Legend Saravanan meets Rajini
தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது சினிமாவில் நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர். இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர்.
இப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி மணாலியில் படமாக்கப்பட்டது. அதன் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் லெஜண்ட் சரவணன் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பும், லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்து வருகிறதாம். அப்போது இருவரும் சந்தித்துள்ளனர். அந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq