பச்சை ஏலக்காய் உங்களுடைய சுவாச பிரச்சனைகளை சரி செய்கிறது. அதாவது மூக்கடைப்பு, மூச்சி திணறல், இருமல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.
பசி எடுக்காமல் இருப்பவர்கள், உணவு சரியாக ஜீரணம் ஆகாதவர்கள் தினமும் ஏலக்காயை வாயில் போட்டு மென்று வர உடலின் மெட்டபாலிஸம் அதிகரிக்கும். ஜீரண உறுப்பை வலுவடைய செய்து, ஜீரண நீரை சுரக்க செய்யும். இதன் மூலம் நன்றாக பசி எடுக்கும்.
அதிக மார்பு சளி காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் அதிக இருமலினால் அவதிப்படுபவர்கள் ஏலக்காயை தினமும் மென்று வர நெஞ்சில் உள்ள சளி கரைந்து வெளியேறும்.
ஜீரண உறுப்புகளில் ஏதேனும் கோளாறு இருந்தால் வாயில் துர்நாற்றம் ஏற்படும். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை சாப்பிட்டு வர துர்நாற்றத்தை போக்கி, நல்ல மணத்தை கொடுக்கும்.
வாய்ப்புண், பற்சொத்தை, பல் வலி, ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு ஏலக்காயை உமிழ்நீருடன் சேர்த்து மென்று வர வேண்டும்.
ஏலக்காய், சுக்கு, கிராம்பு, சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் மூன்று வேளை சிறிதளவு எடுத்து 2 கிராம் தேனில் கலந்து சாப்பிட வயிற்று வலி குணமாகும்.
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…