பார்வை இல்லாதவர்களுக்கும் பிரத்தியேக டீசரை உருவாக்கிய மாயோன் படக்குழு – மிரள வைக்கும் வீடியோ!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிபிராஜ். இவரது நடிப்பில் டபுள் மீனிங் ஃப்ரொடக்சன் நிறுவனத்தின் சார்பாக அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள திரைப்படம் தான் மாயோன். இந்த படத்தினை என் கிஷோர் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் டத்தோ ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள், ஹரிஷ் பேரடி, அராஷ் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை ஞானி இளையராஜா இசையமைக்க ராம்பிரசாத் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. படத்தின் டீசர் மிரட்டலாக இருப்பதாக டீசரை பார்த்தவர்கள் கமெண்ட் செய்து பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் மாயோன் படக்குழு புது முயற்சியாக பார்வையற்றவர்களுக்காக பின்னணி குரலுடன் பிரத்தியேக டீஸர் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

அதேசமயம் மாயோன் படக்குழுவினரின் புதிய முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்தப் படத்தின் டீசரை உதயநிதி வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Maayon Official Teaser :

Maayon – Official Teaser (with Tamil Audio Description) :

Suresh

Recent Posts

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

9 hours ago

சன் டிவியில் மூன்று சீரியல்கள் இணையும் மெகா சங்கமம்..!

சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…

11 hours ago

சுந்தரவல்லி வளையில் சிக்கிய சூர்யா, நந்தினிக்கு விழுந்த அறை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

11 hours ago

தளபதி விஜய்க்கு திரிஷா சொன்ன வாழ்த்து..!

விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…

18 hours ago

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஃபைனலிஸ்ட் யார் தெரியுமா?முழு விவரம் இதோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…

18 hours ago

மதராசி : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

18 hours ago