Latest Tamil cinema News
ஆன்மீகம்

எளிதான விரைவில் திருமணம் கைகூடும் பரிகாரம். தெரிந்து கொள்வோமா?

▪ திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், நித்திய கல்யாண பெருமாள், சுமங்கலி பூஜை என்று அனைத்து பரிகாரங்களையும் செய்து முடித்த பின்னரும் திருமணத்தடை நீங்க வில்லையா? இதோ இந்த பரிகாரத்தை செய்த உடன் திருமணம் கைகூடும் என்பது நிதர்சனமான உண்மை.

▪ திருமணத்திற்காக காத்திருக்கும் ஆண், பெண் யாராக இருந்தாலும் வியாழக்கிழமை அல்லது காலையில் எழுந்து தலைக்கு குளித்து மனம் உருகி உங்களது இஷ்ட தெய்வத்தை வணங்கிவிட்டு, ஊறவைத்த பச்சரிசி 200 கிராம், ஊற வைத்த பாசிப்பருப்பு 300 கிராம், நாட்டுச் சர்க்கரை 200 கிராம், அகத்திக்கீரை உருவியது ஒரு கட்டு இவைகளை ஒன்றாக கலக்கி கன்றுடன்
உள்ள பசு மாட்டுக்கு உங்கள் கைகளால் கொடுத்து சாப்பிடச் செய்யுங்கள்.

▪ நீங்கள் கொடுத்தவற்றை பசுமாடு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே பசுவின் கழுத்தை சொரிந்து, முதுகை தடவி, வாளை உருவி விட வேண்டும்.

▪ எல்லாம் தீர்ந்தபின் பாத்திரத்தில் இருக்கும் நீரை உங்களது உள்ளங்கையில் விட்டு குடிக்கவும். நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போது உங்களது தலையில் தலைக்கு குளித்த ஈரம் இருக்கக் கூடாது. பெண்கள் தலையில் இருந்து நீர் சொட்ட கூடாது. இந்த பரிகார பூஜை செய்யும் போது தலையில் பூச்சூட கூடாது.

▪ அதன் பின்னர் பசுவை வலம் வந்து கண்ணில் ஒற்றிக் கொள்ளவும். ஒரே வியாழக்கிழமை போதும் இந்த பரிகாரத்தை செய்தால் திருமணம் விரைவில் கை கூடி வரும்.

Related posts

நவதானியங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ளலாமா?

user

ஆண் வாரிசு இல்லாமல் போவதற்கும் வாஸ்து காரணமாக இருக்குமா? தெரிந்து கொள்வோமா?

user

சங்கடஹர சதுர்த்தி நாளில் பிள்ளையாருக்கு, எந்த இலையில் அர்ச்சனை செய்தால் என்ன பலன்?

user

Leave a Comment