master-mahendran-movie-update viral
“ஸ்ரீகாந்த் நடித்த ‘எக்கோ’ படத்தை இயக்கிய நவின் கணேஷ் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜீவிதா கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும், இந்த படத்தில் சார்லி, கும்கி அஸ்வின், கலக்கப்போவது யாரு புகழ், சரத் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-க்கு இசை ஏற்பாட்டாளராக இருந்த (arranger) அபிஷேக் ஏ.ஆர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரவிவர்மா ஒளிப்பதிவு செய்கிறார். ‘சிவகுமாரின் சபதம்’ மற்றும் ‘ரவுடி பேபி’ படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தீபக் இதில் எடிட்டராக பணிபுரிகிறார்.
இப்படம், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறுகிய காலத்திலேயே படமாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.இன்னும் பெயரிடப்படாத இந்தத் திரைப்படம் சர்வைவல் த்ரில்லராக உருவாக உள்ளது. சனா ஸ்டுடியோஸ் வழங்க முத்து, சந்தோஷ் சிவன் மற்றும் ரவி இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர்-அரசியல்வாதி சீமான், சரண், அருண்ராஜா காமராஜ் மற்றும் கல்யாண் உள்ளிட்ட கோலிவுட்டின் மிகவும் பிரபலமான திரைப்பட இயக்குனர்கள் நான்கு பேர் தொடங்கி வைத்துள்ளனர். பிரமாண்டமாக பூஜையோடு தொடங்கிய இந்த விழாவில் படத்தின் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
All Pass Trailer | Dushy, Janany Kunaseelan, Jayaprakash | James Vasanthan | Mydeen
Aasai Varame Video Song | Anbil Avan | Ashok Selvan, Preity Mukhundhan | Govind Vasantha…
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…