“மங்கை” படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்:கயல் ஆனந்தி

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கி இருக்கும் புதிய படம் மங்கை. இதில் ‘கயல்’ ஆனந்தி, துஷி, பிக் பாஸ் புகழ் சிவின், ராம்ஸ், ஆதித்யா கதிர், கவிதா பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘கிடா’ படத்திற்கு இசையமைத்த தீசன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரைலரை நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் ஆர்யா, மற்றும் இயக்குநர் பா ரஞ்சித் ஆகியோர் வெளியிட்டனர். டிரைலர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கயல் ஆனந்தி, \”மங்கை படத்தின் டிரைலர் வெளியீட்டில் நான் மிகவும் சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியோடும் பரவசத்துடனும் இருக்கிறேன்.

குபேந்திரன் சாரிடம் கதை பற்றி எதுவும் தெரியாமல் தான் கேட்டேன். கதையை கேட்டதும் கண்டிப்பாக இப்படத்தை தவறவிடக் கூடாது என்று நினைத்தேன்.\”\”இப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏனென்றால் சில படங்கள் தான் நடிகர் நடிகைகளுக்கு பெயர் வாங்கிக் கொடுக்கும். இது அந்த மாதிரியான படம். இயக்குநர் எப்போதும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து யோசிப்பார், தயாரிப்பாளர் இயக்குநர் தரப்பில் இருந்து யோசிப்பார். இருவருக்குமான புரிதல் பார்க்கும் போதே அழகாக இருக்கும்,\” என்று தெரிவித்தார்.

kayal-anandhi-about-mangai-movie
jothika lakshu

Recent Posts

பாரதிராஜா மறைந்து 17 நாட்களில் காலமான பாக்யராஜ்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…

1 minute ago

நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…

2 hours ago

Nightu Nila Lyric Video

Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses

22 hours ago

The India Story Official Film Teaser

The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…

22 hours ago

ஆர்யாவின் ‘அனந்தன் காடு’ – திரை விமர்சனம்

கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…

1 day ago

ப்ராமிஸ் – திரை விமர்சனம்

கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…

1 day ago