Malaysian government conditions: No political talk at “Jana Nayagan” music launch
“ஜன நாயகன்” இசை வெளியீட்டு விழாவில் அரசியல் பேசக்கூடாது – மலேசிய அரசு நிபந்தனை
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், இப்படத்துக்கான புரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் வரும் 27-ந்தேதி மலேசியாவில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக, மலேசியாவில் அந்நாட்டின் அரசு தரப்பில் இருந்து படக்குழுவிற்கு முக்கியமான நிபந்தனை ஒன்று போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வகையில், விழாவில் அரசியல் கருத்துக்கள் எதுவும் பேசக்கூடாது என மலேசியா அரசாங்கம் நிபந்தனை விதித்து இருப்பதாக கூறப்படுகிறது.
‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை துவங்கியுள்ள விஜய், வரவிருக்கும் 2025 -ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில், அவர் அரசியல் தொடர்பாக பேசுவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச்சில் அரசியல் சம்பந்தமாக பேசக்கூடாது என மலேசியா அரசாங்கம் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிப்பதால், விஜய்யின் வாய்ஸ் எவ்வாறு எதிரொலிக்கும் எனவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இசை வெளியீட்டு விழாவில் படம் தொடர்பாக மட்டுமே பேசப்படும் என கூறப்படுகிறது. பிரம்மாண்ட இசை கச்சேரியுடன் ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்ச் கோலாகலமாக நடைபெறவுள்ளது. விழாவில், குறிப்பாக இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார், அட்லீ ஆகிய மூவரும் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் ‘ஜனநாயகன்’ படத்தில் பத்திரிக்கையாளர்களாக கேமியோ ரோலில் நடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், தவெக பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்தும் இப்படத்தில் போராட்டக்காரராக சிறிய காட்சியில் வருகிறார்.
இதற்கிடையில், அனிருத் இசையில் ‘ஜனநாயகன்’ பட இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாக உள்ளது. மறுநாள் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் களத்தில் இறங்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமாவில் மாநகரம் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ் அதனைத் தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…
ஜீவா நடித்த 'தலைவர் தம்பி தலைமையில் 10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல் வேட்டை ஜீவா நடிப்பில் வெளியான…
1000 ஆண்டுகளுக்கு முந்தைய (கி.பி. 10-ஆம் நூற்றாண்டு) நிகழ்ந்த வரலாற்றுக் கதை 'சுயம்பு' வெளியீடு வரலாற்றுக் கதையோ ஆன்மீகக் கதையோ…
தலைவர் 173 படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மூன்று நாயகிகள்? ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் 'தலைவர்-173' படத்தை 'டான்' பட…