Latest Tamil cinema News
மருத்துவம்

காயகல்பம் மூலிகை, அதன் பயன்கள் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா?

• காயகற்பம் என்பது பல்லாயிரம் ஆண்டுக்காலம் உடலினை வாழ வைக்கும் முறையாகும்

• இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும், மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும். முடி நரைக்காது. தோல் சுருங்காது. உடல் மூப்பு அடையாது. மலைகளில் எளிதாக ஏறலாம். மூச்சு இரைக்காது.

• இன்றைய விஞ்ஞான புரிதலின்படி செல் அழிவை மீட்டெடுக்கும் பணியைச் செய்யக்கூடிய தாவர நுண்கூறுகள் அதில் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பொருள்.

• இஞ்சித் தேனூறல், கற்றாழை, வேம்பு, கரிசாலை, பொன்னாங்கண்ணிக்கீரை, மணத்தக்காளி, மஞ்சள் பூசணி இவற்றைத்தான் நோயற்ற வாழ்வுக்கான கற்ப மூலிகைகளாக சித்தர் சொல்கிறார்.

• பயணம் செய்துவிட்டு வந்து காலில் நீர் கோத்திருப்பவருக்கு சுரைக்காய் கூட்டு.

• தூக்கமில்லாமல் கண்விழித்துப் பணியாற்றியவருக்கு கண் எரிச்சலுடன் உடல் சூடும் அதிகமாகியிருக்கும்.. அவருக்கு கீழாநெல்லியும் மோரும்.

• மந்தபுத்தி போக சிறுகீரையில் மிளகு சேர்த்துக் கூட்டு.

• சளி பிடித்தவருக்குத் தூதுவளை ரசம்; மெலிந்திருப்பவருக்கு தேற்றான்கொட்டைப் பொடி; மேகவெட்டைக்கு ஓரிதழ் தாமரை… எனக் காயகல்ப மருந்துப் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.

• காலையில் இஞ்சி, கடும் பகலில் சுக்கு, மாலையில் கடுக்காய் இவையும் காயகற்ப மூலிகை தான்.

Related posts

ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், மூலிகைகளின் நன்மை மகத்துவத்தை பார்ப்போமா?

user

மூட்டுத் தேய்மானத்திற்கான இயற்கை மருத்துவத்தை பார்ப்போமா?

user

செல்களுக்கும் உணவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டா? தெரிந்து கொள்ளலாமா!

user