உடல் எடை குறையவும், அதிகரிக்காமல் இருக்கவும் உண்ணும் உணவில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துவது அவசியமோ அதே போல உடல் உழைப்பிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்துவது என்பது முக்கியமானது.
தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சிக்கு என நேரம் ஒதுக்க வேண்டும். அது ஜிம் போன்ற உடற்பயிற்சியோ அல்லது யோகா, நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, ஜாக்கிங் போன்றவற்றை செய்ய வேண்டும். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது.
அதிக அளவிலான தண்ணீர் குடிக்கும் போது நம் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். இதனால், உடல் எடை குறைய வாய்ப்புகள் அதிகரிப்பதோடு நம் உடலுக்கும் அதிக நீர் கிடைத்து உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக இயங்க வைக்கும்.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சையோ அல்லது சீரகமோ சேர்த்த் கொதிக்க வைத்து அருந்தலாம். அல்லது தேன் சேர்த்து கொள்ளலாம். இல்லையெனில் இரவு முழுக்க சீரகத்தையோ வெந்தயத்தையோ நீரில் ஊறவைத்து அந்த நீரை காலையில் குடிக்கலாம். இது நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி உடல் எடை குறைய உதவும்.
சர்க்கரை மற்றும் இனிப்பு வகைகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி இனிப்பு சாப்பிடுவதை தவிர்ப்பது உடல் எடை அதிகரிப்பில் மட்டுமல்லாமல் வேறு சில நோய்கள் வருவதையும் தவிர்க்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
உடல் எடை குறைய உடற்பயிற்சிக்கு அடுத்து நாம் கவனம் செலுத்த வேண்டியது நிச்சயம் உணவில் தான். எண்ணெய்யில் பொரித்த உணவுகள் ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் கலோரி அதிகம் உள்ள உணவு வகைகள், மசாலா உணவு வகைகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிக அளவிலான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…