lokesh-kanagaraj-case details
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘லியோ’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. இதையடுத்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை நடத்த உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ராஜூ முருகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், ‘லியோ’ திரைப்படத்தில் ஆயுத கலாச்சாரமும், மதம் தொடர்பான சின்னங்களை பயன்படுத்தி முரண்பாடான கருத்துகளையும், போதை பொருள் பயன்பாடு, பெண்கள் குழந்தைகளை கொல்ல வேண்டும் என்ற கருத்தை விதித்தல் உள்ளிட்ட காட்சிகளை லோகேஷ் கனகராஜ் காட்சிப்படுத்தி உள்ளார்.
இதுமட்டுமின்றி கலவரம், சட்டவிரோத செயல்கள், போதை பொருள் வியாபாரம், துப்பாக்கிகளை பயன்படுத்துதல், காவல்துறை உதவி உடன் எல்லா குற்றங்களையும் செய்ய முடியும் என்ற சமூகவிரோத கருத்துகளை ‘லியோ’ படத்தில் காட்சிப்படுத்தி உள்ளார். இது போன்ற படங்களை தணிக்கை குழு முறையாக அய்வு செய்ய வேண்டும். லியோ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்படி வழக்குப்பதிவு செய்து ‘லியோ’படத்தை முழுமையாக தடை விதிக்க வேண்டும் என கோரி இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது லியோ படத்தில் எத்தனை வன்முறை காட்சிகள் இடம்பெற்றுள்ளன? இது தொடர்பாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விரிவான பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.”,
Yaar Yaarival Video Song | Ram In Leela | Rio Raj | Vartika | Ankit…
Rippipee Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Mysskin | Sam CS |…
Sing Geetham Tamil Trailer | Singeetham Srinivasa Rao | Devi Sri Prasad | Nag Ashwin…
Maaya Kanavo Video Song | Nooru Sami | Vijay Antony | Swasika | Balaji Sriram…
இயக்குநர் பாலா இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியான ‘அவன் இவன்’ திரைப்படம், விஷால் மற்றும் ஆர்யாவின் வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களிடம்…
தமிழ் சினிமாவின் தனித்துவமான படைப்பாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி வரும் திரைப்படம்…