Latest Tamil cinema News
ஆன்மீகம்

சிவபெருமானிடம் இருந்து அனைத்து செல்வங்களையும் பெற இந்த மலர்களை வைத்து வழிபடுங்கள்!

🕉 இந்து மதத்தில் பொதுவாக சிவபெருமான் லிங்க வடிவத்தில் வழிபடப்படுகிறார். சிவலிங்க வழிபாடு சிவன் மற்றும் சக்தி-பார்வதியின் ஒன்றிணைப்பைக் குறிக்கிறது.

சிவபெருமானிற்கு வைத்து வழிபடும் ஒவ்வொரு மலருக்கும் ஒரு அர்த்தமும், பலனும் உள்ளது.

🕉 வில்வ இலைகள்: வில்வ இலைகள் இல்லாமல் செய்யப்படும் சிவ வழிபாடு என்பது பயனற்றது என்று சிவபுராணம் கூறுகிறது. பிரம்மாவால் உருவாக்கப்பட்ட இந்த மரத்தை லட்சுமியின் வலது கரத்தில் இருந்து உருவாக்கியதாக கூறப்படுகிறது.

🕉 தாமரை: சிவபெருமானிடம் இருந்து செல்வத்தை பெற விரும்புபவர்கள் தாமரை மலரை வைத்து வழிபடலாம்.

🕉 அரளி பூ: சிவபெருமானுக்கு அரளி பூவை பக்தியுடன் வைத்து வழிபடுட்டால் நமது மனதில் இருக்கும் வேண்டுதல்கள் நிறைவேறும். குழந்தை செல்வம் இல்லாதவர்கள் இந்த பூவை வைத்து சிவனை வழிபடலாம்.

🕉 ரோஜா: எட்டு ரோஜா மலர்களை கொண்டு சிவபெருமானை வழிபடுபவர்கள் கைலாச பதவியை பெறுவார்கள்.

🕉 ஊமத்தம் மலர்: ஊமத்தம் மலர் பேய்களின் ஊதுகுழல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மலர்களை வைத்து வழிபடுவது சிவபெருமானின் ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும்.

தும்பை பூ: தும்பை பூவை வைத்து சிவபெருமானை வழிபடுவது உங்களுக்கு சிறப்பான பலன்களை வழங்கும்.

🕉 செம்பருத்தி பூ: ஆயிரம் செம்பருத்தி மலர்களால் ஆன மாலையை சிவபெருமானுக்கு வைத்து வழிபட்டால் அவர்கள் மரணத்திற்கு பிறகு கைலாயத்தில் வாழும் வாய்ப்பை பெறுவார்கள் என்று புராணம் கூறுகிறது.

🕉 எருக்கை: உடல்ரீதியாக மட்டுமின்றி மனரீதியாக செய்த பாவங்களும் இந்த மலரைக் கொண்டு சிவபெருமானை வழிபடும்போது மன்னிக்கப்படும்.

Related posts

நாளை ஆடி பதினெட்டாம் பெருக்கு – இவற்றை மறக்காமல் செய்து அற்புதமான பலன் பெறுங்கள்

user

விநாயகருக்கு 21 வகையான இலைகளால் அர்ச்சனை செய்வதால் ஏற்படும் நன்மைகள்

user

மகம் நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெற இவற்றை செய்யுங்கள்

user

Leave a Comment