Latest Tamil cinema News
மருத்துவம்

கற்றாழையை ஏழு முறை கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். ஏன்?

* உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் சோற்றுக்கற்றாழை. மனித குலத்துக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 அமினோஅமிலங்கள் இதில் உள்ளன.

* நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும். அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும்.

* கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும்.

* பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும்.

* இல்லாவிட்டால் அது வயிற்றின் உள்ளே செல்லும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் உண்டாகும். மேலும் ஏழுமுறை கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.

Related posts

புகை பிடிப்பதனால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பை சரி செய்யும், சின்ன வெங்காயத்தின் நன்மைகளைப் பார்ப்போமா?

user

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்களின் உறங்கும் நிலையில் ஏற்படும் மாற்றங்களை தெரிந்து கொள்ளலாமா?

user

உங்கள் உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் தடிப்பினால் அவதிப்படுபவரா நீங்கள்? அரிப்பு, தடிப்பு குறைய, குணமாக சில வைத்திய முறைகள்!

user

Leave a Comment