keerthy suresh to play sister role
சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற படம் ‘வேதாளம்’. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார்.
இயக்குனர் மெஹர் ரமேஷ் இப்படத்தை இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த ‘பில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார். வேதாளம் படத்தில் அஜித்தை அடுத்து மிக முக்கியமான கதாபாத்திரம் என்றால், அது லட்சுமி மேனன் கதாபாத்திரம் தான். தெலுங்கில் இந்த கதாபாத்திரத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இந்நிலையில், வேதாளம் ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம்வரும் கீர்த்தி சுரேஷ், தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…