Latest Tamil cinema News
மருத்துவம்

உங்கள் நெற்றியில் குங்குமம் வைத்ததால் ஏற்படும் தழும்பு, கருமை, சுருக்கங்கள் மறைய சில டிப்ஸ்!

• குங்குமம் வைத்ததால் நெற்றியில் கறுப்புத் தழும்பு ஏற்பட்டால், வில்வமரக் கட்டையை சந்தனக் கல்லில் உரைத்து தழும்பின் மீது பூசி வர தழும்பு மறையும்.

• இளநீர் மற்றும் சந்தன பவுடரை சரிபாதியாக எடுத்து நெற்றியில் தடவினால், நெற்றியில் உள்ள கருமை அகன்றுவிடும். இது ஒரு சிறந்த முறையாகும். இதனை வாரத்தில் 3 அல்லது 4 முறை செய்யலாம்.

• பப்பாளி இறந்த செல்களை நீக்க மிகவும் சிறந்தது. தோலுக்கு நிறத்தை தரக்கூடியது. பப்பாளி பேஸ்ட்டை நெற்றியில் தடவி காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.

• மோர் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து, நெற்றியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்.

• வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன், தயிர் ஆகியவற்றை கலந்து நெற்றியில் பேக் போல் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் வாரம் 2- 3 முறை செய்தால் விரைவில் நெற்றியில் ஏற்பட்டுள்ள சுருக்கங்கள் மறைந்து, அழகான பிறை போன்ற நெற்றியை பெறுவீர்கள்.

Related posts

மூக்கிரட்டை மூலிகையினால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா!.

user

பசியின்மை காரணமாக அவதிப்படுகிறீர்களா? ஜீரண சக்தி அதிகரிக்க சில டிப்ஸ் !.

user

நெய் உடலுக்கு நல்லதா? பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தெரிந்துகொள்வோமா!.

user

Leave a Comment