Categories: Movie Reviews

மத கஜ ராஜா திரை விமர்சனம்

நடிகர் விஷால் கேபிள் டி கம்பெனியை வைத்து நடத்தி வருகிறார். இவர் நடிகை அஞ்சலியை காதலித்து வருகிறார். இவரின் பள்ளி நண்பர்களான சந்தானம், நித்தின் சத்யா மற்றும் சடகோபன் ரமேஷ் ஒரு ஒரு வேலைப்பார்த்து வருகின்றனர். இவர்களின் பள்ளி ஆசிரியரின் மகளுக்கு திருமணத்திற்காக அனைவரும் ஒன்றாக குடும்பத்துடன் கலந்துக் கொள்கின்றனர். இப்படி அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது சந்தானம் மற்றும் அவரது மனைவிக்கு பிரச்சனை இருப்பதி விஷாலுக்கு தெரிந்து அதனை சரி செய்து வைக்கிறார்.

அதேப்போல் சடகோபன் ரமேஷ் மற்றும் நித்தினிற்கு சோனு சூட் மூலம் பிரச்சனை ஏற்பட்டுள்ளதை தெரிந்துக் கொண்டு அதனை சரி செய்வதற்காக இவர்களுடன் சென்னை வருகிறார். சென்னையில் மிகப்பெரிய அந்தஸ்துடன் இருப்பவர் சோனு சூட். இதற்கு அடுத்து என்ன ஆனது? நண்பர்களுக்கு சோனு சூட் மூலம் என்ன பிரச்சனை? அதனை எப்படி விஷால் சரி செய்தார் என்பதே படத்தின் மீதிக்கதை.

விஷால் மிகவும் துறுதுறுவென மிக கட்சிதமாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் மிகவும் கடினப்பட்டு நடித்துள்ளார். கிளைமாக்ஸ் காட்சிகளில் வரும் 6 பேக் வைத்து சண்டை போடும் காட்சிகள் பார்வையாளர்களை மிரள வைக்கிறது. இதன் மூலம் அவர் இப்படித்திற்காக செய்த உழைப்பை நம்மால் பார்க்க முடிகிறது. படத்தின் அடுத்த கதாநாயகனாக வலம் வருபவர் சந்தானம். அவரின் டைமிங் கவுண்டர் என திரையரங்கை சிரிப்பு அலையில் நிரப்புகிறார்.அஞ்சலி மற்றும் வரலட்சுமி அவர்களுக்கான கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர். கிளாமர் காட்சியில் பார்வையாளர்களை கட்டிப்போடுகின்றனர். மணிவண்ணன், மனோபாலா, ஆர்யா, நித்தின், சடகோபன் ரமேஷ், என அனைவரும் அவரது பங்களிப்பை சிறப்பாக கொடுத்துள்ளனர்.

சுந்தர் சி க்கு என இருக்கும் தனி ஸ்டைலில் ஒரு குடும்ப பொழுது போக்கு திரைப்படமாக மத கஜ ராஜா திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் உருவாக்கி 12 வருடங்கள் ஆன நிலையிலும் நகைச்சுவை காட்சிகள் , மற்றும் காட்சியமைப்பு புதிதாகவும் மக்களிடம் வொர்க் அவுட் ஆகும் வகையில் எடுத்தது படத்தின் பலம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியையொட்டி வரும் நகைச்சுவை காட்சி பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. சந்தானம் வரும் காட்சிகள் அனைத்துமே சிறப்பாக இயக்கியுள்ளார். சில லாஜிக் ஓட்டைகளும் திரைக்கதையில் சில தொய்வு இருந்தாலும் படத்தின் நகைச்சுவை காட்சிகள் அதை சரிக்கட்டிவிடுகிறது.

விஜய் ஆண்டனியின் இசை ரசிக்கும்படியுள்ளது. பாடல்கள் அனைத்தும் தாளம் போட வைக்கிறது.

ரிச்சர் எம் நாதனின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.

ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம் தயாரித்துள்ளது”,

jothika lakshu

Recent Posts

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

4 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

4 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

4 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

4 hours ago

பைசன் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!

பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…

5 hours ago

அண்ணாமலை கேட்ட கேள்வி, முத்து மீது பழி சொல்லும் அருண் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவை பற்றி அனைவரும் பெருமையாக பேச அருண் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

5 hours ago