Kushboo about Valimai Movie
வலிமை படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அப்படம் குறித்து நடிகை குஷ்பு புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
அஜித், ஹூமா குரேஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் இன்று உலகமெங்கும் வெளியாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் ரிலீசையொட்டி ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், மேளதாளத்துடன் நடனம் ஆடியும் கட்-அவுட் வைத்தும் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடினர். இப்படத்தை பார்த்த திரையுலகினர் பலர் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வலிமை படத்தை பார்த்த நடிகை குஷ்பூ படத்தையும் அஜித்தையும் பாராட்டியுள்ளார். இதனை அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “தல உனக்கு மட்டும்தான் இப்படி கூட்டம் வருது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…