திரிஷா பற்றி நடிகர் மன்சூர்அலிகான் பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையாகி திரையுலகில் கடந்த சில தினங்களாக பரபரப்பாகி வந்தது. மன்சூர்அலிகான் மீது போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் அவர் நேற்று நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் இன்று திரிஷா விடம் மன்னிப்பு கேட்டுள் ளார். இது தொடர்பாக நடிகர் மன்சூர்அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
ஆம்!! அடக்க நினைத் தால் அடங்கமறு!! இப்ப சொல்கிறேன். என்னை மன்னித்துவிடு!
ஒரு வாரமாக நடந்த கத்தியின்றி ரத்தமின்றி போரில் நான் வெற்றி? பெற்றுவிட்டேன்!
எனக்காக வாதிட்ட தலைவர்கள், நடிகர்கள், ஊடகவியலாளர்கள் யாவோர்க்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். எதிர்த்து என்னை கண்டித்த மானுடர்களுக்கும் பணிவான வணக்கங்கள். கலிங்கத்துப் போர் முடிந் தது. லட்சக்கணக்காணோர் மாண்டு கிடக்க, சாம்ராட் அசோகனின் இதயத்தில் ரத்தம் வடிந்து, அகிம்சை யை தழுவினான். ஆம். மனசாட்சியே இறைவன்.
காவல் அதிகாரி அம்மை யார் திரிஷாவின் மனது வருத்தப்பட்டிருக்கிறது எனச் சொல்ல, ‘ஐயஹோ எனக்கும் வருத்தம் தான்’ என வந்துவிட்டேன். யதார்த்த நிலை!
சட்டம் வென்று வெளியே வந்தால், மீண்டும் கோரப்பசி யுடன் கோழிக் குஞ்சை கவ்வ வரும் வல்லூறுகளாக ஊடகம் துரத்துகிறது!! ஜனநாயகத்தின் நான்காவது தூண்,. மணிப்பூர், ஹாத்ரஸ் பெண் பல்கீஸ் பானு, நீட் அனிதாக்கள், வாச்சாத்தி வன் கொடுமைகள் நித்தம் மதக்கலவர வன்கொடுமை களை சாட்டையடியாக கேள்வி கேட்க மறுக்கிறது.
எனது இளமைக்காலம் யாவும் திரைத்துறையில் இழந்து விட்டேன். திமிங்கல மாக உலா வந்தாலும், பாத்திரங்கள் சிறு மீன்க ளாகத்தான் அமைந்தது. இனி வரும் நாட்களாவது ஆக்கபூர்வமாக உழைக்க இறைவா சக்தியை கொடு!
என் மக்கள், மலடான பளபளக்கும் ரசாயன உர மேற்றப்பட்ட காய்கறிகளை உண்டு, விவசாயிகள் வீணர் களாக ஆக்கப்பட்டு, விளை நிலங்கள் கரிக்கட்டைகளாக மாறும். கனிமங்கள், மலை, ஆறு காணாடிக்கப்பட்டு, வேலையற்றவர்களாய் நிற்கிறோம். குழந்தைகள் கசடறகற்க, சூரியன் மறையும் முன் குடும்பம் காக்க மாங்குமாங்கு என்று உழைப்போம். மாதத்தில் 10 நாள் கடுமையாக உழைத் தால்தான் கரண்ட் பில் கட்ட முடியும். மீதி நாள் ஜி.எஸ்.டி., எஸ்.டி., டோல்கேட், பெட்ரோல் கேஸ், ஸ்கூல் பீஸ், மளிகை வாங்க என, ஒன்றும் மிஞ்சமாட்டேங்கிறது. இன் னும் கடுமையாக ஏதாவது சம்பளத்திற்கு வேலை செய்தால்தான் நாம் அதா னிக்கு கப்பம் கட்ட முடியும். அதானிந்தியா மார்பில் தவமும் குழந்தையுடன், இளமங்கை இளவரசியை கட்டிலில் விட்டுச்செல்ல நாம் புத்தனில்லை. ஆம்!
பெண்ணிலிருந்து தான் மனிதன் பிறக்கிறான். தாயின் காலடியில் சொர்க் கம். தாய்க்கு சேவை செய் என்றார் நபிகளார். பெண்மை புனிதம். கார ணத்தோடு தான் ஆண்மை யை அழியுங்கள் என்றார் பெரியார். எனை ஈன்ற சபூரா மாள் பாம்புக்கடி, பூரான், தேள் கடித்து வருவோர்க்கு 8′ வேளை தொழுது, ஓதி, ஊதி, கிராம்பு நீர் கொடுத்து, நற்கிருபைகள் செய்தவர். சினிமா பார்க்கவிடாது 10-ம் வகுப்புவரை வளர்த்த வர். இனிமேலும் இம்மண் ணின் மீட்சிக்கு, சகோ தரத்துவத்துடன் உழைக்க அருள் புரிவாய் இறைவா!! இறையச்சமே நம் குழந்தை களின் நல்வாழ்க்கையை அருளும்!
எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!
இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்கியத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.
FRIDAY - Trailer , Dheena , Anish Masilamani , Mime Gopi , Hari Venkatesh ,…
Galatta Family Trailer , Vimal , Anicka Vickram , Thambi Ramaiya , Mottai Rajendran ,A.Sarkunam…
Nellai Boys Trailer | White Screen Production | V.Raja | Arivazhagan , Hema Rajkumar |…
Dashamakan - Title UNLOCKED , Harish Kalyan , Vineeth Varaprasad , Britto Michael https://www.youtube.com/watch?v=0fs_1ampVWw…
Anjaan - Re-Release Trailer , Suriya, Samantha , Yuvan Shankar Raja , N. Lingusamy …
Akhanda 2 Thaandavam Trailer (TAMIL) | Nandamuri Balakrishna | Boyapati Sreenu | ThamanS | DEC…