைக்கிறது.படத்தொகுப்புபூஜா லதா சுர்தி படத்தொகுப்பில் அசத்தியுள்ளார்.காஸ்டியூம்அனிதா ஷ்ராஃப் அடாஜானியா மற்றும் சபீனா ஹல்தார் கதாபாத்திரத்திற்கு ஏற்ற காஸ்டியூமை டிசைன் செய்துள்ளனர்.புரொடக்‌ஷன்டிப்ஸ் பிலிம்ஸ் லிட் மற்றும் மேட்ச் பாக்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

merry-christmas movie review
jothika lakshu

Recent Posts

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

50 minutes ago

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

23 hours ago

உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…

23 hours ago

ரன்வீர் சிங் நடிப்பில் ‘துரந்தர்: பழிவாங்கல்’ டிரெய்லர் வெளியீடு!

பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…

23 hours ago

Mayilaa Official Teaser

Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq

3 days ago

Kolaiseval – Official Trailer

Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8

3 days ago