lgm-movie-audio-launch-yogi-babu-speech
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் நடிகர் யோகி பாபு தற்போது பிரபல இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.தோனி அவர்களின் தயாரிப்பு நிறுவனத்தில் முதல் படமாக உருவாகி இருக்கும் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ என்னும் திரைப்படத்திலும் நகைச்சுவை நடிகராக நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள், பாடல்கள், டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து இருந்தது.
இந்த நிலையில் தீவிரமான கிரிக்கெட் பிரியரான யோகி பாபு நேற்றைய தினம் நடைபெற்ற LGM படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசி உள்ள சுவாரசியமான தகவல்கள் வைரலாகி வருகிறது. அதில் அவர், LGM படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி என்னிடம் கால்சீட் கேட்டிருந்தார். அப்போது நான் மிகவும் யோசனையுடன் இருந்தேன். அதற்கு அவர் என்னிடம் டோனியிடம் இருந்து பேட் வாங்கி தருவதாக் கூறினார். அதற்காகவே இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கலகலப்பாக பேசியுள்ளார். அதன் பிறகு லெட்ஸ் கேட் மேரிட் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அளித்ததற்கு அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார். இவரது இந்த சுவாரசியமான தகவல் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக்…
நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் காந்தாரா.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
Bison Kaalamaadan Trailer | Dhruv, Anupama Parameswaran | Mari Selvaraj | Nivas K Prasanna
Gen Z Romeo Video Song | Kambi Katna Kathai | Natty Natraj, Singampuli, Sreerranjini, Shalini
I'm The Guy Lyrical Video | Aaryan | Vishnu Vishal & Shraddha Srinath | Ghibran,…