ரத்தான லியோ இசை வெளியீட்டு விழா.. போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘லியோ’ திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா 30-ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் திடீரென ரத்தானது. இதைத்தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம், “நிகழ்ச்சியை காண வரும் ரசிகர்களின் பாஸ் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன. எனவே பாதுகாப்பு கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில், ‘லியோ’ இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், “30-ஆம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த ‘லியோ’ இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அதிக பாஸ்கள் கோரிக்கை வந்ததால் பாதுகாப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சிரமத்திற்கு வருந்துகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

leo movie audio-launch-letter-leaked
jothika lakshu

Recent Posts

ஜனநாயகன் வெளியீடு எப்போது? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

13 hours ago

அரசன் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

13 hours ago

அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. என்ன விஷயம் தெரியுமா?

அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…

14 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

16 hours ago

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

22 hours ago

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

2 days ago