maareesan movie review
கைதியான ஃபஹத் ஃபாசில் சிறையில் இருந்து விடுதையாகி சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுப்பட்டு வருகிறார். அப்பொழுது திருடுவதற்காக ஒரு வீட்டிற்கு செல்லும்போது அந்த வீட்டில் வடிவேலு சங்கிளியால் கட்டப்பட்டு இருக்கிறார். வடிவேலுக்கு நியாபக மறதி நோய் இருப்பது ஃபஹத் ஃபாசிலுக்கு தெரிய வருகிறது. தன்னை இங்கு இருந்து விடுவித்தால் உனக்கு பணம் தருகிறேன் என ஃபஹத் ஃபாசிலிடம் வடிவேலு கூறுகிறார். அங்கு இருந்து விடுவித்து ஃபஹத் ஃபாசில் வடிவேலுவை அழைத்து செல்கிறார். இச்சூழ்நிலையில் வடிவேலு வங்கியில் 25 லட்ச ருபாய் பணம் இருக்கிறது தெரிய வருகிறது. இதனை திருட ஃபஹத் திட்டமிடுகிறார். இதனால் அவருடன் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். அப்பயணத்தில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடக்கிறது. இதற்கு அடுத்து என்ன ஆனது? அந்த எதிர்பாராத விஷயங்கள் என்ன? ஃபஹத் ஃபாசில் பணத்தை திருடினாரா? வடிவேலுவின் நிலை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
திருடனாக நடித்து இருக்கும் ஃபஹத் ஃபாசில் அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவை கலந்த குறும்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வடிவேலு அவரது அனுபவ நடிப்பை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் அதிகம் ஸ்கோர் செய்துள்ளார். கோவை சரளா,விவேக் பிரசன்னா, சிதாரா, தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா,ஹரிதா, டெலிபோன் ராஜா ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்துள்ளனர்.
நியாபக மறதி நோயாளியும் அதனை பயன்படுத்த நினைக்கும் திருடனுக்கும் உள்ள பயணத்தை மையமாக வைத்து கதை மற்றும் திரைக்கதையை வி.கிருஷ்ண மூர்த்தி எழுதியுள்ளார். அதன் சுவாரசியம் குறையாமல் இயக்கியுள்ளார் சுதீஷ் ஷங்கர். படத்தின் முதல் பாதி கொஞ்சம் மெதுவாக சென்றாலும் அதனை இரண்டாம் பாதியில் ஈடுக்கட்டியுள்ளார். படத்தின் நேரளவை குறைத்து இருந்தால் திரைப்படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
கலைசெல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு அவர்களுடன் இணைந்து பயணம் செய்ய உதவியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை கதையோட்டத்திற்கு உதவி இருக்கிறது.
Super Good films தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
மாப்ள சம்பா அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா புதிய…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு…