Latest Updates About Vijay 66 Movie
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி 66 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வம்சி இயக்க தில் ராஜு தயாரிக்கிறார்.
படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் விஜய்க்கு அண்ணன்களாக நடிக்கின்றனர். முழுக்க முழுக்க குடும்பப்பாங்கான படமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளே இருக்காது என சொல்லப்படுகிறது. 90-களில் பார்த்த விஜய் இந்த படத்தில் பார்க்கலாம். இது அவருடைய நடிப்புக்கு தீனி போடும் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
அதன் காரணமாகவே தற்போது வரை இந்த படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் யார் என்பதை படக்குழு அறிவிக்காமல் இருந்து வருகிறது என தகவல் கிடைத்துள்ளது.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…