Malayalam actress plays Vijay's younger sister
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இயக்குனர் செல்வராகவன் வில்லனாக நடித்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரங்களில் யோகி பாபு, மற்றும் விடிவி கணேஷ் நடிக்கின்றனர்.
இதுதவிர மலையாள நடிகை அபர்ணா தாஸும் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரது கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பீஸ்ட் படத்தில் அவர், நடிகர் விஜய்க்கு தங்கையாக நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பிரபல செய்தி வாசிப்பாளரான சுஜாதா பாபு இப்படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்துள்ளாராம்.
அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காதல், நகைச்சுவை, அதிரடி சண்டைக் காட்சிகளுடன் இப்படம் தயாராகிறது.
ரோபோ சங்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம் ரசிகர்களின்…
ரோபோ சங்கரின் உடல் பாதிப்பதற்கு காரணத்தை பிரபல நடிகர் கூறியுள்ளார். சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தன் நகைச்சுவை நடிக்கும் மூலம்…
விஜயாவை மறைமுகமாக மீனா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.…
நடிகர் ரோபோ சங்கர் மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பயணத்தை தொடங்கியவர் ரோபோ…
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…