காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் திரை விமர்சனம்

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் தாய், தந்தையை இழந்த சித்தி இத்னானி, தன் அண்ணனின் மூன்று பெண் குழந்தைகளை தனியாக வளர்த்து வருகிறார். இவரை திருமணம் செய்து சொத்துக்களை அபகரிக்க அவரது முறைமாமன்கள் முயற்சி செய்கின்றனர்.இதனிடையே ஜெயிலில் இருக்கும் ஆர்யாவை, சித்தி இத்னானி நேரில் சந்திக்க முயற்சி செய்கிறார். சில காரணங்களால் ஆர்யாவை, சித்தி இத்னானியால் சந்திக்க முடியவில்லை. தன்னை சந்திக்க வந்த பெண் யார் என்று ஆர்யா தெரிந்து கொள்ள முயற்சிக்கிறார். அதன்பின்னர் சித்தி இத்னானியை சந்திக்க, அங்கு இவருக்கும் சிலருக்கும் மோதல் வெடிக்கிறது.

இறுதியில் என்ன ஆனது? ஆர்யாவுக்கும் சித்தி இத்னானிக்கும் என்ன உறவு? ஆர்யாவின் பின்புலம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. கிராமத்து கதாநாயகனாக நடித்திருக்கும் ஆர்யா கதாப்பாத்திரத்திற்கு பொருந்தியுள்ளார். ஆனால் அவர் பேசும் வசன உச்சரிப்பு சில இடங்களில் பொருந்தவில்லை. ஆக்‌ஷன் காட்சிகளில் ஆர்யாவின் உழைப்பு தெரிகிறது. சித்தி இத்னானியை சுற்றியே கதை நகர்கிறது. கிராமத்து பெண்ணாக வரும் சித்தி அழகாக நடித்துள்ளார். படத்திற்கு தேவையான விஷயங்களை அழகாக கொடுத்து கவனம் பெறுகிறார்.

படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபு, அவரின் முதிர்ச்சியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். ஆடுகளம் நரேன் மற்றும் தமிழ் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தம். பாக்கியராஜ், சிங்கம் புலி, தீபா, விஜி சந்திரசேகர், ரேணுகா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். வழக்கமான கதையை எடுத்துக்கொண்டு அதனை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் முத்தையா. முதல் பாதியில் கதைக்கு தேவையானதை தாண்டி வரும் சண்டை காட்சிகள், பில்டப்புகளை தவிர்த்திருக்கலாம்.

முதல் பாதியில் திரைக்கதை மெதுவாக நகர்கிறது. இரண்டாம் பாதியில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் இயக்குனர். ஆர்யாவின் பின்புலத்தை விளக்காமல் சித்தி இத்னானியின் பாதுகாவலர் போன்று பின்னால் சுற்ற வைத்திருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது. பிளாஷ் பேக் காட்சிகள் சிறப்பு. ஜிவி பிரகாஷின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம். வேல்ராஜின் ஒளிப்பதிவு கதைக்களத்திற்கு அழைத்து செல்கிறது. மொத்தத்தில் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் – பழைய பாணி

kathar-basha-endra-muthuramalingam movie review
jothika lakshu

Recent Posts

ரவி கேட்ட கேள்வி, அதிர்ச்சியின் குடும்பத்தினர், வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

முத்து மீது பழி விழ, உச்சகட்ட கோபத்தில் ரவி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…

10 hours ago

தனுஷ் 55 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த படக்குழு..!

தனுஷ் 55 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

10 hours ago

இன்ஸ்டாகிராமில் போட்ட வீடியோவால் சீரியல் நடிகை அர்ச்சனாவுக்கு வந்த பிரச்சனை..!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா…

14 hours ago

விஜயா கேட்ட கேள்வி, சுருதி கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும்…

14 hours ago

ஆனந்தி சொன்ன வார்த்தை, மகேஷ் விட்ட சவால், வெளியான மூன்று முடிச்சு, சிங்க பெண்ணே ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

14 hours ago

பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ படம் ஓடிடி.யில் ரிலீஸ்..

பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…

1 day ago