‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரின் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார்.
நிறைய கமர்சியல் படங்களில் நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் பெற்றுக்கொடுத்தது. இப்படத்திற்காக அவர் தேசிய விருதும் பெற்றார். அடுத்ததாக ரஜினி-சிவா கூட்டணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதுதவிர 3 தெலுங்கு படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், தனக்கு வந்த காதல் கடிதம் குறித்து கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது:
நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது என் தீவிர ரசிகர் ஒருவர் எனக்கு கிப்ட் கொடுத்தார். அந்த கிப்டை திறந்து பார்த்தபோது, அதில் என் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் மற்றும் ஒரு காதல் கடிதம் இருந்தது.
என் மீது கொண்ட காதலை அவர் அந்த கடிதத்தில் வெளிப்படுத்தியதுடன், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியிருந்தார். நான் கல்லூரியில் படித்தபோது ஒருவர் கூட எனக்கு காதல் கடிதம் கொடுத்ததில்லை. அதனால் அந்த ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை தூக்கிப் போட மனமின்றி பத்திரமாக வைத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…