பிரபல வில்லன் நடிகர் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் ரிச பாவா. இவர் கடந்த 1990-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கிய ‘டாக்டர் பசுபதி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். பின்னர் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானார். ‘இன் ஹரிகர் நகர்’ படம் அவருக்கு மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றுக் கொடுத்தது.

150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், பின்னர் டி.வி. சீரியல்களில் நடித்தார். தமிழில் காசு, தென்றல் வரும் தெரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருது பெற்றார்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பபட்டு சிகிச்சை பெற்றார்.

நேற்று மாலை திடீரென இவரது உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 55. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மரணம் அடைந்த ரிச பாவாவுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

Suresh

Recent Posts

Once More Official Trailer

Once More Official Trailer | Arjun Das | Aditi | Sona | Hesham Abdul Wahab…

17 hours ago

Mahaveer Karna Official Tamil Teaser

Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…

2 days ago

ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்

திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…

2 days ago

மமிதா பைஜு – சங்கீத் பிரதாப் இணையும் புதிய படம் ‘ஹலோ டியர்’!

‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…

2 days ago

“திரிஷாவை குறிவைத்து விமர்சிப்பது தவறு” – நடிகை சஞ்சனா கல்ராணி கண்டனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…

2 days ago

“எனது வாழ்க்கையின் மிகப்பெரிய தூணே அவர்தான்” – மனம் திறந்த ஜேசன் சஞ்சய்!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…

2 days ago