Latest Tamil cinema News
மருத்துவம்

தாமதமாக தூங்கி தாமதமாக எழுந்தால் என்ன ஆகும்? தெரிந்து கொள்ளலாமா?

▪ இன்றைய சூழலில் பலரும் நேரத்திற்கு உறங்குவதில்லை. தாமதமாக படுக்கைக்கு செல்லும் பழக்கத்தால் அன்றாட வாழ்வியலில் சோர்வு,

எரிச்சல் போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. அதேவேளை பகல் நேர உறக்கம் மனநல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.

* தாமதமாக தூங்கி தாமதமாக எழுபவர்கள் நேரத்திற்கு உறங்க நினைத்தாலும் உடல் ஒத்துழைப்பது இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இவர்கள் சில வாழ்வியல் மாற்றங்களை செய்து கொள்ளலாம் . அவைகள் பின்வருமாறு

1) வழக்கமாக எழும் நேரத்தை விட இரண்டு மூன்று மணி நேரம் முன்பே எழுந்து வீட்டுக்கு வெளியே சென்று, காலை நேர சூரிய ஒளி எவ்வளவு நேரம் உடலில் படும்படி நிற்க முடியுமோ அவ்வளவு நேரம் நிற்க வேண்டும்.

2) வழக்கமாக படுக்கைக்கு செல்லும் நேரத்தை விட இரண்டு மூன்று மணி நேரம் முன்பே படுத்துவிட வேண்டும். படுக்கைக்கு செல்வதற்கு முன் சிறிது சிறிதாக வெளிச்சத்தை குறைத்துக் கொள்ள வேண்டும்.

3) இந்தப் பழக்கங்களை தினமும் இரவு மற்றும் காலை நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டும். வார இறுதியிலும் தவறவிடக் கூடாது.

4) சரியான நேரத்தில் காலை உணவையும் மதிய உணவையும் ஏழு மணிக்குள் இரவு உணவையும் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* இந்தப் பழக்கங்களை மூன்று வாரங்கள் தொடர்ந்து கடைப்பிடித்தாலே உடல் மற்றும் மன நலன்களில் நல்ல மாற்றத்தை அடையலாம்.

இதனால் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதுடன் உறக்கமின்மை மற்றும் சரியான நேரத்தில் தூங்காததால் ஏற்படும் அபாயகரமான பிரச்சனைகளில் இருந்தும் தப்பிக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Related posts

கடும் உழைப்பினால் உருவான உடல் வலி தீர வேண்டுமா?. இதோ சில டிப்ஸ்!

user

மூக்கிரட்டை மூலிகையினால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா!.

user

காலையில் செய்யக்கூடியவை செய்யக்கூடாதவைகளைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

user

Leave a Comment