meendum film crew arrest
சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணன் சுப்பையா இயக்கியுள்ள “மீண்டும்” படக்குழுவினர் இலங்கை கடற்படை அட்டூழியத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சிட்டிசன். இந்த படத்தை சரவணன் சுப்பையா என்பவர் இயக்கியிருந்தார்.
தற்போது இவர் பல வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் என்ற படத்தை இயக்கியுள்ளார். அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் இருந்து வருகிறது. இந்த படத்தில் கதிரவன் என்பவர் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக அனகா என்பவர் நடித்துள்ளார். இவர் சந்தானத்தின் நடிப்பில் வெளியான டிக்கிலோனா படத்தில் நடித்திருந்தார். பேர் வச்சாலும் என்ற பாடலில் இவருடைய நடனம் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.
இந்த படத்தின் படக்குழுவினர் கடல் பகுதியில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையின் அட்டூழியத்திற்கு ஆளாகி உள்ளனர்.
படத்தின் நாயகன் கதிரவன், இயக்குனர் சரவண சுப்பையா உட்பட ஒட்டுமொத்த படக்குழுவும் இலங்கை கடற்படையால் அரஸ்ட் செய்யப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு தடைகளை தாண்டி உருவாக்கியுள்ள மீண்டும் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. பொதுவாகவே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து அட்டூழியம் செய்து வரும் நிலையில் மீண்டும் படக்குழுவினரும் அவர்களது அட்டூழியத்திற்கு ஆளாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
சாமை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…