மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘ஜி ஸ்குவாட்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக ‘பைட் கிளப்’ என்ற திரைப்படத்தை வெளியிடுகிறார். இப்படம் டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான புரோமோஷன் பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பெயரில் பேஸ்புக் தளத்தில் ஆபாச வீடியோ பரவியது. இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப்பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவத:-
நான் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருக்கிறேன். வேறெந்த சமூக வலைதளத்தில் இல்லை. வேறு தளங்களில் என் பெயரில் கணக்குகள் இருந்தால் அதை பொருட்படுத்த வேண்டாம். அன் பாலோ செய்து விடவும் என பதிவிட்டுள்ளார்.
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…