நாயகன் கவின் தனியார் துப்பறியும் நிபுணர் (பிரைவேட் டிடெக்டிவ்) என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். அதேபோல் நாயகி ஆண்ட்ரியா பெண்கள் பாதுகாப்பு, சமூக ஆர்வலர் என்ற பெயரில் தவறான செயல்களை செய்து வருகிறார். இந்நிலையில் அரசியல்வாதியான பவன், தேர்தலுக்காக தொகுதி மக்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் பணத்தை ஆண்ட்ரியாவிடம் கொடுக்கிறார். அந்த பணத்தை ஆண்ட்ரியா தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைக்கிறார். அந்த பணத்தை மாஸ்க் அணிந்த சிலர் கொள்ளை அடித்து விடுகிறார்கள். அந்த பணத்தை தேடும் பணியை ஆண்ட்ரியா கவினிடம் கொடுக்கிறார். இறுதியில் கவின் அந்த பணத்தை கண்டுபிடித்தாரா? பணத்தை கொள்ளை அடித்தவர்கள் யார்? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கவின், எதார்த்தமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பில் மற்றொரு நடிகரின் சாயல் தெரிகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியா, பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார். இவரது வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு பெரிய பலம். மற்றொரு நடிகை ஆக வரும் ருஹானி சர்மா அழகாக வந்து சென்று இருக்கிறார். அரசியல்வாதியாக நடித்திருக்கும் பவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

ஒரு இடத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீண்டும் அதே இடத்தில் கொடுக்க வைப்பதை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் விகர்ணன் அசோக். டார்க் காமெடி ஜானரில் படத்தை இயக்கியிருக்கிறார். பெரியதாக டார்க் காமெடி ஒர்க் அவுட் ஆகவில்லை. நெல்சன் இன் பின்னணி குரல் படத்திற்கு பலவீனம்.

ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

ஜி.வி. பிரகாஷ் பின்னணி இசையும் ஆர்.டி ராஜசேகரின் ஒளிப்பதிவும் கதையோடு பயணித்திருக்கிறது.

mask movie review
jothika lakshu

Recent Posts

Nellai Boys Trailer

Nellai Boys Trailer | White Screen Production | V.Raja | Arivazhagan , Hema Rajkumar |…

1 minute ago

Dashamakan – Title UNLOCKED

Dashamakan - Title UNLOCKED , Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael   https://www.youtube.com/watch?v=0fs_1ampVWw…

4 minutes ago

Anjaan – Re-Release Trailer

Anjaan - Re-Release Trailer , Suriya, Samantha , Yuvan Shankar Raja , N. Lingusamy  …

8 minutes ago

Akhanda 2 Thaandavam Trailer (TAMIL)

Akhanda 2 Thaandavam Trailer (TAMIL) | Nandamuri Balakrishna | Boyapati Sreenu | ThamanS | DEC…

11 minutes ago

Nirvaagam Porupalla – Official Trailer

  Nirvaagam Porupalla - Official Trailer , Srikanth Deva , S.Kaarthieswaran ,Star Music https://youtu.be/2TsX4EHWOns?si=l71gc40a3F7KoNzR

16 minutes ago

Pretty Baby Video Song (Tamil) , Biker , Sharwanand, Malvika Nair , Ghibran , Abhilash Reddy

Pretty Baby Video Song (Tamil) , Biker , Sharwanand, Malvika Nair , Ghibran , Abhilash…

18 minutes ago